இந்த செடியை மட்டும் உங்கள் வீட்டில் வைத்திருந்தால் நிச்சயம் கடன் தொல்லையும், கணவன்-மனைவி பிரச்சனையும் ஏற்படும். தவறியும் இந்த தவறை செய்து விடாதீர்கள்!

plant-sad-men
- Advertisement -

வீட்டில் செடி வகைகளை வளர்ப்பதிலும் வாஸ்து சாஸ்திரம் உள்ளது. எந்த செடியாக இருந்தாலும் கொண்டு வந்து வீட்டிற்குள் வைத்து விடக்கூடாது. அந்தச் செடி அதிர்ஷ்டத்தை கொடுக்குமா? அல்லது துரதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்குமா? என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அந்த வகையில் இந்த ஒரு செடியை வீட்டில் வைத்திருந்தால், அந்த வீட்டில் கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவுகளும், வீண் விரயங்கள் ஆகி கடன் தொல்லைகளும் அதிகரிக்கும். இதற்கு அந்தச் செடியில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் காரணமாக அமைந்து விடுகிறது என்று வாஸ்து கூறுகிறது. அது என்ன செடி? என்பதை தெரிந்து கொள்ள இப்பதிவை தொடர்ந்து படியுங்கள்.

katralai

வீட்டில் உள்ளேயும், வெளியேயும் தனித்தனியாக செடிகளை வளர்த்தால் அதற்குரிய பலன்களும் நிறையவே கிடைக்கப் பெறும். அந்த வகையில் கற்பூரவள்ளி, கற்றாழை, மணி பிளான்ட் போன்ற செடி வகைகளை வீட்டிற்குள் வளர்ப்பதும், துளசி, புதினா, செம்பருத்தி, பொன்னரளி போன்ற செடி வகைகளை வீட்டிற்கு வெளியில் முன் பகுதியில் வளர்ப்பதும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அது போல் வெறும் அழகிற்காக வளர்க்கப்படும் பட்ரோஸ் வகைகள் வீட்டிற்கு வெளியில் தோட்டத்தில் வளர்ப்பது சரியாகும்.

- Advertisement -

இதனை வீட்டிற்குள் வளர்ப்பது அவ்வளவு நல்லதல்ல என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். கடகடவென வளரும் பட்ரோஸ் பார்ப்பதற்கு கண்களை கவரும் வண்ணம் இருக்கும். வேகமாக அதிக பூக்கள் பூத்து தோட்டத்தை அழகு படுத்தி விடும் பட்ரோஸ் வீட்டின் பிரதான வாசலுக்கு அதாவது மெயின் கேட் பகுதிக்கு வெளியே இருபுறங்களிலும் வளர்ப்பது அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அழகிற்காக வளர்க்கப்படும் செடிகளை அந்த இடத்தில் வளர்த்தால் பார்ப்பதற்கு அழகாகவும், உண்மையில் அந்த வீட்டிற்கு அதிர்ஷ்டமாகவும் அமையும்.

kalli-chedi

அது போல் வீட்டில் கட்டாயம் வளர்க்கக்கூடாத செடி என்றால் அது ‘சப்பாத்திகள்ளி’. சப்பாத்திக்கள்ளி ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களிலும், சுடுகாடுகளிலலும் வளரக்கூடிய ஒரு வகையான செடியாகும். முந்தைய காலங்களில் பெண் சிசு கொலைக்கு பயன்படுத்திய சப்பாத்திக்கள்ளி அப்போதே எதிர்மறை ஆற்றல்களை கொடுத்து விட்டது.

- Advertisement -

அது மட்டுமல்லாமல் இப்போது அழகு என்கிற பெயரில் குட்டி குட்டி வகையான சப்பாத்திகள்ளி செடிகள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த செடிகளை தப்பி தவறியும் வீட்டிற்குள் வளர்க்கவே கூடாது. வீட்டிற்குள் மட்டுமல்ல! வீட்டிலேயே வளர்க்கக் கூடாது என்பது தான் சரியாகும். முட்கள் நிறைந்த சப்பாத்திக்கள்ளி வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை எளிதாக பரப்பக்கூடிய தன்மையை கொண்டுள்ளது. இதனால் வீட்டில் அடிக்கடி கணவன்-மனைவிக்கு இடையே சண்டை சச்சரவுகள் நிச்சயமாக ஏற்படும் என்று வாஸ்து கூறுகிறது.

chappathi-kalli

விருட்ச சாஸ்திரத்தை பொறுத்தவரை கூட முட்கள் நிறைந்த செடி வகைகளை வீட்டில் வளர்ப்பது எதிர்மறை ஆற்றல்களையும், கஷ்டத்தையும் கொடுக்கும் என்பது தான். ஆக விருட்ச சாஸ்திரமும், வாஸ்து சாஸ்திரமும் முட்கள் நிறைந்துள்ள சப்பாத்திகள்ளியை எதிர்க்கிறது என்று தான் கூற வேண்டும். அழகு என்கிற பெயரில் இது போன்ற ஆபத்துக்களையும் சேர்த்துக் கொள்ளாதீர்கள்.

இதையும் படிக்கலாமே
வாழ்வில் தடைகள் நீங்கி, நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றி அடைய இந்த 3 வார்த்தைகளும், 3 இலைகளுமே போதும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -