உங்களிடம் இருக்கும் இந்த ஒரு பொருளை தர மறுத்தால் வீட்டில் செல்வம் குறைந்து கஷ்டம் வருவதோடு, ஏழு ஜென்ம பாவம் உங்களை தொடர்ந்து வருமாம் தெரியும்மா?.

- Advertisement -

இந்த உலகில் தோன்றிய சிறு உயிர் முதல் மனிதர்கள் வரை ஒவ்வொருவரும் இறைவன் படைப்பில் இந்த பூமியில் வாழும் தகுதியை பெற்றவர்களே. அப்படியான இந்த வாழ்க்கையின் ஒரு பங்காகத்தான் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் வாழும் இந்த வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக வாழ வேண்டுமென்றால் நம்மை சுற்றியுள்ள சிறு சிறு உயிர்கள் முதல் நம்மை சுற்றி இருக்கும் மனிதர்கள் வரை அனைவருக்கும் நம்மால் இயன்ற சிறு உதவியாவது செய்து வாழ்வது தான் புண்ணிய வாழ்க்கையாகும். அதில் ஒரு சில பொருட்களை நம்மிடம் இருந்தும் இல்லை எனக் கூறும் போது ஜென்ம பாவங்கள் சேர்வதுடன் வறுமையும் சூழ்ந்து விடும் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. அது என்னவென்று இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நம்மிடம் எத்தனையோ பணம் இருக்கலாம், பொருள்கள் இருக்கலாம் அத்தனையும் நமக்கு மட்டும் பயன்படுவதால் எந்த பலனும் இல்லை நம்மிடம் இருப்பதை இல்லாதவர் யாருக்கேனும் சிறிதளவாது தானமாக செய்த வேண்டும் அப்படி நம்மிடம் இருந்தும் இல்லை என்று சொல்லக்கூடாத ஒரு பொருளானது தண்ணீர் தான். இந்த தண்ணீரை குறித்து தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

தண்ணீர் தானம் பலன்கள்
நாம் சாதாரணமாக தண்ணீர் தான் என்று நினைக்கும் ஒரு பொருளின் எத்தனை விஷயங்கள் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம். நம்மை சுற்றியுள்ள சிறு சிறு பறவைகள் அளிக்கும் தண்ணீர் தானம் ஆனது நம் உடம்பில் இருக்கும் தீராத நோய்களைக் கூட தீர்க்கும் வல்லமை பெற்றது. ஆகையால் முடிந்த அளவிற்கு இந்த சிறு சிறு பறவைகள் அருந்துவதற்கு நம் வீட்டை சுற்றி இருக்கும் இடங்களில் கொஞ்சமாவது அவைகளுக்கு தண்ணீர் வைத்து பழகி கொள்ளலாம்.

அடுத்து நாய், மாடு போன்றவைகள் தெருவில் இருக்கும். இவைகள் பசியாற நாம் தண்ணீர் வைத்தோம் ஆனால் , நாம் செய்த முன் ஜென்ம பாவங்கள் கூட குறைந்து விடும் என்று சாஸ்திரங்கள் சொல்லுகிறது. ஒரு பாவத்தை கரைக்க நாம் எத்தனை கோவில் குளம் சென்று அலைகிறோம். நம் கண்ணெதிரே தெரியும் இது போன்ற ஜீவன்கள் தாகம் தணிக்க வைக்கும் தண்ணீரால் அந்த பாவம் குறைவது என்றால் இந்த தண்ணீரின் மகத்துவம் என்ன என்பது இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

இவை எல்லாவற்றையும் விட புண்ணியம் மனிதருக்கு கொடுக்கும் தண்ணீர் தானம். இந்த தண்ணீரை தான் நாம் அவர்கள் கேட்டு இல்லை என மறுக்கக் கூடாது. அப்படி மறுப்பதால் தண்ணீரை கொடுத்தால் எப்படி பாவம் குறையுமோ, அதே போல் தண்ணீரை மறுத்தால் ஏழு ஜென்ம பாவம் நம்மை தொடர்தோடு, இது நம் சந்ததியினரும் தொடரும் என்று சொல்லப்படுகிறது. ஆகையால் தான் நம் முன்னோர்கள் வீட்டிற்கு யார் வந்தாலும் முதலில் தண்ணீர் கொடுக்கும் பழக்கத்தை வைத்திருந்தார்கள். விரோதியே வீட்டிற்கு வந்தால் கூட கட்டாயம் தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று சொன்னதற்கான காரணமும் இது தான்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் வறுமை நீங்கி அளவில்லாத செல்வம் சேர வீட்டின் வடக்கு திசையில் இதை எல்லாம் வைத்தாலே போதும். செல்வம் தானாக உங்கள் வீடு தேடி வரும்.

இப்படி கொடுக்கும் தண்ணீரானது நாம் கொடுக்கும் போது நம் கைக்கும் மேலே தண்ணீர் சொம்பு இருக்க வேண்டும்  வாங்குபவர்கள் மேலிருந்து எடுக்க வேண்டும். தானம் என்பதால் நாம் மேலிருந்து கொடுப்பது போல் தண்ணீரை கொடுக்கக் கூடாது. இந்த தண்ணீர் தானத்தின் மகத்துவம் உணர்ந்து நாமும் இந்த தானத்தை செய்து வாழ்வின் உன்னத நிலையை அடைய வழி தேடி கொள்ளலாம்.

- Advertisement -