உங்கள் வீட்டில், இந்த தீபத்தை ஏற்றிய முதல் நாளிலேயே வீட்டை பிடித்த பீடை முழுமையாக நீங்கிவிடும். மகாலட்சுமி வீட்டுக்குள் நுழைய எந்த தடையும் இருக்காது.

mahalakshmi

ஒரு வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க வேண்டும் என்றால், அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல் ஒரு துளி அளவும் கூட இருக்கக்கூடாது. சிலர் வீடு எப்போதுமே இருளில் மூழ்கி இருக்கும். பெரிய பெரிய மின் விளக்குகளை ஒளிர விட்டாலும், வீட்டில் இருக்கும் இருள் மட்டும் நீங்கவே நீங்காது. இப்படிப்பட்ட வீட்டை தான் நம்முடைய முன்னோர்கள் பீடை பிடித்த வீடு என்று சொல்வார்கள். சில பேர் இதை பேய் வீடு என்று கூட சொல்வார்கள். ஒரு வீட்டில் இருக்கும் இருளை அகற்ற, வீட்டை பிடித்திருக்கும் பீடை நீங்க சுலபமான முறையில் என்ன பரிகாரத்தை செய்யலாம் என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

deepam8

இறை வழிபாட்டோடு சேர்ந்த இந்த பரிகாரத்தை விடாமல் 48 நாட்கள் செய்ய வேண்டும். பெண்களால் தொடர்ந்து செய்ய முடியவில்லை என்றாலும், அந்த வீட்டில் இருக்கும் மற்றொருவர் இந்த தீபத்தை கட்டாயம் வீட்டில் ஏற்றிய ஆக வேண்டும். ஆண்களும் இந்த தீபத்தை ஏற்றலாம். இடையில் ஒரு நாள் கூட தீபம் வீட்டில் ஏற்ற படாமல் இருக்கக் கூடாது. அது எந்த தீபம். எப்படி ஏற்ற வேண்டும். தெரிந்துகொள்ளலாமா?

கொஞ்சம் சிரமப்படாமல் வெள்ளியில் ஒரு சிறிய விளக்கை வாங்கி வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள். காமாட்சி அம்மன் விளக்காக இருக்கக்கூடாது. வேறு எந்த சுவாமியின் திரு உருவப்படமும் போட்டு இருக்கக்கூடாது. மண் அகல் விளக்கு போன்று, வெள்ளியிலும் தீபம் இருக்கும். கொஞ்சம் எடை குறைவாக இருந்தாலும், சிறிய அளவில் இருந்தாலும் அந்த விளக்கை வெள்ளியில் தான் வாங்க வேண்டும். இந்தப் பரிகாரத்திற்கு வெள்ளி விளக்கு தான் பலன் கொடுக்கும். ஒரு விளக்கு ஏற்றினால் போதும். காமாட்சி அம்மன் விளக்கை தவிர்த்து, வெள்ளியில் வேறு விளக்கு சிறிய அளவில் குத்துவிளக்கு இருந்தாலும், அதை இந்த பூஜைக்கு நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். தவறு கிடையாது. காமாட்சி அம்மன் விளக்கை மட்டும் வேறு எண்ணெய் ஊற்றி எக்காரணத்தைக் கொண்டும் பயன்படுத்தக்கூடாது.

அடுத்தபடியாக சுத்தமான இலுப்பை எண்ணெயையும், சுத்தமான பசு நெய்யையும் வாங்கி இரண்டையும் சம அளவு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். உங்களுடைய வீட்டு பூஜை அறையில் எப்போதும் போல கிழக்கு பார்த்தவாறு இந்த தீபத்தை ஏற்றலாம். விளக்கை தரையில் வைக்காதீர்கள். ஒரு சிறிய பித்தளைத் தட்டின் மேல் வைத்து ஏற்றுங்கள்.

- Advertisement -

பித்தளை தட்டின் மேல் வெள்ளி விளக்கை வைத்து, இலுப்பை எண்ணெய் பசுநெய் கலந்த எண்ணெயை ஊற்றி, தாமரைத் தண்டு திரி போட்டு, தீபம் ஏற்றி விட வேண்டும். காலை அல்லது மாலை எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் இந்த தீபத்தை உங்களுடைய வீட்டில் ஏற்றலாம். தீபம் குறைந்தது இரண்டு மணி நேரமாவது உங்களுடைய வீட்டில் எரிய வேண்டும்.

deepam1

அந்த தீபத்துக்கு பக்கத்தில் வாசனை மிகுந்த பூக்களை வைத்து விடுங்கள். ‘இறைவா என் வீட்டை பிடித்திருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கவேண்டும். மகாலட்சுமி முழுமையான மனதோடு எங்கள் வீட்டில் அமர்ந்து நிறைவான செல்வ வளத்தை கொடுக்க வேண்டும்.’ என்ற வேண்டுதலையும் தினம்தோறும் வைத்து வாருங்கள்.

நிச்சயமாக நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு, இந்த பரிகாரத்தை தொடங்கிய முதல் நாளில் இருந்தே நல்ல பலன் கிடைப்பதை உணரமுடியும். தடைப்பட்டுவந்த சுபகாரியங்கள் வீட்டில் நடக்க தொடங்கும். வேலை வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருப்பவர்களுக்கு, நிச்சயம் நல்ல வேலை கிடைக்கும். கடன் சுமை நீங்கும். பணவரவு அதிகரிக்கும். உங்களுடைய வீடு கோவிலாக மாறும். மகாலட்சுமி வந்து மன நிம்மதியோடு உங்கள் வீட்டிலேயே நிரந்தரமாக தங்கி விடுவாள் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
இந்த செடியை மட்டும் உங்கள் வீட்டில் வைத்திருந்தால் நிச்சயம் கடன் தொல்லையும், கணவன்-மனைவி பிரச்சனையும் ஏற்படும். தவறியும் இந்த தவறை செய்து விடாதீர்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.