நாம் உடுத்திய பழைய துணிகளை இந்த 3 பேருக்கு மட்டும் தானமாகக் கொடுக்கவே கூடாது. தீராத பாவம் வந்து சேர்ந்துவிடும்.

cloth
- Advertisement -

நாம் உடுத்திய பழைய துணிகளை என்ன செய்வது. அடுத்தவர்களுக்கு தானமாக கொடுக்கலாமா, கூடாதா. அப்படி தானம் கொடுத்தால் நமக்கு ஏதேனும் பாவம் வந்து சேர்ந்து விடுமோ. யாருக்கெல்லாம் பழைய துணிகளை தானம் கொடுக்கக் கூடாது. இப்படி பல கேள்விகளுக்கு உண்டான சாஸ்திர ரீதியான சரியான பதில் இதோ உங்களுக்காக. பின் சொல்லக்கூடிய விஷயங்களில் உங்களுக்கு உடன்பாடு இருந்தால் நம்பிக்கை இருந்தால் பின்பற்றி பலன் பெறலாம்.

பொதுவாகவே அந்த காலத்தில் எல்லாம் உடுத்திய பழைய துணிகள் நன்றாக கிழிந்த பிறகு, அந்த துணியை பயன்படுத்தவே முடியாது என்ற நிலைக்கு வந்த பிறகுதான் தூக்கி போடுவார்கள். கொஞ்சம் அதிகமாக பழைய துணி இருந்தால் அதை போகி சமயத்தில் நெருப்பில் போட்டு எரித்து விடுவார்கள்‌. சில பேருக்கு வீட்டில் இருப்பவர்கள் உடுத்திய துணியை நெருப்பில் போட்டு எரிப்பதற்கு மனது வராது. அதேபோல ஓடும் தண்ணீரில் பழைய துணியை விட்டு தண்ணீரை அசத்தம் செய்யவும் கூடாது.

- Advertisement -

அதுமட்டுமல்லாமல் பீரோ பீரோவாக துணியை அடுக்கிக் கொள்ளக்கூடிய பழக்கம் அந்த காலத்தில் இருப்பவர்களுக்கு கிடையாது. இப்போதெல்லாம் நாளுக்கு ஒரு புது துணி போடுகின்றோம். ஒருமுறை பயன்படுத்திய துணியை மீண்டும் மறுமுறை பயன்படுத்துவது கூட கிடையாது. அப்படியே கழட்டி தூர வீசுகின்றோம். இப்படி புதுசு மாறாமல் இருக்கக்கூடிய பழைய துணிகளை என்ன செய்வது. உங்களுக்கு தேவை இல்லை என்று சொல்லக்கூடிய எல்லா துணிகளையும் துவைத்து தனியாக ஒரு டப்பாவிலோ, அட்டைப் பெட்டியிலோ போட்டு சேகரித்து வாருங்கள். கொஞ்சம் நிறைய துணி சேர்ந்து விட்டதா. எல்லா துணிகளையும் உப்பு தண்ணீரில் நனைக்க வேண்டும்.

ஒரு பக்கெட் நிறைய தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் இரண்டு கைப்பிடி அளவு கல் உப்பு போட்டு, ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி போட்டு, உங்களுடைய துணிகளை அந்த தண்ணீரில் நனைத்து விடுங்கள். பத்து நிமிடங்கள் துணி அந்த தண்ணீரிலேயே ஊறட்டும். அதன் பின்பு அந்த துணிகளை எல்லாம் எடுத்து நல்ல தண்ணீரில் அலசி வெயிலில் நன்றாக காய வைத்து விட்டு, அதன் பின்பு எடுத்து அழகாக மடித்து ஒரு பையில் அடுக்கி இல்லாதவர்களுக்கு தானமாக கொடுக்கலாம். இப்போதெல்லாம் வீடு தேடிய ஆசிரமங்களில் இருந்து வருகிறார்கள். ஏதாவது பழைய துணி இருந்தால் கொடுங்கள் என்று. அப்படி கஷ்டப்படுபவர்களுக்கு இந்த துணியை நீங்கள் தானமாக கொடுத்து விடலாம். தவறே கிடையாது.

- Advertisement -

ஆனால் போட்டுக் கொள்ளவே முடியாத கிழிந்த ஆடைகளை தயவு செய்து உங்கள் கைகளால் யாருக்கும் தானம் கொடுத்து பாவத்தை தேடி கொள்ளாதீங்க. அது ரொம்ப தப்பு. பயன்படுத்த முடியாத கிழிந்த பழைய அந்த துணிகளை தூக்கிப் போட்டுடுங்க. தேவை என்றால் மீண்டும் உடுத்த முடியாத பழைய துணிகளை கிழித்து வீட்டில் இருக்கும் பொருட்களை துடைக்க கூட பயன்படுத்திக் கொள்ளலாம் தவறு கிடையாது. அணிந்த துணியை துவைக்காமல் எப்போதுமே தூக்கி போடக்கூடாது. அதையும் மனதில் நினைவு வைத்துக் கொள்ளுங்கள். துவைத்த பின்பு தான் அந்த துணியை தூக்கி தூரப் போட வேண்டும்.

எப்போதுமே இப்படி புதுசாக இருக்கக்கூடிய நாம் உடுத்திய துணிகளை உப்பு தண்ணீரில் துவைத்தாலும் சரி, அந்த பழைய துணிகளை திருநங்கைகளுக்கு தானமாக கொடுக்கக் கூடாது. பிராமினர்களுக்கு தானமாக கொடுக்கக் கூடாது. குருஸ்தானத்தில் இருப்பவர்களுக்கும் தானமாக கொடுக்கக் கூடாது. இந்த மூன்று நபர்களுக்கு நீங்கள் தானம் செய்ய வேண்டும் என்றால் புதியதாக தான் வாங்கி தானம் செய்ய வேண்டும். பழைய பொருட்களை இவர்களுக்கு கொடுக்கும் போது பாவம் சேரும் என்று சொல்கிறது சாஸ்திரம்.

ஒரு துணி வாங்க கூட வசதி இல்லை என்பவர்களுக்கு நீங்கள் இப்படி உங்களிடம் இருக்கக்கூடிய துணியை தானம் கொடுப்பது எந்த விதத்திலும் தோஷத்தை உண்டாக்காது. உப்பு தண்ணீரில் துணியை நனைத்து நன்றாக வெயிலில் காயவைத்து கொடுத்தால் நம்முடைய கஷ்டம் அவங்களுக்கு ஒட்டிக்கொள்ளும். நம்முடைய தோஷம் அவங்களை ஒட்டிக் கொள்ளும். அல்லது நம்முடைய அதிர்ஷ்டம் அவர்களுக்கு சென்று விடுமோ என்ற பயம் எல்லாம் வேண்டாம். எந்த பிரச்சனையும் இருக்காது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன பரிகாரத்தை பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -