கடுமையான பாத வெடிப்பையும் 7 நாட்களில் மாயமாக்கக் கூடிய குறிப்பு என்ன? 10 பைசா செலவு செய்ய வேணாம், வீட்டில் இருக்கும் இந்த பொருள் போதும்!

patha-vedippu-tips
- Advertisement -

நாம் முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம், நம்முடைய பாதத்திற்கு கொடுப்பதில்லை. பாதம் தானே இதை யார் பார்க்கப் போகிறார்கள்? என்று அலட்சியமாக விட்டு விடுகிறோம். பாத பராமரிப்பு இல்லை என்றால் சிலருக்கு பாதத்தில் வெடிப்புகள் ஏற்பட்டு விடுகிறது. இது நமைச்சலையும், வலியையும் உண்டாக்கும் வகையில் இருப்பதால் ரொம்பவும் சிரமப்பட வேண்டி இருக்கும். பாத வெடிப்பு எவ்வளவு கடுமையாக இருந்தாலும், ஏழே நாட்களில் கொஞ்சம் கூட வந்த அடையாளமே தெரியாமல் மாயமாக்கக்கூடிய அற்புதமான குறிப்பு தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

நம் உடல் எடை முழுவதையும் தாங்க கூடிய இந்த கால் பாதம் எப்பொழுதும் சிறு கவனிப்புடன் இருக்க வேண்டும். வெளியில் அலைந்து திரிந்து வரும் கால்கள் அதிக அளவு சோர்வை சந்திக்கிறது. பாதங்களில் ஏற்படக்கூடிய வலி ரொம்பவும் மோசமானதாக இருக்கும். சிறிது நேரம் யாராவது காலை அமுக்கி விட்டால் நன்றாக இருக்குமே என்று பலருக்கும் தோன்றியிருக்கும். அந்த அளவிற்கு சோர்வுடன் இருக்கக்கூடிய பாதத்தை கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீரில் கல் உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிது நேரம் கால்களை வைத்திருந்தால் கால்களில் இருக்கும் அயர்ச்சி நீங்கி வலியானது கட்டுக்குள் வந்துவிடும்.

- Advertisement -

தினமும் இது போல செய்ய முடியாவிட்டாலும் வாரம் ஒரு முறையாவது உங்களுடைய பாதத்தை உப்பு கரைத்த வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிது நேரம் வைத்து எடுங்கள். இதனால் கால்களில் இருக்கும் கிருமிகள் பாத வெடிப்பை ஏற்படுத்தாமல் இருக்கும். மேலும் பாதத்தில் இருக்கும் சோர்வு நீங்கும், இதனால் வலி உண்டாவது தடுக்கப்படும். கடுமையான பாத வெடிப்பு மற்றும் பித்த வெடிப்பு போன்றவற்றை நீக்கக்கூடிய ஆற்றல் இந்த சில பொருட்களுக்கு உண்டு. அதை எப்படி தயாரிப்பது? என்பதை பார்ப்போம்.

முதலில் ஒரு மெழுகுவர்த்தியை எடுத்துக் கொள்ளுங்கள். அதிலிருந்து ஒரு ஸ்பூன் அளவுக்கு கத்தியால் சுரண்டி துகள்களை சேகரியுங்கள். மெழுகுவர்த்தி எந்த நிறத்தில் இருந்தாலும் பரவாயில்லை. இந்த மெழுகுவர்த்தி தூளுடன் ஒரு ஸ்பூன் அளவுக்கு கற்றாழை ஜெல் சேர்த்துக் கொள்ளுங்கள். கற்றாழை ஜெல்லுடன் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் மற்றும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் இரண்டையும் கலந்து விடுங்கள். பின்னர் அடுப்பில் வைத்து சூடேற்றினால் நன்கு கரைய ஆரம்பிக்கும், கரைந்து கிரீம் போல நமக்கு கிடைத்துவிடும்.

- Advertisement -

விளக்கெண்ணையில் இருக்கும் சத்துக்கள் நம்முடைய பாதத்தை மிருதுவாக வைத்திருக்க உதவும். இது கரடு முரடான பாதத்தை சாஃப்டாக மாற்றிக் காட்டும். தேங்காய் எண்ணெய் பாதத்தை பளபளப்புடன் அழுக்குகள் இல்லாமல், நோய்க்கு கிருமிகள் இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. கற்றாழை ஜெல் பாதத்தில் இருக்கும் வெடிப்புகளை மாயமாய் மறைய செய்கிறது.மெழுகில் இருக்கும் வேக்சிங் பாத வெடிப்புகளை விரைவாக போக்கக்கூடிய அற்புதமான சக்தி கொண்டுள்ளது.

இந்த அனைத்து பொருட்களையும் சேர்த்து தயாரிக்கப்பட்ட கிரீம், பாத வெடிப்புக்கு நல்ல ஒரு தீர்வாக இருக்கிறது. எனவே அதிக அளவு செலவு செய்து பாத வெடிப்பை போக்காமல் வீட்டில் இருக்கும் இந்த சாதாரண பொருட்களை பயன்படுத்தி முதலில் ட்ரை பண்ணி பாருங்க, ரொம்பவே நல்ல ரிசல்ட் கொடுக்கும். தொடர்ந்து ஏழு நாட்களுக்கு செய்து வர ஏழே நாட்களில் ஒரு அடையாளம் கூட இல்லாமல் உங்கள் பாத வெடிப்பு மாயமாய் மறையும்.

- Advertisement -