முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை உடனடியாக நீக்க, இது ஒரு பெஸ்ட் டிப்ஸ். தேவைப்பட்டால் நீங்களும் ஒருவாட்டி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

face2

முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை நீக்குவதற்கு பலவிதமான வழிமுறைகள் உள்ளது. அதில் ஒன்றுதான் பீல் செய்து முடிகளை அகற்றுவது. ஆங்கிலத்தின் Peel off என்று சொல்லுவார்கள் அல்லவா? ஒரு க்ரீமை முகத்தில் தடவி விட்டு, அதை அப்படியே உரித்து எடுத்தால் முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகள் பிடுங்கிக் கொண்டு அப்படியே வந்துவிடும். அந்த பீல் முறையை பின்பற்றி, இன்று கொஞ்சம் வித்தியாசமான முறையில் எப்படி முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை நீக்குவது என்று தெரிந்து கொள்ள போகிறோம். இதற்கு வெறும் மூன்று பொருட்களே போதும். ஆனால் ரிசல்ட் பெஸ்டா கிடைக்கும்.

இதற்கு தேவையான பொருட்கள் கான்ஃபிளவர் மாவு, கஸ்தூரி மஞ்சள் தூள் அல்லது முகத்திற்கு பூசிக்கொள்ளும் சாதாரண மஞ்சள் தூள், மூன்றாவதாக கடைகளில் விற்கும் Peel Off Mask. பீல் மாஸ்க் உங்களுக்கு எந்த பிராண்ட் கிடைக்கிறதோ அந்த பிராண்டை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். குறிப்பிட்டு இந்த பிராண்ட் தான் பயன்படுத்த வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது.

ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 2 ஸ்பூன் கான்பிளவர் மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும். 1/2 ஸ்பூன் மஞ்சள் பொடியை போட்டு முதலில் இந்த இரண்டு பொடியையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதில் தேவையான அளவு பீல் ஜெல் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதை கொஞ்சம் திக்காக தயார் செய்து கொள்ள வேண்டும். எப்போதும் முகத்தில் போடும் மாஸ்க் போல தளதளவென இருக்கக்கூடாது.

pell-off

கெட்டி பதத்திற்கு அந்த பேஸ்ட்டை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது முகத்தில் மேலிருந்து கீழ் பக்கம் பார்த்தவாறு இந்த மாஸ்க் அப்ளை செய்யவேண்டும். கொஞ்சம் திக் பேஸ்ட் பதத்தில் இது இருக்கும்போது, அப்ளை செய்ய கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் பரவாயில்லை. அழுத்தம் கொடுத்து முகத்தில் கீழ் பக்கமாக அப்ளை செய்து விடுங்கள். (திக்காக இருந்தாலும் முகத்தில் ஒட்டும் பதத்திற்கு இருக்க வேண்டும் அது ரொம்ப ரொம்ப முக்கியம்.)

- Advertisement -

15 லிருந்து 20 நிமிடங்கள் இது நன்றாக காயட்டும். காய்ந்த இந்த மாஸ்க்கை முகத்தில், கீழ் பக்கத்திலிருந்து மேல் பக்கமாக உரித்து எடுக்க வேண்டும். (மேல் பக்கத்தில் இருந்து கீழ்ப்பாக்கம் க்ரீமை அப்ளை செய்து இருக்க வேண்டும். கீழ் பக்கத்திலிருந்து மேல் பக்கம் பில் செய்து மாஸ்க்கை அகற்றிவிட வேண்டும்.) இப்படி செய்தால் உங்களுடைய தேவையற்ற முடிகள் கொஞ்சம் தடிமனாக இருக்கும் பட்சத்திலும், அது முதல் முறையிலேயே முகத்தில் இருந்து நீக்கப்படும்.

face3

எல்லோருக்கும் இந்த இடத்தில் ஒரு சந்தேகம் வரும். Peel Off Mask ஐ நேரடியாகவே முகத்தில் அப்ளை செய்து, தேவையற்ற முடிகளை நீக்கி விடலாமே என்று! Peel Off Mask ஐ முகத்தில் அப்ளை செய்தால் தடிமனாக இருக்காது. மிகவும் மெல்லிய தன்மை கொண்டது.

face5

மாஸ்க்கை முகத்திலிருந்து நீக்கும்  போது முடிவுகள் அகற்ற படாமலேயே மாஸ்க் மட்டும் கிழிந்து வருவதற்கு வாய்ப்பு உண்டு. இப்படி ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க நல்ல ரிசல்ட் கிடைக்கும். இந்த முறையைப் பின்பற்றி முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை அகற்றினால் மீண்டும் நிச்சயம் அது வளரத்தான் செய்யும். இந்த டிப்ஸ் தேவையற்ற முடி வளர்ச்சியை தடுக்க நிரந்தர தீர்வை கொடுக்காது என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.