கோமாதாவிற்கு இந்தக் கிழமையில், இந்த ஒரு பொருளை மட்டும் கொடுத்து பாருங்கள். செய்த பாவங்கள் அனைத்தும், படிப்படியாக குறைவதை கண் கூடாகக் காணலாம்.

pasu
- Advertisement -

வாழ்க்கையில் வரக்கூடிய கஷ்டங்களுக்கு நாம் செய்த பாவங்கள் தான் காரணம் என்று சொல்லப்படுகின்றது. அந்தப் பாவங்களைப் போக்குவதற்கு பல விதமான பரிகார முறைகள் உள்ளன. அதில் சுலபமான பரிகார முறைகளை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பொதுவாகவே தீர்க்கவே முடியாத பிரச்சினைகளுக்குக் கூட, தீர்வை கொடுக்கக்கூடிய சக்தி என்பது கோ பூஜைக்கு உண்டு. உங்களால், உங்களுடைய வீட்டில் கோமாதா படத்தை வைத்து தீபம் ஏற்றி எப்போதெல்லாம் கோமாதாவை நினைத்து பூஜை செய்ய முடியுமோ அப்போதெல்லாம் பூஜை செய்யுங்கள். உங்களுக்கு வரக்கூடிய கஷ்டங்கள் தானாகவே குறைய தொடங்கும்.

pasu-agathikeerai

வெள்ளிக்கிழமைதோறும் கோ மாதாவிற்கு ஏதாவது ஒரு உணவை, உங்கள் கைகளால் கொடுத்து வர இருக்கவேண்டும். குறிப்பாக கோதுமை மாவில் ஏலக்காய் சேர்த்து கொஞ்சமாக தேன் சேர்த்து தண்ணீர் ஊற்றி பிசைந்து சப்பாத்திகளாக செய்து கோமாதாவிற்க்கு உங்கள் கைகளாலேயே கொடுக்க வேண்டும்.

- Advertisement -

என்னதான் செய்தாலும் வீட்டில் இருக்கக்கூடிய பண பிரச்சனைக்கு மட்டும் ஒரு தீர்வு கிடைக்கவில்லை என்று நினைப்பவர்கள், கோமாதாவிற்கு புதன்கிழமை புளிச்சக்கீரையை வாங்கிக் கொடுக்கவேண்டும். புளிச்ச கீரை கட்டு என்று சொல்வார்கள் அல்லவா? புளிப்பு சுவை நிறைந்த இந்தக் கீரையை புதன்கிழமைகளில் உங்கள் கைகளால் கோமாதாவிற்க்குக் கொடுக்கப் பணம் சம்பந்தப்பட்ட, வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், கடன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் படிப்படியாக குறையத் தொடங்கும்.

pulicha-keerai

இறுதியாக ஒரு விஷயம். குறிப்பாக இது பெண்களுக்காக சொல்லப்பட்டுள்ள ஒரு விஷயம். வீட்டுப் பெண்கள்தான் மகாலட்சுமியின் அம்சம் என்று சொல்லுவார்கள். உங்களுடைய கைகளால் பசுமாட்டிற்கு உணவுகளை கொடுக்க வேண்டும். எப்போது பசுமாட்டை நீங்கள் வீதியில் பார்த்தாலும் உங்கள் வீட்டில் இருக்கும் வாழைப்பழம் அல்லது பிஸ்கட் ஏதாவது ஒரு பொருளைக் கொண்டு போய் அந்த பசுமாட்டிற்கு சாப்பிடக் கொடுத்து வாருங்கள்‌. அது உங்களுடைய வீட்டிற்கு நல்ல சுபிட்சத்தை தரும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

அடுத்தபடியாக, சில வீடுகளில் ஆண் வாரிசு இருக்காது. ஆண் வாரிசு இல்லாத காரணத்தினால் அவர்களுடைய முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி தர்ப்பணங்களை அந்த குடும்பத்தின் பெண் வாரிசால் முறையாக செய்ய முடியாது. இப்படி இருக்கும் பட்சத்தில் அந்தப் பெண் என்ன செய்ய வேண்டும்.

tharpanam

அம்மாவாசை அன்று பச்சரிசி, வாழைக்காய், வெல்லம் இந்த மூன்று பொருட்களையும் ஏதாவது ஒரு பிராமணருக்கு தானமாக கொடுக்க வேண்டும். அந்தப்பெண்ணின் கைகளால் முன்னோர்களை நினைத்து தானம் கொடுக்க வேண்டும். இதை செய்து வந்தாலே போதும். அந்த பெண்ணினுடைய தாய் தந்தையரின் ஆத்மா சாந்தி அடையும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

tharpanam

இதேபோல் அமாவாசை தினத்தன்று ஆண்களும் இந்த தானத்தை கொடுத்து வரலாம். மறைந்த உங்களுடைய முன்னோர்களை நினைத்து இந்த தானத்தை பிராமணர்களுக்கு செய்து வரும் பட்சத்தில் பித்ருக்களின் ஆத்மா சாந்தி அடையும். சாஸ்திரங்கள் சொல்லக்கூடிய சில விஷயங்களில் நிறைய உள்ளர்த்தங்கள் அடங்கியுள்ளது. தீராத கஷ்டத்தால் கஷ்டப்பட்டு வரும் குடும்பங்கள், மேல் சொன்ன விஷயங்களை முறையாக பின்பற்றினாலே போதும். பல பிரச்சனைகளுக்கு படிப்படியாக தீர்வு கிடைக்க தொடங்கும் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -