நீங்கள் தெரியாமல் செய்த பாவத்திற்கு கஷ்டப்படுவதாக நினைக்கிறீர்களா? அப்படின்னா 6 மணிக்குள்ள இந்தத் திரி போட்டுத் தீபம் ஏற்றி பாருங்கள், துன்பம் நீங்கி பணம் பெருகும்!

yellow-thiri-cash-vilakku
- Advertisement -

பொதுவாக நாம் எப்படி இருக்கிறோமோ அதற்கு ஏற்றார் போல் தான் நம் வாழ்க்கை அமையும் என்பதை எண்ணம் போல் வாழ்க்கை என்று கூறுவதை கேட்டிருப்போம். பல இடங்களில் இதனை உண்மை என்று நிரூபிக்கும் வண்ணம் நமக்கு நடக்கும் துன்பங்கள் அதை உணர்த்தும். இந்த வகையில் நாம் என்றோ, எப்போதோ, யாருக்கோ தெரியாமல் செய்த பாவத்திற்காக தான் இப்போது கஷ்டத்தை அனுபவித்து கொண்டிருக்கிறோம் என்று தோன்றினால் இந்த நேரத்தில், இந்த திரி போட்டு தீபம் ஏற்றினால் நமக்கு ஏற்படும் துன்பங்கள் அனைத்தும் தீர்ந்து பணமானது பெருகும் என்கிறது ஆன்மீகம். அப்படியான எளிய பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பொதுவாக பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து நாம் குளித்து முடித்து பூஜை அறையில் விளக்கு ஏற்றினால் அந்த நேரத்தில் நாம் வேண்டும் வேண்டுதல்கள் அத்தனையும் அப்படியே பலிக்கும் என்பது நம்பிக்கை. ஆனால் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து கொள்வது என்பது சிரமமான வேலையாக இருக்கும் பொழுது, எப்படி குளித்து முடித்து விளக்கு எல்லாம் ஏற்றுவது? என்று பலரும் இதனை தவிர்ப்பது உண்டு.

- Advertisement -

ஒரு விஷயம் செய்தால் நமக்கு நிச்சயமாக நன்மைகள் நடக்கும் என்று தெரிந்தும் அதனை நாம் செய்வது இல்லை. இதற்கு பல காரணங்கள் கூறினாலும் சோம்பேறித்தனம் தான் முதல் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. அதே போல ஒரு விஷயத்தை செய்தால் பாவம் வந்து சேரும் என்று தெரிந்தும் சில சமயங்களில் அதனை மனதில் கொள்ளாமல் செய்து விடுவது உண்டு. இப்படி தெரிந்தே செய்த பாவங்களுக்கு உரிய தண்டனைகளை நாம் அனுபவிக்கும் பொழுது நமக்கு நம்முடைய மனசாட்சி உறுத்த ஆரம்பிக்கும்.

அன்று தெரியாமல் செய்த பாவத்திற்கு இன்று இப்படி நமக்கு நடக்கிறதோ என்கிற பயம் மனதை ஆட்கொண்டு வதைக்கும். இது போன்றவர்கள் பிரம்ம முகூர்த்தத்தில் எழ முடியாவிட்டாலும் அதற்கு இணையாக இருக்கும் சந்தியா கால வேளையில் விளக்கேற்றி வழிபடலாம். சந்தியா கால வேளை என்பது மாலையில் சூரிய அஸ்தமனம் ஆகும் 3 மணியிலிருந்து 6 மணி வரையிலான காலகட்டம் ஆகும்.

- Advertisement -

இதில் 5 மணி முதல் 6 மணி வரையிலான காலம் ரொம்பவே விசேஷமானது. இந்த நேரத்தில் தீபம் ஏற்றுவதால் கிடைக்கக் கூடிய நன்மைகள் ஏராளம். பொதுவாக வெள்ளிக் கிழமைகளில் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதை பார்த்திருப்போம். சந்தியா கால வேளையில் தீபம் ஏற்றும் பொழுது நம்முடைய வேண்டுதல்கள் தடையில்லாமல் பலிக்கும் என்பது ஐதீகம்.

அதே போல உங்களுடைய இந்த துன்பத்திற்குக் காரணமான விஷயங்களிலிருந்து நீங்கள் விடுபடுவதற்கு மூன்று புதிய அகல் விளக்குகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நெய் அல்லது நல்லெண்ணை ஊற்றி பஞ்சு திரி இட்டு கொள்ளுங்கள். அதில் ஏற்றப்படும் திரியின் நிறம் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும். செய்த பாவங்கள் தீர மஞ்சள் நிற திரியில் இப்படி தீபம் ஏற்றினால் நிச்சயம் நமக்கு ஏற்படும் துன்பங்களில் இருந்து விடுபட்டு நம்முடைய செல்வாக்கு அதிகரிக்கும். மனக்கஷ்டம், பணக்கஷ்டம், வறுமை அனைத்தும் நீங்கி சகல சௌபாக்கியமும் உண்டாகும்.

- Advertisement -