சப்பாத்தி, தோசைக்கு சுவை மிகுந்த ‘பட்டாணி கிரேவி’ ரொம்ப சுலபமாக இப்படிக்கூட செய்யலாமே! இத செஞ்சு கொடுத்தா யாருதான் வேணாம்னு சொல்லுவாங்க.

pattani-gravy-venthaya-keerai
- Advertisement -

ருசியான பட்டாணி கிரேவி வித்தியாசமான சுவையில் அட்டகாசமான மணத்தில் செய்ய இது போல ட்ரை பண்ணி பாருங்க! இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி என்று எல்லா வகையான டிபன் வகைகளுக்கும் அட்டகாசமான காம்பினேஷன் ஆக இருக்கக் கூடிய இந்த பட்டாணி கிரேவி ரொம்ப சுலபமான ரிச் லெவல் டேஸ்டில் எப்படி வீட்டிலேயே செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.

பட்டாணி கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:
வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், பிரிஞ்சி இலை – ஒன்று, பட்டை – 1, சீரகம் – ஒரு டீஸ்பூன், பெரிய வெங்காயம் – ஒன்று, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன், தக்காளி – 2, வெறும் மிளகாய் தூள் – 2 டீஸ்பூன், கரம் மசாலா – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, பச்சை பட்டாணி – 1 கப், வெந்தய கீரை – ஒரு கப், அரைத்த தேங்காய் பேஸ்ட் – ஒரு கப், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

பட்டாணி கிரேவி செய்முறை விளக்கம்:
பட்டாணி கிரேவி செய்வதற்கு முதலில் பிரஷ்ஷாக இருக்கும் பச்சைப் பட்டாணியை உரித்து ஒரு கப் அளவிற்கு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த கிரேவி செய்வதற்கு காய்ந்த பட்டாணியை பயன்படுத்தக் கூடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தேங்காயை திப்பிகள் இல்லாமல் வழு வழுவென்று நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். வெந்தயக் கீரை அல்லது முருங்கைக்கீரை ஒரு கைப்பிடி அளவிற்கு ஆய்ந்து சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வெந்தயக்கீரை பயன்படுத்தும் பொழுது இன்னும் இந்த கிரேவி சூப்பராக இருக்கும். வெந்தயக்கீரை இல்லாதவர்கள் முருங்கைக் கீரையைப் பயன்படுத்தலாம். அதுவும் இல்லாதவர்கள் எதையும் சேர்க்க தேவையில்லை.

முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் அல்லது வெண்ணெய் விட்டு கொள்ளுங்கள். சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக் கொள்ள கிரேவி செய்யும் பொழுது வெண்ணெய் சேர்த்து செய்தால் ருசி அபாரமாக இருக்கும். எண்ணெய் நன்கு காய்ந்ததும் பிரிஞ்சி இலை, பட்டை மற்றும் ஜீரகம் ஆகியவற்றை மட்டும் தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்கு நிறம் மாற வேண்டும். பொன்னிறமாக வெங்காயம் வதங்கி வரும் பொழுது இஞ்சி, பூண்டு சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். அடிபிடித்தால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இரண்டு பழுத்த தக்காளிப் பழங்களை நைஸாக பேஸ்ட் போல அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். அதை இதனுடன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். தக்காளி நன்கு கலந்து விட்ட பின்பு மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். மசாலாவின் பச்சை வாசனை போக வதங்கி வரும் பொழுது தேவையான அளவிற்கு உப்பு மற்றும் கால் கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் சுருள வதக்கி கிரேவி கொதிக்கும் பொழுது உரித்து வைத்துள்ள பச்சை பட்டாணி சேர்த்து நன்கு வதக்கிய பின்பு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து விடுங்கள். ஐந்து நிமிடம் சரியாக மூடி வைத்தால் பட்டாணி நன்கு வெந்துவிடும் இடையிடையே எடுத்து கிளறி கொள்ளுங்கள்.

பின்னர் வெந்தயக் கீரை அல்லது முருங்கைக்கீரை உங்களிடம் எது இருக்கிறதோ அதை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்னர் கிரேவிக்கு தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து மீண்டும் 5 நிமிடம் மூடி வையுங்கள். கீரை, பட்டாணி எல்லாம் நன்கு வெந்து வந்திருக்கும். இறுதியாக அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். தேங்காய் சேர்த்து நன்கு கொதித்து வரும் பொழுது அடுப்பை அணைத்து கொத்தமல்லி தழை தூவி சுடச்சுட இட்லி, தோசை, சப்பாத்தி, பூரியுடன் பரிமாறினால் இதை விட பெஸ்ட் காம்பினேஷன் இருக்கவே முடியாது என்று சொல்லுவீர்கள்.

- Advertisement -