தேய்ந்து போன பழைய துடைப்பத்தை தூக்கி போட போறீங்களா? இது தெரிஞ்சா இனி கண்டிப்பா தூக்கி போட மாட்டீங்க!

broom-thudaippam
- Advertisement -

நாம் வீடு கூட்ட பயன்படுத்தும் துடைப்பம் மகாலட்சுமியின் அம்சம் என்றெல்லாம் வர்ணிக்கப்படுகிறது. மகாலட்சுமி நிறைந்திருக்கும் 108 இடங்களில் துடைப்பமும் ஒன்று என்பது சாஸ்திர நியதி. அத்தகைய துடைப்பத்தை எப்பொழுதும் கண்ட இடங்களில் போட்டு வைக்கக் கூடாது. அதை வைத்து மற்றவர்களை அடிக்கவோ, மற்றவர்கள் மீது படும்படியோ செய்யக் கூடாது. இப்படி செய்தால் மிகப் பெரிய பாவம் வந்து சேரும் என்கிறது சாஸ்திரம்.

broom-thudaippam1

அதே போல துடைப்பம் வைத்து வீடு கூட்டும் பொழுது யாராவது அருகில் அமர்ந்திருந்தால் அவர்களுடைய கால் மீது படும்படியாக நாம் வீட்டைப் கூட்டிக் கொண்டு இருக்கக் கூடாது, இது தரித்திரத்தை ஏற்படுத்தும் செயலாகும். துடைப்பத்தை நேராக யாருடைய கண்களிலும் படாதபடி கதவிற்கு பின்னால் மூலையில் நிமிர்த்தி வைக்க வேண்டும். இப்படி துடைப்பத்தை வைத்து ஏகப்பட்ட சாத்திரங்களும், சம்பிரதாயங்களும் நிறைந்துள்ள இந்த வரிசையில் தேய்ந்து போன துடைப்பத்தை வைத்து என்ன செய்யலாம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

- Advertisement -

வீடு கூட்ட பயன்படுத்தும் துடைப்பம் அதிகம் தேய்ந்து போகும் வரை பயன்படுத்திக் கொண்டே இருக்க கூடாது. துடைப்பம் தேய தேய வீட்டில் இருக்கும் செல்வமும் தேயும் என்பது நியதி. எனவே ஓரளவுக்கு கூட்ட முடியாத துடைப்பத்தை பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு புதிதாக வாங்கி வைத்துக் கொள்ளலாம். அந்த தேய்ந்து போன துடைப்பத்தை வீணாகக் குப்பையில் எறிவது வேண்டாம். அதற்கு பதிலாக வீட்டு உபயோகத்திற்கு இப்படி கூட நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

broom-thudaippam

துடைப்பத்தின் முனையில் கொடுத்திருக்கும் பிளாஸ்டிக்கை ஒரு கை அங்குல அளவிற்கு வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். துடைப்பத்தை பிடிக்கும் அளவிற்கு அந்த பிளாஸ்டிக் இருந்தால் போதுமானது. இரும்பும், பிளாஸ்டிக்கும் சேர்ந்த துடைப்பத்தில் மேற்புற பகுதியானது இயல்பாகவே நமக்கு தனித்தனியாக தான் கொடுத்து இருப்பார்கள். எனவே அதனையும் இப்படி பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சிறிய கைப்பிடிக்குள் தேய்ந்து போன துடைப்பத்தை வைத்து புதிதாக மாற்ற இருக்கிறோம்.

- Advertisement -

துடைப்பம் இருக்கும் பகுதியில் தேவையான அளவிற்கு கத்தி வைத்து கொஞ்சம் கொஞ்சமாக கத்தரித்துக் கொள்ளுங்கள். அதனை நீங்கள் வெட்டி வைத்திருக்கும் அந்த கைப்பிடிக்குள் நுழைத்து இறுக்கமான ரப்பர் பேண்ட் வைத்து கட்டிக் கொள்ளுங்கள். அதன் மீது பிளாஸ்டிக்கையும், துடைப்பத்தையும் இணைக்கும் படி செல்லோடேப் கொண்டு அழகாக சுற்றிக் கொள்ளுங்கள். இப்போது குட்டியாக ஒரு புதிய துடைப்பம் தயாராகிவிடும். இந்த குட்டி துடைப்பத்தை வைத்து பல்வேறு வீட்டு பயன்பாடுகளுக்கு நாம் உபயோகமான முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

window-cleaning

உதாரணத்திற்கு உங்களுடைய ஜன்னல் கதவுகளில் இருக்கும் தூசுகளும், அழுக்குகளும் நீங்க இந்த குட்டி துடைப்பத்தை பயன்படுத்தி கொள்ளலாம். ஜன்னல் இடுக்குகளில் எல்லாம் நம்மால் பெரிய துடைப்பத்தை வைத்து சுத்தம் செய்ய முடியாது. ஆனால் இந்த குட்டி துடைப்பம் ஒரு சிறிய பிரஷ் போல் செயல்படும் என்பதால் சுத்தம் செய்வதற்கு எளிதாக இருக்கும். மேலும் நீங்கள் பீரோ, வாஷிங் மெஷின், பிரிட்ஜ் போன்ற நவீன உபகரணங்கள் வைக்கும் கால் பகுதியின் மீது ஏகப்பட்ட கண்ணுக்கு தெரியாத தூசிகள் நிறைந்து இருக்கும். அந்த இடங்களை எளிதாக சுத்தம் செய்யவும் இந்த குட்டி துடைப்பம் பயன்படும்.

tiles-cleaning

அது மட்டுமல்லாமல் சுவற்றுக்கு கீழே பதியப்பட்டிருக்கும் டைல்ஸ்க்கு மேலே இருக்கும் சிறிய அளவிலான பகுதியில் இருக்கும் தூசுகளை அகற்றவும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதே போல கிச்சனில் இருக்கும் டைல்ஸ்களின் மீதும் தூசிகளை அகற்ற பயன்படுத்தலாம். சீலிங் ஃபேன் துடைக்கக் கூட எளிதாக பயன்படுத்திக் கொள்ள முடியும். இவ்வளவு பயன்பாடுகளுக்கு துடைப்பத்தை மறு உபயோகப்படுத்தும் பொழுது, ஏன் அதனை வீணாக தூக்கி எறிய வேண்டும் என்பதை சற்று சிந்திக்கலாமே!

- Advertisement -