ஒரு கைப்பிடி பழைய சாதம் போதும். புது புது முடிகளை புதுப்பொலிவுடன் சூப்பரா அடர்த்தியா வளர்த்து ஜடை பின்னி கொள்ளலாமே.

hair9
- Advertisement -

நம்முடைய தலைமுடி உதிர்வது தவறு கிடையாது. ஆனால் முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் மீண்டும் புதிய முடிகள் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் நம்முடைய தலை வழுக்கை விழாமல் இருக்கும். முடி பார்ப்பதற்கு அடர்த்தியாக இருக்கும். சில பேருக்கு நிறைய முடி உதிர்வு இருக்கும். சில பேருக்கு ஒவ்வொரு முடியும் தடிமனாக இருக்காது. மெல்லிசாக இருக்கும். கையில் எடுத்து சுருட்டி இழுத்தால் உடனே அறுபடும். முடிக்கு எந்த சேதாரமும் வராமல் ஸ்ட்ராங்காக வளர, ஸ்கால்ப்பில் நெருக்கமாக முடி வளர இந்த ஹேர் பேக்கை ட்ரை பண்ணலாம்.

இந்த ஹேர் பேக் தயார் செய்ய நமக்கு முதலில் தேவைப்படக்கூடிய பொருள் பழைய சாதம். அதாவது முந்தைய நாள் இரவே சாதத்தில் தண்ணீரை ஊற்றி வைத்துக் கொள்ளவேண்டும். அடுத்த நாள் காலை அந்த சாதம் தண்ணீரோடு சேர்ந்து பழைய சாதகமாக இருக்கும் அல்லவா. அந்த பழைய சாதத்தை மிக்ஸியில் போட்டுக் கொள்ள வேண்டும். (சாதத்தை ஊறவைத்த தண்ணீரை கீழே கொட்டிவிட வேண்டாம்.)

- Advertisement -

மிக்ஸி ஜாரில் பழைய சாதம் – 1 கைப்பிடி அளவு, துளசி இலை – 1 கைப்பிடி அளவு, முருங்கைக்கீரை – 1 கைப்பிடி அளவு. இந்த மூன்று பொருட்களையும் போட்டு சாதத்தை ஊறவைத்த தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி இந்த மூன்று பொருட்களையும் விழுதுபோல் அரைத்து ஒரு காட்டன் துணியில் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். கிரீமியா திக்காக நமக்கு ஒரு பேக் கிடைக்கும். இதை தான் தலையில் அப்ளை செய்ய போகின்றோம்.

உங்களுடைய முடி ரொம்பவும் அடர்த்தியாக பெரியதாக இருக்கும் என்றால் எல்லா பொருட்களையும் இரண்டு கைப்பிடி அளவு சேர்த்துக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம்தான். துளசி இலைகளையும் முருங்கைக்கீரையும் தண்ணீரில் அலசிவிட்டு அதன் பின்பு அரைக்க பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

சரி, இப்போது தயார் செய்த பேக்கை தலையில் எப்படி அப்ளை செய்வது. வழக்கம் போலத்தான் தலை முழுவதும் தேங்காய் எண்ணெய் வைத்து அதன் பின்பு தலை முடியில் சிக்கு எடுத்துக் கொள்ளவேண்டும். இந்த ஹேர் பேக்கை முதலில் ஸ்கால்ப்பில் மயிர் கால்களில் படும்படி நன்றாக தேய்த்துக் கொள்ளுங்கள். அதன்பின்பு முடியின் நுனி வரை எல்லா இடங்களிலும் படும்படி பேக்கை அப்ளை செய்துவிட்டு, மயிர்க்கால்களில் இந்த பேக்குடன் நன்றாக 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். அதன்பின்பு, அப்படியே கொண்டை கட்டிக் கொள்ள வேண்டும்.

20 லிருந்து 30 நிமிடம் வரை பேக் தலையில் ஊறட்டும். அதன் பின்பு ஷாம்பூ அல்லது சீயக்காய் போட்டு தலைக்கு குளித்து வந்து தலையை நன்றாக காய வைத்துவிட்டு, சிக்கு எடுத்து பாருங்கள். உங்களுடைய முடியை தொட்டு பார்க்கும் போது உங்களுக்கு வித்தியாசம் தெரியும். வாரத்திற்கு 2 நாள் இந்த ஹேர் பேக்கை போட்டு வந்தால் முடி உதிர்வது குறையும். முடி ஸ்ட்ராங்கா வளர தொடங்கும்.

- Advertisement -