வீட்டில் இருக்கும் பழைய துணிகளை ஒருபோதும் இப்படி செய்யவே கூடாது. கண்ணுக்குத் தெரியாத தோஷம் தாக்க வாய்ப்பு உள்ளது.

unfolded-clothes-lakshmi
- Advertisement -

இன்று பெரும்பாலான வீடுகளில் இப்போது இருக்கக்கூடிய பெரிய பிரச்சனை என்ன தெரியுமா. இந்த பத்தாத பழைய துணிகளை என்ன செய்வது என்ற கேள்விதான். இந்த பிரச்சினையை எப்படி தான் சரி செய்வது. எவ்வளவு தான் மூட்டை கட்டி எடுத்து வைத்தாலும் இந்த பழைய துணிகளை வைப்பதற்கு மட்டும் நம்முடைய வீட்டில் இடம் போதவே போதாது. பயன்படுத்தாத பழைய துணிகளை மூட்டை கட்டி வீட்டில் வைக்கவும் கூடாது. அந்த காலத்தில் பெற்றவர்கள் பிள்ளைகளுக்கு வருடத்தில் ஒரு முறையோ இரண்டு முறையோ தான் துணி எடுத்துக் கொடுப்பார்கள். இன்று அப்படி கிடையாது.

நினைத்தபோதெல்லாம் பார்த்தபோதெல்லாம் புது துணி கையில். மொபைல் போனில் ஆஃபர் எப்போதெல்லாம் போடுகின்றார்களோ அப்போதெல்லாம் புது துணி என்று துணிகளை வாங்கி குவிக்கின்றோம். அளவுக்கு மீறிய ஆடம்பர செலவு முதலில் தவறுதான். அளவுக்கு அதிகமாக துணிகளை எடுத்து குவிப்பதை குறைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வீட்டில் இருக்கும் பழைய துணிகளை என்ன செய்வது?
எப்படியோ பழைய துணி சேர்ந்து விட்டது. இதை வீட்டில் இருந்து அப்புறப்படுத்த ஏதாவது ஒரு வழியை தெரிந்து கொள்ள வேண்டும் என்பவர்களுக்காக இந்த ஒரு சின்ன பதிவு. ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ள குறிப்பு தான் இது. கிழியாத புதுசாக, நமக்கு சைஸ் பத்தாதா துணிகளை சுத்தமாக துவைத்து இல்லாதவர்களுக்கு தானமாக கொடுக்கலாம். தவறே கிடையாது. நீங்கள் உடுத்திய துணிகளை துவைக்காமல் அடுத்தவர்களுக்கு தானம் கொடுக்கக் கூடாது. கிழிந்த துணிகளை தானம் கொடுக்கக் கூடாது.

துவைத்த துணியாகவே இருந்தாலும், அந்த துணி கசங்கி போய் பார்ப்பதற்கு பிடிதுணி மாதிரி இருக்கக் கூடாது. துவைத்த துணிகளை அழகாக மடித்து ஒரு பையிலோ அட்டை பெட்டியிலோ அடுக்கி தானம் கொடுக்க வேண்டும். தானம் பெறுபவர்கள் அந்த துணியை பார்த்த உடனே சந்தோஷப்பட வேண்டும். துணியை பார்த்த உடனே முகம் சுழிக்கும்படி இருக்கக்கூடிய துணிகளை தயவு செய்து யாருக்கும் தானம் கொடுக்காதீங்க. அடுத்தவர்கள் மனது நோகும்படி அந்த தானத்தை நீங்கள் செய்வதன் மூலம் உங்களுக்கு புண்ணியம் கிடைக்கப் போகுதோ இல்லையோ, நிச்சயம் பாவம் வந்து சேர்ந்துவிடும்.

- Advertisement -

எதற்குமே உதவாத துணிகள் நிறைய குப்பை போல வீட்டில் கிடக்கிறது. அதை என்ன செய்வது. அதற்கு தான் வருடத்தில் ஒரு நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கிழிந்த, ரொம்பவும் பழைய துணிகளை அக்கினி பகவானுக்கு இறை ஆக்குவது தான் ஒரே வழி. நெருப்பில் போட்டு கொளுத்தி விடுங்கள். போகி வரை இதற்கு நீங்கள் காத்து இருக்க தான் வேண்டும். போகி அன்று நாம் நெருப்பில் போட்டு எரிக்கும் துணிகளுக்கு எந்த ஒரு தோஷமும் கிடையவே கிடையாது.

இதையும் படிக்கலாமே: வாஸ்துபடி கிச்சனில் இந்த ஒரு பொருளை மட்டும் தெரியாமல் கூட வைத்து விடக்கூடாது ஆபத்து வரும் தெரியுமா?

பழைய துணிகளை குப்பையில் தூக்கி போடலாமா. அந்த தவறை செய்யாமல் இருப்பது நல்லது. குப்பையில் பழைய துணிகளை போட்டு விட்டால் அதை நாய்கள் இழுத்து செல்லும். இன்னும் சில மிருகங்கள் அதன் மேல் ஊர்ந்து செல்லும். அப்படியெல்லாம் சில சம்பவங்கள் நடக்கும் போது நம்மை அறியாமல் சில தோஷங்கள் நம்மை தாக்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆகவே பழைய துணிகள் வீட்டில் இருந்தால் மேல் சொன்ன விஷயங்களை மட்டும் பின்பற்றுங்கள். குடும்பத்திற்கு நிச்சயம் நல்லலது நடக்கும். ஆன்மீகம் சொல்லும் இந்த எளிமையான பரிகாரத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் மட்டும் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -