வாழ்க்கையில் நமக்கு தீராத கஷ்டங்கள், துன்பங்கள் துயரங்கள் வருவதற்கு காரணம் நாம் செய்த பாவங்கள் தான். நம்மை தொடரும் கர்ம வினை தான், நம்முடைய வாழ்க்கையின் நிலையை நிர்ணயிக்கிறது. செய்த பாவத்திலிருந்து விடுபட வேண்டும் என்றால் நாளைய தினம் 2-9-2024 திங்கட்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் ஆவணி அமாவாசை நாளன்று செய்ய வேண்டிய ஒரு எளிமையான பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
பாவங்கள் திற அமாவாசை பரிகாரம்
இந்த அமாவாசை தினம் திங்கட்கிழமையில் வந்திருப்பதால் அந்த சிவபெருமானின் ஆசியோடு இந்த பதிவிற்குள் நாம் பயணம் செல்வோம். திங்கட்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் இந்த அமாவாசை திதியில் அந்த ஈசனை நினைத்து நாம் செய்யக்கூடிய இந்த பரிகாரம், நாம் செய்த பாவங்களை நீக்கும் என்பது நம்பிக்கை.
இந்த பரிகாரம் செய்வதற்கு நாம் ஒரு மூன்று வகையான மரங்களை தேடி வைத்துக் கொள்ள வேண்டும். வன்னி மரம், வாழைமரம், அரசமரம். பெரும்பாலான சிவன் கோவில்களில் இந்த வன்னி மரத்தை நம்மால் பார்க்க முடியும். சிவன் கோவிலில் வன்னி மரம் இருந்து அந்த வன்னி மரத்திற்கு நீங்கள் இந்த வழிபாட்டை செய்தால், கோடி புண்ணியம்.
நாளைய தினம் வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு செல்லுங்கள். அங்கு ஸ்தல விருச்சமாக இருக்கும் வன்னி மரத்தை தொடமுடிந்தால், தொட்டு வணங்கிக் கொண்டு, அந்த மரத்தை 108 முறை வலம் வர வேண்டும். நாளை அமாவாசை. வீட்டில் பெண்களுக்கு முன்னோர்கள் வழிபாடு சமையல் வேலையும் இருக்கும்.
ஆண்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க வேண்டிய வேலை இருக்கும். இருந்தாலும் காலை கொஞ்சம் நேரத்தை ஒதுக்கி கோவிலுக்கு சென்று இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். மதியம் 12 மணிக்கு முன்பு தான் இந்த வழிபாட்டினை செய்ய வேண்டும். 108 முறை சுற்ற முடியாது உங்களுக்கு கால் வலி வந்துவிடும், வயதில் கொஞ்சம் பெரியவர்கள், நீங்கள் உடல் உபாதைகள் இருக்கிறது என்றால் குறைந்த பட்சம் 3 முறை சுற்றினாலும் போதும். மரத்தை சுற்றி வணங்கி சிவபெருமானை நினைத்து, குலதெய்வத்தை நினைத்து செய்த தவறுக்கு மனதார மன்னிப்பு கேட்டுக் கொள்ளுங்கள். வன்னி மரத்தில் சிவன் குடியிருப்பதாக ஐதீகம்.
வன்னி மரம் சில பேருக்கு கிடைக்காது. அதாவது வீட்டு பக்கத்தில் வன்னி மரம் இல்லை என்றால் என்ன செய்வது. வாழை மரத்தையும் நீங்கள் சுற்றி வரலாம். வாழைமரம் பெரும்பாலானோர் வீடுகளிலேயே இருக்கும். வீட்டில் இருந்தாலும் சரி அல்லது வெளியிடங்களில் இருந்தாலும் சரி வாழை மரத்தை தொட்டு வாங்கி வாழை மரத்தை 108 முறை அல்லது மூன்று முறை வலம் வர வேண்டும். வாழை மரத்தில் விஷ்ணு பகவான் குடியிருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.
அடுத்தது அரசமரம். நிறைய இடங்களில் இந்த அரச மரம் இருக்கும். முப்பத்து முக்கோடி தேவர்களும் இந்த அரச மரத்தில் இருப்பதாக ஐதீகம். பிரம்மா சிவன் விஷ்ணு மூன்று பேருமே இந்த மரத்தில் வசிக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இந்த மரத்தை வணங்கி, இந்த மரத்தையும் 108 முறை அல்லது மூன்று முறை வலம் வர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. பரிகாரத்தில் வன்னி மரத்திற்கு முதலிடம். (கோவில் அல்லாமல் பொது இடங்களில் இருக்கும் வன்னி மரத்தில் இந்த பரிகாரத்தை செய்தாலும் தவறு இல்லை).
இதையும் படிக்கலாமே: தங்கத்தை வசியம் செய்யும் முறை
வன்னி மரம் இல்லை என்பவர்கள் வாழைமரம் வாழை மரம், அரசமரம் இதில் ஏதாவது ஒரு மரத்தை நீங்கள் வலம் வந்தால் போதும். உங்களுடைய பாவங்கள் நீங்கும். முடிந்தால் ஒரு சொம்பு தண்ணீரில் ஒரு ஸ்பூன் பசும் பால் விட்டு அந்த தண்ணீரை இந்த மரத்திற்கு ஊற்ற, இந்த பிரபஞ்சம் உங்களை வாழ்த்தும். நிச்சயம் வாழ்க்கையில் இருக்கும் தீராத துன்பங்கள் தீரும். நம்பிக்கை உள்ளவர்கள் நாளைய தினம் மேல் சொன்ன இந்த ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெரலாம்.