வலியோடு கூடிய முத்து முத்தான முகப்பருக்களை போக்க வீட்டில் இருக்கும் இந்த 2 பொருள் போதுமே! முகப்பரு வடுவின்றி ஓடிவிடும்.

Pimple-pattai
- Advertisement -

முகத்தில் காற்றில் பரவும் தூசு, மாசு போன்ற காரணங்களினால் அழுக்குகள் படிந்து அதன் மூலம் பாக்டீரியா கிருமிகள் உருவாகி பருக்களாக மாறுகின்றன. இந்த முகப்பருக்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சிலருக்கு கண்களுக்கு தெரியாத அளவில் சிறு சிறு பருக்களாக இருக்கும். சிலருக்கு பெரிய பெரிய முத்து முத்தான பருக்கள் வலியுடன் கூடியதாக அமைந்து இருக்கும். இப்படி வெவ்வேறு வகையான பருக்களில் முத்து முத்தாக இருக்கும் மிகப்பெரிய வலியுடன் கூடிய பருக்களை எளிதாக எப்படி நீக்கி நிவாரணம் காண்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.

முகம் முழுவதும் முத்து முத்தாக வட்ட வடிவில் ஆங்காங்கே பருக்கள் தென்படும். இதனை உடைத்து விட்டால் எல்லா இடங்களிலும் பரவி விடும் அபாயம் உண்டு. இந்த பருக்களின் உள்ளே தேவையற்ற கெட்ட ரத்தம் ஒளிந்திருக்கும். இதனை கைகளால் உடைத்து வெளியேற்றுவது கூடாது. இது அந்த நேரத்திற்கு நிவாரணத்தை கொடுக்குமே தவிர, மீண்டும் மீண்டும் பருக்கள் முகம் முழுவதும் பரவுவதற்கு காரணமாகிவிடும்.

- Advertisement -

முகத்தில் வலியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இந்த வகையான முத்து முத்தான பருக்களை எளிதாக விரட்டி அடிக்கும் சக்தி இந்த இரண்டு பொருளுக்கு உண்டு. ரொம்பவே சக்தி வாய்ந்த இந்த இரண்டு பொருட்கள் வீட்டில் எளிதாக கிடைக்கக் கூடிய பொருட்கள் தான். எல்லோருமே சமையலுக்கு இதனை அடிக்கடி பயன்படுத்துவது உண்டு. மேலும் இப்பொருட்கள் ஆன்மீக ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் பல்வேறு நலன்களை கொடுக்கக்கூடிய ஒரு பொருளாகவும் அமைந்துள்ளது. இதை வைத்து ஆரோக்கிய ரீதியாக நாம் என்ன செய்யப் போகிறோம்? அழகு ரீதியாக நாம் என்ன செய்யப் போகிறோம்?

முதலாவதாக நாம் பார்க்க இருக்கும் பொருள் ‘பட்டை’. சமையலில் வாசனைக்கு பயன்படுத்தும் இந்த பட்டை எண்ணற்ற மருத்துவ குணங்களைத் தன்னுள் கொண்டுள்ளது. பட்டையில் இருக்கும் அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடல் ஆரோக்கியத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும். பட்டையில் கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம், மாங்கனீசு, ஜிங்க் மற்றும் அயன் போன்ற எண்ணற்ற சத்துக்கள் ஒளிந்து கொண்டு இருப்பதால் இதனை நீங்கள் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நலம் தரும். அத்தகைய இந்த பட்டையை பொடித்து பவுடராக்கிக் கொள்ளுங்கள். நீங்களே லேசாக வாணலியில் வறுத்து பவுடர் ஆக்கி வைத்துக் கொள்வது நல்லது.

- Advertisement -

பின்னர் இரண்டாவதாக இதனுடன் தேன் சேர்க்க வேண்டும். தேனில் இருக்கும் மருத்துவ குணங்கள் அனைவரும் அறிந்தது தான். தேன், பட்டையை போன்ற அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளை தன்னுள் கொண்டுள்ளது. சுத்தமான தேனை தினமும் பருகி வந்தால் நீண்ட நாள் இளமையுடனும், பொலிவுடனும் வாழ முடியும் என்கிறது மருத்துவம். இயற்கையாக கிடைக்கக் கூடிய இந்த தேன் சரும பிரச்சனைகளைப் போக்கி சருமத்தை மினுமினுப்பாக வைத்துக் கொள்ளும்.

ஒரு ஸ்பூன் பட்டை பொடியுடன், 2 ஸ்பூன் தேன் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பேக்கை முகம் முழுவதும் தடவி நன்கு உலர விட்டு விடுங்கள். முகத்துடன் நன்கு ஒட்டி உலர்ந்து இருகியவுடன், நீங்கள் அதனை வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு கழுவி எடுத்துக் கொள்ளலாம். இந்த இரண்டு பொருட்களும் சருமத்தில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி சருமத்தை ஆரோக்கியமாக்கும் அதிசக்தி வாய்ந்த பொருட்கள் ஆகும், எனவே வாரம் ஒருமுறை இந்த குறிப்பை பயன்படுத்தி உங்கள் முகத்தை முகப்பருவில் இருந்து ரொம்பவே எளிதாக மீட்டு எடுக்கலாம்.

- Advertisement -