உங்கள் வாழ்நாளில் ஒரே ஒரு முறையாவது இந்த 1 பழத்தை தானமாக கொடுத்து விடுங்கள். செய்த பாவங்கள் நீங்கி, பித்ருக்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்.

dhanam
- Advertisement -

எந்த ஜென்மத்தில், எந்த பாவத்தை செய்தோம் என்று தெரியவில்லை. இப்போது இந்த ஜென்மத்தில் மனித பிறவியை எடுத்து கர்மவினைகளை கழித்து கொண்டிருக்கின்றோம். யாரும் அறிந்து தெரிந்து பாவங்களை அடுத்தவர்களுக்கு செய்யாதீர்கள். நாம் அறியாமல் செய்யக்கூடிய சிறு சிறு தவறுகள் கூட பாவக் கணக்கில் சேர்க்கப் படுகின்றது. மனிதப் பிறவிகளாக பிறந்துவிட்டால் பாவம் செய்யாமல் வாழ்க்கையை வாழ முடியாது. பாவங்களையே செய்யவில்லை என்றால் அவன் மனித பிறவியில் சேர்க்கப்பட்ட மாட்டான். மகான்களின் வரிசையில் சேர்க்கப்பட்டு விடுவான். என்னதான் செய்வது? செய்த பாவத்திற்கான பிராயச்சித்தத்தை தேடுவது தான் ஒரே வழி.

Amavasai Tharpanam

வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரியாக செய்யவில்லை என்றாலும் நமக்கு பாவ கணக்குகள் சேர்க்கப்படுகின்றன. இதன் மூலம் நம்முடைய தலைமுறையே பித்ரு சாபம் பெற்று, பித்ருக்களின் கோபத்திற்கு ஆளாகி விடுகிறது. மனிதப் பிறவியில், நாம் செய்த பாவங்களை கழிப்பதற்கு எத்தனையோ பரிகார முறைகள் நமக்கு சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

அதில் ஒரு பரிகாரத்தை பற்றிதான் இன்று நாம், இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் தலைமுறையினர், தங்களுடைய பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய திதி தர்ப்பணங்களை சரியாக செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் அதற்கு முன்னால் வாழ்ந்தவர்கள், அவர்களுக்கு முன் வாழ்ந்த, முன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதி தர்ப்பணம் முறைகளை சரியாக செய்திருக்க மாட்டார்கள்.

Amavasai Tharpanam

நம்முடைய முன்னோர்கள் செய்த அந்தப் பாவமும் நம்மைத் தொடரும். இப்படி யாரோ செய்த பாவத்திற்காக கூட இன்று நம்முடைய தலைமுறையினர் கஷ்டப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். இப்படிப்பட்ட பாவங்களை சாபங்களை நீக்குவதற்கு, நாம் இந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்ய வேண்டும். உங்களுடைய வாழ்நாளில் ஒரே ஒரு முறையாவது ஒரு முழு பலாப்பழத்தை யாருக்கேனும் தானமாக கொடுக்க வேண்டும். இந்த பலாப்பழத்தை தானம் செய்தால் 600 வகையான காய் கனிகளை தானம் செய்த பலன் நமக்குக் கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

அதாவது பித்ருக்களுக்கு திதி கொடுக்கும் போது, காய்கறிகளை தானம் கொடுப்பவர்கள் அல்லவா? அதன் மூலம் நமக்கு புண்ணியம் கிடைக்கும் என்று சொல்லுவார்கள். முறையாக வருடம்தோறும் திதியை கொடுக்காமல், இருப்பவர்களாக இருந்தால், அந்த பாவத்தை நீக்குவதற்கு, பித்ருக்களின் கோபத்தை தணிப்பதற்கு இந்த ஒரு பொருளை தானமாகக் கொடுக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது.

palapalam

இந்த பலாப்பழத்தை யாருக்குத் தானம் கொடுக்கலாம். இயலாதவர்களுக்கு, முதியவர்களுக்கு அல்லது கோவிலில் உள்ள குருக்களுக்கு, கஷ்டப்படுபவர்களுக்கு என்று உங்களால் யாருக்கு தானம் கொடுக்க முடியுமோ அவர்களுக்கு இந்த ஒரு பழத்தை அப்படியே முழுசாக வாங்கி தானத்தை கொடுத்துவிடுங்கள்.

palapalam1

முடிந்தால் உங்களுடைய முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நாளில் தானம் செய்யலாம். தை அமாவாசை, மகாலய அமாவாசை, போன்ற தினங்களில் இந்த பழத்தை தானம் செய்வது நமக்கு பல கோடி புண்ணியத்தை சேர்க்கும். பாவம் நீக்கும். பித்ருக்களின் மனது சந்தோஷப்படும். வாழ்நாளில் ஒரு முறை தான் இந்த பழத்தை தானம் செய்ய வேண்டுமா? நிச்சயம் இல்லை. பெரும்பாலும் இந்தப் பழம் ஒரு குறிப்பிட்ட சீசனில் தான் கிடைக்கும். எப்போது விலை குறைவாக கிடைக்குமோ அப்போதெல்லாம் வாங்கி தாராளமாக அடுத்தவர்களுக்கு தானம் கொடுக்கலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -