வெறும் 2 நிமிடத்தில், 2 ரூபாய் செலவில் பாத வெடிப்பை சரி செய்ய இதைவிட வேற ஐடியா இந்த உலகத்திலேயே இருக்க முடியாது.

foot
- Advertisement -

பார்ப்பதற்கு நம்முடைய முகம் மட்டும் தான் அழகாக இருக்க வேண்டும் என்று பெரும்பாலும் நாம் நினைப்பதுண்டு. அப்படி கிடையாது. முழு அழகு என்றால் அது பாத அழகையும் நிச்சயமாக குறிக்கும். குறிப்பாக நாம் ஏதோ ஒரு திருமண நிகழ்ச்சிக்கு செல்ல போகின்றோம். பாதம் தெரியும் படி அழகான செருப்பு போட ஆசைப்படுறீங்க, அல்லது திருமணத்திற்கு அழகாக காலில் மருதாணி போட்டுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றோம். இப்படி எல்லாம் கால்களை அழகாக காட்ட உடனடியாக பாதவெடிப்பை நீக்க முடியுமா என்று கேட்டால் அது நிச்சயமாக முடியாத காரியம் தான். பியூட்டி பார்லருக்கு சென்று ஆயிரம் ஆயிரம் காசு கொட்டிக் கொடுத்தாலும் பெடிக்யூர் செய்து கொண்டாலும் பாத வெடிப்பு நிச்சயமாக தெரியத்தான் செய்யும்.

இந்த பாத வெடிப்பை செலவு இல்லாமல் இரண்டே நிமிடத்தில் நீக்க ஏதாவது ஐடியா இருக்கா. நிச்சயம் இருக்கு. அந்த ஐடியாவை  தான் இன்னைக்கு இந்த குறிப்பில் நாம் பார்க்க போறோம். முதலில் பாதத்தில் இருக்கும் இறந்த செல்லை நீக்க வேண்டும். ஒரு அகலமான பவுலில் வெதுவெதுப்பான சுடுதண்ணீரை ஊற்றி அதில் கல் உப்பு 1 கைப்பிடி அளவு போட்டு, எலுமிச்சை பழ சாறு பிழிந்து கொள்ள வேண்டும். ஒரு முழு எலுமிச்சை பழத்தின் சாறை அதில் பிழிந்து விட்டு உங்கள் கால்களை அந்த தண்ணீரில் வைத்து நன்றாக ஊற வையுங்கள்.

- Advertisement -

ஒரு நிமிடத்தில் இருந்து இரண்டு நிமிடம் அந்த தண்ணீரில் கால்கள் ஊறியதும் ஒரு பல் தேய்க்கும் பிரஷ் அல்லது அந்த எலுமிச்சம் பழத்தோலை வைத்துக்கூட பாதத்தின் மேல் பக்கம், முட்டி பாதம் கீழ்ப்பாக்கம் எல்லாவற்றையும் தேய்த்து நல்ல தண்ணீரில் கழுவி ஒரு துணியில் துடைத்து விடுங்கள். கொஞ்சம் ஷாம்பு போட்டு இப்படி பாதங்களை சுத்தம் செய்தால் பாதத்தில் அழுக்கு சுத்தமாக நீங்கிவிடும். இப்போது உங்களுடைய கால் பாதங்களின் இருக்கக்கூடிய தோல் தண்ணீரில் ஊறிருக்கும் அல்லவா.

ஒரு உப்பு காகிதம் எடுத்துக் கொள்ளுங்கள். கடைகளில் கேட்டால் பத்து ரூபாய்க்கு ஒரு பெரிய அட்டை கிடைக்கும். அதிலிருந்து ஒரு சிறு துண்டு கிழித்து எடுத்துக் கொண்டால் போதும். அந்த உப்பு காகிதத்தை வைத்து உங்கள் குதிகால் பாதத்தில் இருக்கும் வெடிப்பை மட்டும் லேசாக தேய்த்துக் கொடுக்க வேண்டும். இறந்த செல்கள், வெடித்திருக்கும் பாத வெடிப்பு தோல் அனைத்தும் முழுமையாக நீங்கிவிடும். ஒரு நிமிடம் லேசாக தேய்த்தால் போதும். அதிகமாக தேய்த்து தோல் பிரிந்து ரத்தம் வரும் அளவிற்கு எல்லாம் தேய்க்க கூடாது. (குதிகாலில் வெடிப்பு இருக்கக்கூடிய அந்த இடத்தில் மட்டும் தான் தேய்க்க வேண்டும். பாதம் முழுவதும் போட்டு தேய்க்காதிங்க.)

- Advertisement -

கையில் பிடித்து உப்பு காகிதத்தை வெடிப்பின் மேல் வைத்து தேய்த்தால் கிழிந்து போகிறது என்றால் ஒரு உருண்டையாக இருக்கும் பைப் அல்லது கட்டையில் இந்த உப்பு காகிதத்தை சுருட்டி ரப்பர் பேண்ட் போட்டுக்கோங்க அதன் பின்பு அதை ஒரு ஃபுட் கிளீனர் போல பயன்படுத்தி பாதங்களை தேய்த்துக் கொடுக்கும் போது உங்களுடைய பாதங்கள் உடனடியாக மிருதுவாக மாறிவிடும். பாத வெடிப்பு இருந்ததே தெரியாது.

அதன் பின்பு நீங்கள் தேய்த்து கொடுத்த இடமெல்லாம் வறட்சியாக இருப்பது போல தெரிந்தால், அந்த இடத்தில் கொஞ்சமாக தேங்காய் எண்ணெய் அல்லது வாசலின் தேய்த்து விட்டு விடுங்கள். அவ்வளவு தான் கால் பாதங்கள் அவ்வளவு அழகாக வெடிப்பெல்லாம் நீங்கி சூப்பராக மாறியிருக்கும்.

அவசரத்துக்கு இந்த குறிப்பு முயற்சி செய்து பாருங்கள். இந்த குறிப்பை பின்பற்றி முடித்ததும் மீண்டும் உடனடியாக வெடிப்பு வராது. ஆனால் உங்களுடைய உடல் நிலையை பொறுத்து மீண்டும் வெடிப்பு வருவதாக இருந்தாலும் சில நாட்கள் எடுக்கும். உங்களுக்கு குறிப்பு பிடிச்சிருந்தா தேவைப்படும்போது முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -