இந்த டிப்ஸ் எல்லாம் முன்னாடியே தெரிஞ்சி இருந்தா, வீட்ல இவ்ளோ பொருளை வேஸ்ட் பண்ணி இருக்க வேண்டாமே. இந்த சின்ன சின்ன குறிப்புகள் கூட உங்களுக்கு பெரிய அளவில் உதவி செய்யும்.

- Advertisement -

வீட்டில் இருக்கும் சமையல் வேலையை விட, வீட்டை பராமரிக்கும் வேலை எப்பொழுதுமே கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் செய்தால் அதிக நேரத்தையும், பணத்தையும் மிச்ச முடியும். அந்த வகையில் நாம் வீட்டில் பயன்படுத்தி வேண்டாம் என நினைக்கும் பொருட்களை வைத்து பல வேலைகளை சுலபமாகவும் அதே நேரத்தில் அழகாகவும் செய்துவிட முடியும் என்றால் எத்தனை நன்றாக இருக்கும். அப்படியான குறிப்புகளை பற்றிய தான் இந்த பதிவு இது. அப்படி என்னென்ன குறிப்புகள் என்று இந்த பதிவை தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள்.

மழைக்காலத்தில் பயன்படுத்தும் குடை மழைக்காலம் முடிந்த பிறகு அதை காய வைத்து பத்திரப்படுத்த உங்கள் வீட்டில் பழைய சாக்ஸ் ஏதாவது இருந்தால் அதல் வைத்து கட்டி வைத்து விடுங்கள். அடுத்த மழைக்காலம் வரை குடை அப்படியே பத்திரமாகவும் இருக்கும் அதே நேரத்தில் இடத்தை அடைக்காமல் இருக்கும்.

- Advertisement -

வீட்டில் ஸ்டீல் வடிகட்டி பயன்படுத்தும் போது கொஞ்ச நாள் ஆன பிறகு அதில் டீ வடிகட்ட முடியாது. இனி அது போல இருக்கும் டீ வடிகட்டிகளை வீணாக தூக்கிப் போட வேண்டாம். அந்த வடிகட்டியின் பின்புறம் இருக்கும் கம்பியை கொஞ்சம் வளைத்தால் அழகான ஆங்கர் போல மாறி விடும். அதை ஆணியில் மாட்டி அகல் விளக்கு ஏற்றி வைத்தால் பார்க்க மிகவும் அழகாக இருக்கும்.

அதே போல பிளாஸ்டிக் வடிகட்டியை கூட இனி தூக்கிப் போடாமல் பயன் படுத்தலாம். இப்போது எல்லார் வீட்டிலும் இஞ்சி பூண்டு நசுக்க உரல் இருக்க தான் செய்கிறது. உரலின் கைப்பிடி அளவிற்கு வடிகட்டியில் சின்னதாக ஒரு ஓட்டை போட்டு அதை அந்த உரலின் மேல் வைத்து புடியை அந்த ஓட்டையில் சொருகி வைத்து விட்டால், இஞ்சி பூண்டு என எதை நசுக்கினாலும் அதிலிருந்து எதுவும் வெளியில் தெறித்து வராது. மற்ற நேரங்களில் பூச்சி எதுவும் அதில் போய் அமராமலும் இருக்கும். இந்த ஒரு குறிப்பு இரண்டு வழிகளிலும் பயன்படும்.

- Advertisement -

பிரிட்ஜ் டோர் பெரும்பாலும் சில்வரில் தான் கொடுத்து இருப்பார்கள். என்ன தான் சுத்தம் செய்து கொண்டே இருந்தாலும் இந்த பிரிட்ஜ் ஸ்டோர், பீரோ இதற்காக கொடுக்கப்பட்டிருக்கும் இந்த சில்வர் கலர் டோரை சுத்தம் செய்தால் ஆங்காங்கே திட்டு திட்டாக புள்ளிகள் போல தெரியும் அதற்கு கோல்கேட் பவுடரை ஒரு டிஷ்யூ பேப்பரில் கொட்டி துடைத்து பாருங்கள் அவ்வளவு பளிச்சென்று மாறி விடும். இது உங்கள் வீட்டு சில்வர் கைப்பிடி உள்ள எல்லாவற்றுக்குமே பயன்படுத்தலாம்.

அதே போல் இந்த சேஃப்டி பின்களை நாம் எவ்வளவு வைத்திருந்தாலும் அவசரத்திற்கு தேடும் போது எதுவுமே கிடைக்காது. இதை பத்திரமாக வைத்து ஈசியாக கையாள்வதற்கு உங்கள் வீட்டில் பழைய வளையல் ஏதாவது இருந்தால், அதில் இந்த பின்களை எல்லாம் போட்டு எங்காவது அணியில் அல்லது ஆங்கரில் தொங்க விட்டு விடுங்கள். தேவைப்படும் போது எந்த சைஸ் பின் வேண்டும் என்று எடுக்க ஈசியாக இருக்கும் பின் தொலைந்தும் போகாது. இதற்கு கண்ணாடி வளையலை பயன்படுத்த வேண்டாம்.

அதே போல் பிரிட்ஜ், கிரைண்டர் இவற்றை பயன்படுத்திய பிறகு அதன் ஒயரை எத்தனை முறை சுற்றி வைத்தால் எத்தனை சுற்றினாலும் அது கீழே விழுந்து கொண்டே இருக்கும். இனி அது போல ஆகாமல் இருக்க நீங்கள் தலைக்கு பயன்படுத்தும் கேட்சிங் கிளிப் ஒன்னு ரெண்டு பல் உடைந்து வேண்டாம் என தூக்கி போட நினைக்கும் கிளிப்பை இந்த ஒயரை சுற்றி போட்டு விடுங்கள். ஒயர் கீழே விழுது அழுக்கும் ஆகாது.

இந்த சின்ன சின்ன குறிப்புகள் எல்லாம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நீங்களும் உங்கள் வீட்டு வேலைகளில் இந்த குறிப்புகளை பயன்படுத்தி பயன் அடையுங்கள்.

- Advertisement -