வீட்டில் வறுமை நீங்கி அளவில்லாத செல்வம் சேர வீட்டின் வடக்கு திசையில் இதை எல்லாம் வைத்தாலே போதும். செல்வம் தானாக உங்கள் வீடு தேடி வரும்.

- Advertisement -

தற்காலத்தில் புதிய வீடு கட்டுபவர்கள் பலரும் வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் தங்களின் வீட்டை வடிவமைக்கின்றனர். தாங்கள் புதிதாக வசிக்க போகின்ற வீட்டில் செல்வ வளங்கள் பெருக வேண்டும், இன்பமான வாழ்க்கை அமைய வேண்டும் என்பது தான் வாஸ்து சாஸ்திரம் படி வீடு கட்டுபவர்களின் பிரதான நோக்கமாக உள்ளது. அந்த வகையில் வாஸ்து சாஸ்திரத்தின் படி நமது வீட்டில் இந்த குறிப்பிட்ட பொருட்களை வைப்பதன் மூலம் நேர்மறை ஆற்றல் பெருகி, நமக்கு வளமான வாழ்க்கை ஏற்படும் என கூறப்படுகிறது. அத்தகைய பொருட்கள் எது என்பது குறித்து விரிவாக இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

வடக்கு திசை வாஸ்து:
வாஸ்து சாஸ்திரத்தின்படி வடக்கு திசை என்பது செல்வ வளத்தையும், அதிர்ஷ்டத்தையும் கொடுக்க கூடிய திசையாக கருதப்படுகிறது. செல்வத்திற்கு அதிபதியான குபேரன் வடக்கு திசைக்கு அதிபதியாக கருதப்படுகிறார்.

- Advertisement -

பொதுவாக வீடுகளில் சிவலிங்கம் வைக்க கூடாது என்பார்கள். எனினும் உங்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் ஏற்பட, வீண் விரயங்களை தடுக்க கால் அங்குலத்திற்கு குறைவான அளவில் இருக்கின்ற சிவலிங்கம் ஒன்றை, உங்கள் வீட்டின் வடக்கு பாகத்தில் வைப்பதால், நீங்கள் எதிர்பார்த்த பலனை கொடுக்கும். உலகெல்லாம் காக்கும் உலகநாதன் ஆகிய சிவபெருமான் வசிக்கின்ற “கைலாய” மலை கூட வடக்குப் பகுதியில் தான் உள்ளது என்பதும் இந்த சிவலிங்க பரிகாரத்திற்கு உதாரணமாக கருதப்படுகிறது.

உலோகத்தால் செய்யப்பட்ட மீன் மற்றும் ஆமை போன்ற விலங்குகளின் சிலைகளை உங்கள் வீட்டின் வடக்கு பாகத்தில் வைப்பதன் மூலம் வறுமை, தரித்திர நிலை போன்றவை ஏற்படாமல் தடுக்கும். குறிப்பாக உலோக ஆமை பொம்மையை வடக்கு திசையில் வைப்பதன் மூலம் வீட்டில் செல்வ வளம் பெருகுவதோடு, தாங்கள் வசிக்கின்ற வீட்டில் இருக்கின்ற வாஸ்து தோஷங்களை சமன் செய்வதற்கான ஒரு செலவில்லாத பரிகாரமாக திகழ்கிறது.

- Advertisement -

மண்பாண்டத்தால் செய்யப்பட்ட பானைகள், குடங்கள் போன்றவை நேர்மறை ஆற்றல்களை பெருக்க வல்ல பொருட்களாகும். எனவே உங்கள் வீட்டின் வடக்கு பகுதியில் ஒரு சிறிய அளவிலான மண் பானையில் தண்ணீரை நிரப்பி வைப்பதன் மூலம், உங்கள் வீட்டிற்குள் அதிர்ஷ்டக் காற்று வர வழி ஏற்படும்.

இந்து மதப் புராணங்களின்படி செல்வத்தின் கடவுளாக திருமாலின் பத்தினியான “லட்சுமிதேவி” வழிபடப்படுகிறார். வீட்டின் வடக்குப் பகுதியில் லட்சுமி தேவியின் படத்தை மாட்டி வைப்பதால் செல்வ வளம் பெருகி வீட்டில் இருப்பவர்கள் இன்பமான வாழ்க்கை வாழ்வார்கள்.

- Advertisement -

தற்காலத்தில் பலரும் வாஸ்து பிரமிடுகள் பற்றி அறிந்திருப்போம். வீட்டின் வடக்குப் பகுதியில் உலோகத்திலான இத்தகைய சிறிய அளவிலான வாஸ்து பிரமிடுகளை வைப்பதால் பணவரவு உண்டாகும். மேலும், வீட்டில் படிக்கிற வயதில் இருக்கின்ற குழந்தைகள் இருந்தால், அவர்களின் அறையில் இந்த சிறிய அளவு வாஸ்து பிரமிடுகளை வைப்பதால், அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள், வீட்டின் வரவேற்பறையில் வாஸ்து பிரமிடை வைப்பதால் குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும். கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் தடுக்கும்.

வீட்டின் வடக்கு பகுதி சுவற்றில் கிளிகளின் படங்களை மாட்டி வைப்பதால் நேர்மறை ஆற்றல் பெருகும். கல்வி பயிலும் வயதில் இருக்கும் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

வடக்கு திசை என்பது குபேர திசை என்பதால் பொதுவாக எந்த ஒரு வீட்டிலும் வடக்குத் திசை பகுதியில் வீட்டின் கழிவறைகளை அமைக்க கூடாது. எடை மிகுந்த மரச்சாமான்களை இந்த வடக்கு திசையில் வைக்கக்கூடாது.

இதையும் படிக்கலாமே:
உங்களுடைய படுக்கை அறை இப்படி இருந்தால் கணவன் மனைவிக்குள் சண்டை தான் வருமாம் தெரியுமா? தம்பதியர் ஒற்றுமைக்கு படுக்கை அறையில் செய்யக்கூடாத விஷயங்கள்!

உங்கள் வீட்டில் வடக்கு திசை பகுதி போதுமான காற்றோட்டம் நிறைந்ததாகவும், தூய்மையானதாகவும், நறுமணம் மிகுந்த வகையிலும் இருக்குமாறு பார்த்துக் கொள்வதால், நம் வீட்டில் அதிர்ஷ்டம் எப்பொழுதும் நிரந்தரமாக இருக்கும்.

- Advertisement -