இதய நோய் மற்றும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் பாவக்காயை இப்படி ஒரு முறை தொக்கு செய்து கொடுத்துப் பாருங்கள். பாவக்காவா கசக்கும் என்று கூறுபவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.

pavakkai thokku
- Advertisement -

கசப்பு சுவை நம் உடலுக்கு பல நன்மைகளை தரக்கூடிய சுவையாகும். இருப்பினும் அதை யாரும் விரும்பி சாப்பிடுவதில்லை. அவ்வாறு விரும்பி சாப்பிடாத கசப்பான பொருட்களில் ஒன்றுதான் பாவக்காய். இதில் பல மருத்துவ குணங்கள் இருந்தாலும், அது அனைவருக்கும் தெரிந்தாலும், கசக்கும் என்ற ஒரே காரணத்திற்காக அதை யாரும் விரும்பி சாப்பிடுவதில்லை. அப்படிப்பட்ட பாவற்காயை கசப்பே தெரியாத அளவிற்கு எப்படி தொக்கு செய்வது என்றுதான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

பாவற்காயில் விட்டமின் ஏ, சி போன்ற சத்துக்களும், இரும்பு சத்து, நார்ச்சத்து, சிங்க், பொட்டாசியம் போன்றவையும் அதிக அளவில் உள்ளது. பாவக்காயை நாம் சாப்பிடுவதன் மூலம் நம் சருமத்தை பாதுகாக்க உதவுகிறது. மேலும் கண் பார்வையை அதிகரிக்கிறது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. அல்சர் போன்ற வயிறு சம்பந்தப்பட்ட புண்களை குணப்படுத்துகிறது. இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த பாவக்காயில் எப்படி தொக்கு செய்வது என்று பார்ப்போம்.

- Advertisement -

செய்முறை 

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து கடாய் சூடானதும் அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பாவக்காய் போட்டு சிறிது எண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்படி நாம் பாவக்காயை வதக்கி செய்தால் பாவக்காயில் இருக்கும் கசப்பு சுவையானது நீங்கிவிடும். வதக்கிய பாவக்காயை ஒரு தட்டில் மாற்றிவிட்டு அதே கடாயில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்ற வேண்டும்.

எண்ணெய் நன்றாக காய்ந்ததும், அதில் 1/2 ஸ்பூன் அளவிற்கு சீரகமும், 1/2 ஸ்பூன் அளவிற்கு வெந்தயமும் சேர்க்க வேண்டும். சீரகம் நன்றாக பொரிந்ததும் அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் ஒரு பெரிய வெங்காயத்தை சேர்க்க வேண்டும். அதனுடன் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் 4 பல் பூண்டையும் சேர்த்து இரண்டு கொத்து கருவேப்பிலையை போட்டு நன்றாக வதக்க வேண்டும். வெங்காயமும் பூண்டும் வதங்கிய பிறகு அதில் நாம் ஏற்கனவே வதக்கி வைத்திருக்கும் பாவக்காயை சேர்த்து வதக்க வேண்டும்.

- Advertisement -

இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இரண்டு தக்காளியை அதில் சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி நன்றாக வெந்து கரையும் வரை வளர்க்க வேண்டும். பிறகு அதில் 1 ஸ்பூன் மிளகாய் தூள், 2 ஸ்பூன் மல்லித்தூள் மற்றும் 1/4 ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். மசாலா வாசனை போகும் வரை வதக்க வேண்டும். பிறகு ஒரு நெல்லிக்காய் அளவு புளியை ஒன்றரை டம்ளர் வரும் அளவிற்கு நன்றாக கரைத்து அதில் ஊற்ற வேண்டும்.

தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். எண்ணெய் தனியாக பிரியும் அளவிற்கு கொதிக்க வேண்டும். நன்றாக கொதித்து தொக்கு பதத்திற்கு வரும் வரை அதை அடுப்பிலேயே வைத்திருக்க வேண்டும். தொக்கு பதத்திற்கு வந்த பிறகு அதை அடுப்பில் இருந்து இறக்கி விடலாம். இப்பொழுது சுவையான பாவக்காய் தொக்கு தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே: இதுவரைக்கும் இப்படி செய்யலைனாலும் இனி ப்ரோக்கோலி வாங்கினா ஒரு முறை இப்படி ஃப்ரை பண்ணுங்க. இந்த சைடு டிஷ்க்கு வெறும் ரசம் தயிர் சாதம் இருந்தா கூட சத்தம் இல்லாமல் சைலன்ட்டா உள்ள போகும்.

மிகவும் எளிமையாக அதேசமயம் கசப்பு சுத்தமாக இல்லாத பாவக்காய் தொக்கை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து கொடுத்து பாவக்காயில் இருக்கும் அனைத்து சத்துகளையும் பெற்று நலமுடன் வாழலாம்.

- Advertisement -