பெண்கள் செய்யக்கூடிய இந்த ஒரு தவறு ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் கெட்ட பெயரை வாங்கிக் கொடுத்து விடும். ஒருபோதும் பெண்கள் செய்யக்கூடாத அந்த ஒரு தவறு என்ன?

women3
- Advertisement -

எதற்கெடுத்தாலும் ஆண்களுக்கு ஒரு சட்டம். பெண்களுக்கு ஒரு சட்டமா என்று கோபம் கொள்ள வேண்டாம். பொதுவாகவே ஒரு ஆண் செய்யக்கூடிய தவறை விட, பெண்கள் செய்யக்கூடிய தவறு இரட்டிப்பு பாதிப்பை கொடுத்து விடும். ஒரு ஆண் செய்யக்கூடிய தவறு அந்த ஆணோடு முடிந்துவிடும். ஆனால் ஒரு பெண் தவறு செய்தால், அந்த தவறு அந்த ஒட்டுமொத்த குடும்பத்தையே பாதித்துவிடும். அதற்காகத்தான் எப்போதுமே பெண்களுக்கு ஒரு நீதி, ஆண்களுக்கு ஒரு நீதி என்று அந்த காலத்திலிருந்து நம்முடைய முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளார்கள். அந்த வரிசையில் பெண்கள் செய்யவே கூடாத ஒரு தவறை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

இன்றைய காலத்தில் பெண்கள் செய்யக்கூடாத தகவல்கள் என்று பார்த்து பட்டியல் போட்டால், நிறைய விஷயங்கள் வரும். அதெல்லாம் போகட்டும். இன்று நாம் பார்க்கக் கூடிய விஷயம் எது தெரியுமா. ‘பொய்’. எப்போதுமே ஒரு வீட்டில் இருக்கும் பெண் பொய் சொல்லவே கூடாது. பொய் சொல்லாமல் வாழ்ந்திட முடியுமா என்று யோசித்தால் கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான். ஆனால் கூடுமானவரை யாருக்கும் பாதிப்பு வராமல், பிரச்சனைகள் இல்லாமல் ஒரு விஷயத்தை சமாளிப்பதற்கு நல்லதிற்கு மட்டுமே பெண்களுடைய வாயிலிருந்து பொய் வர வேண்டும்.

- Advertisement -

சில வீட்டில் இருக்கும் பெண்கள் வாயைத் திறந்தாலே பொய்யாக பேசுவார்கள். இந்த வீட்டில் இருக்கும் பெண் இப்படி இருக்கிறாள். பிறகு வீட்டில் இருக்கும் மற்றவர்கள் எல்லாம் எப்படி இருப்பார்கள். என்று தான் ஊரில் இருப்பவர்கள் பேசுவார்கள். இதுவே ஒரு ஆண் பொய் பேசினால், இந்த வீட்டில் இருக்கும் ஆண்தான் இப்படி பொய் பேசுவார். ஆனால் அந்த வீட்டில் இருக்கும் மற்றவர்கள் எல்லாம் நல்லவர் என்று சொல்லக்கூடிய வாசகத்தையும் நாம் கேள்விப்பட்டிருப்போம்.

இப்படி குடும்பத்திற்கு கெட்ட பெயர் வருவது ஒரு பக்கம் இருக்கட்டும். அதுமட்டுமல்லாமல் பெண்கள் எதிர்பாராமல் பேசக்கூடிய வார்த்தைக்கு சக்தி அதிகம் உண்டு. அவர்கள் சொன்ன பொய் பலிப்பதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. உதாரணத்திற்கு நேற்று விசேஷத்திற்கு நீ ஏன் வரவில்லை. என்று யாராவது ஒரு பெண்ணிடம் போய் கேட்கின்றோம். அந்த பெண் என் கணவருக்கு உடல்நிலை சரியில்லை என்று ஒரு பொய் சொல்லுவார். ஆனால் உண்மை அதுவாக இருக்காது வேறு ஏதாவது காரணமாக இருக்கும். இந்தப் பெண் சொன்ன பொய்யால் ஏதோ ஒரு சூழ்நிலையில் அவருடைய கணவருக்கு நிஜமாகவே உடல்நிலை சரியில்லாமல் போவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது.

- Advertisement -

பெண்களை கடவுளாக தான் பாவித்து நம்முடைய முன்னோர்கள் நமக்கு சொல்லிக் கொடுத்து இருக்கிறார்கள். பூக்களை கடவுளுக்கு தான் சூடுவோம். கடவுளுக்கு அடுத்து அந்த பூக்களை சுடக்கூடிய தகுதி யாருக்கு உள்ளது. பெண்ணுக்கு தானே உள்ளது. கடவுளுக்கு இணையான இந்த பெண் எப்போதுமே அந்த சக்தி தேவியின் அம்சம் கொண்டவள் தான்.

இப்படிப்பட்ட பெருமைகளைக் கொண்ட பெண்ணின் வாயிலிருந்து பொய் வரலாமா. ஒருபோதும் வரவே கூடாது. ஏதோ தவறு நடந்துவிட்டது. தெரியாமல் நடந்து விட்டது. நான் தான் இதை செய்தேன். இதனால் தான் வரவில்லை. இதனால் தான் பிரச்சனை. என்ற உண்மையை அந்த இடத்திலேயே போட்டு உடைத்து விடுங்கள். ஏதோ ஒரு பொய்யை எதிர்பாராமல் சொல்லப் போக, அந்த பொய்யை மறைக்க பின்னால் பத்து பொய் சொல்ல வேண்டியதாக இருக்கும். எதற்கு இந்த பிரச்சனை.

மறந்தும் கூட உங்கள் குடும்பத்தில் இல்லாத ஒரு கஷ்டத்தை பொய்யாக உங்கள் வாயால், இருப்பதாக சொல்லவே சொல்லாதீங்க. அந்த கஷ்டம் இன்று இல்லை என்றாலும், என்றாவது ஒருநாள் உங்கள் குடும்பத்தை தேடி வரும் என்பதும் நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. முன்னோர்கள் வாக்கு பொய்க்காது. பெண்கள் வாயிலிருந்து நல்ல வார்த்தையை தான் பேச வேண்டும். பொய்யான வார்த்தையை பேசக்கூடாது.

பெண்களில் வாயில் இருந்து வரக்கூடிய வார்த்தை அந்த இறைவனின் வாயிலிருந்து வரக்கூடிய வார்த்தைக்கு சமம். ஒரு குடும்பம் கெட்டுப் போவதற்கும், நன்றாக வாழ்வதற்கும் பெண்களுடைய வாய் வார்த்தைகள் மிக மிக முக்கியமானது. பெண்களாகிய உங்களுடைய வார்த்தைகளுக்கு எத்தனை மகத்துவம் இருக்கிறது என்று சில பெண்களுக்கு தெரிவதில்லை. மேல் சொன்ன விஷயங்களின் மீது உடன்பாடு இருந்தால் இவைகளை பின்பற்றி பாருங்கள். உங்களுடைய குடும்பம் வளமாக செழிப்பாக வாழ்வாங்கு வாழும் என்ற இந்த ஒரு கருத்தோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -