காலையில் எழுந்ததும் காபி, டீ குடிக்கும் முன்னர் பூஜை அறையில் சுவாமிக்கு செய்ய வேண்டியது என்ன தெரியுமா? பாலை இப்படி செய்தால் தெய்வ கடாச்சம் பெருகுமாம்!

pooja-room-milk
- Advertisement -

காலையில் எழுந்ததும் முதல் வேலையாக நாம் செய்வது பல்லைத் துலக்கிவிட்டு காபி, டீயை குடிப்பது தான். காபி, டீ இல்லை என்றால் அன்றைய நாளே நன்றாக இல்லாதது போல் ஒரு உணர்வு ஏற்படுவது உண்டு. அதற்காக எழுந்ததும் பிரிட்ஜை திறந்து பாலை தான் நாம் தேடுகிறோம். பாலை எடுத்து அடுப்பில் வைத்து காய்ச்சி விட்டு தான் பல்லைத் தேய்க்க போகிறோம். அதற்கு முன்னரே நாம் பூஜை அறையில் செய்ய வேண்டிய ஒரு முக்கிய விஷயம் உண்டு. இப்படி செய்வதால் தெய்வ கடாக்ஷம் நமக்கு எப்போதும் கிடைத்துக் கொண்டே இருக்கும் என்கிறது சாஸ்திரம்! அது என்ன? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

gomatha-poojai

கோமாதா வழிபாடு செய்வது எல்லா தெய்வங்களையும் வணங்குவதற்கு சமமாகும் என்பது நாம் அறிந்த ஒன்று தான். கோமாதாவிற்கு உடல் முழுவதும் இறைவனுடைய அம்சம் உண்டு. தலை முதல் வால் வரை எல்லா இடங்களிலும் இறைவன் வியாபித்து இருக்கின்றனர். அத்தகைய மகத்துவம் வாய்ந்த பசுவில் இருந்து கிடைக்கும் பாலை நாம் முதலில் பயன்படுத்தாமல், இறைவனுக்கு நைவேத்தியம் வைப்பது அருமையான பலன்களை கொடுக்கும்.

- Advertisement -

காலையில் எழுந்ததும் முதல் வேலையாக பூமியைத் தொட்டு பூமா தேவியை வணங்கிக் கொள்ளுங்கள். அதன் பிறகு நீங்கள் ஃப்ரிட்ஜை திறந்து பாலை எடுத்து பச்சை பசும் பாலை இறைவனுக்கு என்று ஒதுக்கி வைத்த ஒரு டம்ளரில் ஊற்றி அல்லது பாத்திரத்தில் ஊற்றி பூஜை அறையில் கொண்டு சென்று வைத்து விடுங்கள். இதற்கு நீங்கள் குளித்திருக்க வேண்டிய அவசியமில்லை.

milk

பச்சை பசும் பாலை காலையில் எழுந்ததும் முதல் வேலையாக இறைவனுக்கு நைவேத்தியம் படைத்து வழிபடுவது என்பது மிகுந்த பலன்களை கொடுக்க வல்லது. இவ்வுலகில் மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் தாய்ப்பாலை விட, பசும் பாலை குடித்து தான் அதிகம் வளர்கின்றனர். இத்தனை மகத்துவமான பச்சை பாலை முதல் நைவேத்தியமாக இறைவனுக்கு படைத்து விட்டு பின்னர் நாம் அன்றாட வேலைகளை பார்த்து வரலாம்.

- Advertisement -

இதனால் இறைவனுக்கு மன திருப்தி ஏற்பட்டு அதனை மனமுவந்து ஏற்றுக் கொள்வார். நம் வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் முதல் உணவாக எடுக்கும் பாலை, இறைவனுக்கு முதல் நைவேத்தியமாக படைப்பது தெய்வ கடாட்சத்தை அதிகரிக்க செய்யும். பசி, பிணி இன்றி நீண்ட நாள் ஆசியை கொடுக்கக் கூடிய இந்த அற்புத பரிகாரத்தை அனைவரும் கடைபிடிப்பது உத்தமம்.

donkey milk

பூஜைக்கு என்று எப்பொழுதும் சில பாத்திரங்களை ஒதுக்கி வைத்து விட வேண்டும். நைவேத்தியம் படைக்க பித்தளை, செம்பு பாத்திரங்களைப் பயன்படுத்தலாம். நாம் எந்த அளவிற்கு இறைவனிடத்தில் ஒன்றி இருக்கிறோமோ! அந்த அளவிற்கு இறைவனும் நமக்கு நன்மைகளை வாரி வழங்குவார். அவரையும் நம் குடும்பத்தில் இருக்கும் ஒரு அங்கத்தினராக நினைத்து, ஒவ்வொரு வேளையும் நைவேத்தியம் படைத்து விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் நமக்கு கிடைக்க வேண்டிய எல்லா பாக்கியங்களும் கிடைக்கும். சிலர் ஏதாவது துன்பம் வந்தால் மட்டுமே இறைவனை நினைப்பார்கள்! அப்படி அல்லாமல் இறைவனை உங்கள் நண்பராக, உங்கள் உறவினராக நினைத்து நீங்கள் இவ்வாறு செய்து வந்தால் அதில் கிடைக்கும் பேரின்பமே வேறு, நீங்களும் அதனை அனுபவித்து பாருங்கள்!

- Advertisement -