வீட்டில் பொன், பொருள், என்று சகல ஐஸ்வர்யங்களும் எப்போதும் நிறைந்து இருக்க வேண்டுமானால், பெண்கள் இந்த தானத்தை செய்தலே போதும்.

- Advertisement -

ஒரு மனிதனின் வாழ்க்கையில் நன்மை தீமைகளை கணக்கிடுவது அவன் தன் வாழ்நாளில் செய்த தான தர்மங்களை வைத்து தான். தான தர்மம் என்பது தன் தேவைக்கு போக மீதி இருப்பதை கொடுப்பது அல்ல, தன் வாழ்நாளில் அவன் சம்பாதிக்கும் தொகையில் ஒரு சிறிதளவேனும் நாம் இந்த தான தர்மத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்று நமக்கு சாஸ்திரங்கள் சொல்கிறது. எவன் ஒருவன் தன் வாழ்நாளில் இப்படி ஆன தான தர்மங்களை செய்து வாழ்கிறானோ அவன் இந்த உலகில் வாழும் காலம் மட்டும் அல்ல இறந்த பிறகும் உயர்ந்த நிலையை அடைவான் என்றும் சாஸ்திரங்கள் நமக்கு கூறுகிறது.

சரி தானங்கள் செய்ய வேண்டும் என்பது எல்லாம் சரிதான். அதில் என்ன குறிப்பாக பெண்கள் இந்த தானத்தை செய்ய வேண்டும். தானம் என்றாலே அனைவருக்கும் பொதுவானது தானே? அதில் ஆண்கள் வேறு பெண்கள் வேறு என்ற பாகுபாடு உண்டா? என்று கேட்டால் நிச்சயமாக உண்டு. இந்த உலகில் ஆண்கள், பெண்கள் என இருவரும் சம நிலையில் வாழ்ந்தாலும் அவர் அவர்களுக்கு பணிக்கப்பட்ட பணி என்பது வெவ்வேறு தான். அது போல தான் இந்த தானத்திலும், பெண்கள் செய்யும் போது இதற்கான பலன்கள் வேறு. அப்படி பெண்கள் செய்ய வேண்டிய ஒரு சிறந்த தானத்தை பற்றி தெரிந்து கொள்ளவே இந்த பதிவு.

- Advertisement -

இந்தப் பதிவை படித்துக் கொண்டிருப்பவர்கள் அது என்ன தானம் அதற்கு அதிக செலவு செய்ய வேண்டுமோ, அதிக கஷ்டப்பட வேண்டுமோ, என்றெல்லாம் யோசிக்க தொடங்க வேண்டாம். மிக மிக எளிமையாக எறும்புகளுக்கு நாம் செய்ய கூடிய தானம் தான். எறும்புகளுக்கு எப்படி தானம் செய்ய முடியும் என்று கேட்கிறீர்களா. இதோ அதற்கான பதிலையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

சில காலங்களுக்கு முன்பு வரை பெண்கள் விடியற்காலையிலே எழுந்து குளித்து முடித்த பிறகு தான், வாசல் பெருக்கி தண்ணீர் தெளித்து, பச்சரிசி மாவில் கோலம் இட்டு பூஜையை முடித்த பின் தான் அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அதாவது பெண்கள் காலையில் எழுந்து முதல் முதலில் தன் கைகளாலே பச்சரிசி மாவில் கோலம் இடுவதே எறும்புகளுக்கு இடும் தானம் தான். இதை பெண்கள் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக தான் பெரியவர்கள் காலையில் எழுந்து கோலம் போட வேண்டும் என்ற முறையை நமக்கு சொல்லி வைத்தார்கள். ஆனால் இப்போதெல்லாம் அப்படி யாரும் செய்வதில்லை வாசலில் பெயிண்டிலோ அல்லது ரெடிமேட் கோல ஸ்டிக்கரையோ ஒட்டி விடுகிறோம்.

- Advertisement -

வாயுள்ள ஜீவன்களுக்கு செய்யும் தானத்தை காட்டிலும் இது போல வாயில்லா சிறு சிறு பூச்சிகளுக்கு செய்யும் தானம் ஆனது மிக மிக புண்ணியத்தை நமக்கு தர வல்லது. நாம் போடும் கோலத்தில் உள்ள பச்சரிசி மாவை எறும்புகள் எடுத்துச் சென்று அதைப் புற்றுகளில் சேகரித்து வைத்து மழைக் காலங்களில் அவை உண்டு பசியாற்றி கொள்ளும். அதை உண்ணும் ஒவ்வொரு வேளையிலும் அந்த அரிசியை இட்ட பெண்களுக்காக எறும்பு கடவுளிடம் மனதார பிராத்தனை செய்யும். இதனால் அந்த பெண்ணின் தலைமுறை, தலைமுறையையும் சகல ஐஸ்வர்யங்களுடன், சந்தோஷமாக வாழும் பாக்கியத்தை பெறுவார்கள். எனவே தான் பெண்கள் இந்த தானத்தை கட்டாயமாக செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

இதையும் படிக்கலாமே:

இதில் பெண்களுக்கு வேறு சில நன்மைகளும் இருக்கிறது அதாவது காலையில் சூரிய உதய வேளையில் கோலமிடும் போது சூரிய கதிரில் உள்ள விட்டமின் டி பெண்களின் எலும்பு பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அது மட்டும் இன்றி இப்படி கோலம் போடும் போது குனிந்து நிமிர்ந்து இது போல செய்வதால் அவர்களின் உடம்புக்கும் நல்ல ஒரு பயிற்சி. நம் பெரியவர்கள் நமக்கு ஆன்மீகத்தோடு அறிவியலையும் சேர்த்தே தான் தந்திருக்கிறார்கள் என்பது நாம் முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொண்டதோடு மட்டுமில்லாமல் இனி இதுபோல விஷயங்களை நம் வாழ்வில் தொடர்ந்து கடைபிடித்து செல்வ செழிப்புடன் வறுமை இல்லா வளமான வாழ்வை வாழ்வோம்.

- Advertisement -