- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசகல பாவங்கள் நீங்க பஞ்சபூத ரகசியம்

சகல பாவங்கள் நீங்க பஞ்சபூத ரகசியம்

- Advertisement -

இந்த உலகமே பஞ்ச பூதங்களால் ஆனது. இவற்றில் ஏதாவது ஒன்று இல்லை என்றால் கூட இந்த உலகம் இயங்காது என்று தான் கூற வேண்டும். அப்படிப்பட்ட பஞ்சபூதங்கள் நெருப்பு, நீர், நிலம், காற்று, ஆகாயம். இந்த பஞ்சபூதங்களை யார் ஒருவர் முறையாக வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட பஞ்சபூதங்களை வைத்து நாம் செய்த பாவத்தை எப்படி நீக்க வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பஞ்சபூத ரகசியம்

பஞ்சபூத தத்துவத்தின் அடிப்படையில்தான் பல ஆலயங்களை எழுப்பி இருக்கிறார்கள் நம்முடைய முன்னோர்கள். அப்படிப்பட்ட பஞ்சபூதங்களை நாம் முறையாக வழிப்பட்டோம் என்றால் நமக்கு பலவிதமான நன்மைகள் உண்டாகும் என்றுதான் கூற வேண்டும். அப்படிப்பட்ட பஞ்சபூதங்களை வைத்து எப்படி நம்முடைய பாவத்தை நிவர்த்தி செய்வது என்றும் அனைத்து தெய்வங்களின் அருளைப் பெற முடியும் என்றும் தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

பஞ்சபூதத்தில் முதலாவதாக நெருப்பை நாம் எந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்வோம். இதற்கு ஒரு சிறப்பான வழியாக திகழ்வது யாகம். கோயில்களில் யாகம் வளர்த்தாலும் அல்லது வீடுகளில் செய்யக்கூடிய யாகங்களாக இருந்தாலும் சரி அதில் கலந்து கொண்டு நம் வழிபாடு செய்வதன் மூலம் நெருப்பை பயன்படுத்தி நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்ய முடியும்.

யாகங்களும் பல வகைகளில் இருக்கின்றன. நம்முடைய கிரக சூழ்நிலைக்கு ஏற்றவாறு எந்த யாகத்தை செய்தால் நமக்கு நன்மைகள் உண்டாகும் என்று அறிந்து அந்த யாகத்தை செய்வதன் மூலம் நமக்கு பல நன்மைகள் உண்டாகும்.

- Advertisement -

அடுத்ததாக நீர் அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் வருடத்திற்கு இரண்டு முறையாவது அதாவது ஆறு மாதத்திற்கு ஒருமுறை கண்டிப்பான முறையில் கடலில் சென்று குளிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். இதற்கு காரணம் கடலில் சென்று நாம் குளிப்பதன் மூலம் நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களும் தீய சக்திகளும் விலகும் என்பதுதான்.

பொதுவாக பல கோவில்களுக்கு அருகில் இருக்கக்கூடிய குளம், கிணறு, கடல், ஆறு போன்ற நீர்நிலைகளில் நீராடுவது என்பது மிகவும் சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. அவ்வாறு நாம் நீராடுவதன் மூலம் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்குவதோடு மட்டுமல்லாமல் அந்த தெய்வத்தின் பரிபூரண அருளையும் நம்மால் பெற முடியும்.

- Advertisement -

அடுத்ததாக காற்றை பயன்படுத்தி எப்படி நம்முடைய பாவங்களை தீர்ப்பது? நம்முடைய பாவங்களை தீர்ப்பதற்குரிய மந்திரங்கள் இருக்கின்றன. அந்த மந்திரங்களை நாம் உச்சரிப்பதன் மூலம் காற்றின் உதவியுடன் நாம் செய்த பாவங்களை தீர்த்துக் கொள்ள முடியும். அடுத்ததாக நிலம். நிலத்தில் நாம் ஒரு செடியை வைத்து நட்டு அதற்கு தண்ணீர் ஊற்றி வளர்த்தோம் என்றாலும் அதே சமயம் நிலத்திலிருந்து கொண்டு நாம் பிறருக்கு தான தர்மங்களை செய்தோம் என்றாலும் நாம் செய்த பாவங்கள் படிப்படியாக கூறிய ஆரம்பிக்கும்.

கடைசியாக ஆகாயம். ஆகாயத்தை பொருத்தவரை தினமும் யாரொருவர் சூரிய நமஸ்காரம் செய்கிறாரோ அவர்களுக்கு கண்டிப்பான முறையில் அவர்கள் செய்த பாவத்திலிருந்து விடை பெற முடியும். மேலும் அனைத்து விதமான தெய்வங்களின் அருளையும் பரிபூரணமாக பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: நிறைவேறாத கோரிக்கை நிறைவேற லட்டு பரிகாரம்

பஞ்சபூதங்களின் தத்துவத்தின் படி பல விஷயங்கள் நடந்தாலும் நாம் பாவங்களை நிவர்த்தி செய்வதற்கு பஞ்சபூதங்களும் நமக்கு உதவி செய்யும் என்பதால் மறவாமல் பஞ்ச பூதங்களை இந்த முறையில் பயன்படுத்தி நாம் செய்த பாவத்தை நிவர்த்தி செய்து கொள்வோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்