பெண்களின் கையால் இந்த நல்ல காரியங்களை செய்தால் குடும்பத்தில் என்றைக்குமே மனதை கலங்க வைக்கும் துன்பங்கள் வந்து சேராது.

women4
- Advertisement -

இன்றைய காலகட்டத்தில் நம்முடைய உலகமே சுயநலத்தில் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றது. அவரவர் வாழ்க்கையை அவரவர் பார்த்துக் கொண்டு செல்கிறார்கள். அடுத்தவர்கள் எக்கேடு கேட்டுப் போனால் என்ன. நாமும் நம் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் இன்று ஒவ்வொருவர் மனதிலும் இருக்கின்றது. ஆனால் பெண்கள் எப்போதுமே அப்படி இருக்கக் கூடாது. சுயநலம் நிறைந்த இந்த உலகத்தில், பிறர் நலத்தையும் பார்க்க வேண்டிய குணம் பெண்கள் இடத்தில் இருக்க வேண்டும். கடவுள் பூமிக்கு வந்து ஒவ்வொருவரையும் பாதுகாக்க முடியாது என்பதால் தான், ஒவ்வொரு வீட்டிலும் அம்மா என்ற ஒருவரை படைத்திருப்பதாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. கடவுளுக்கு நிகராக சொல்லப்படும் பெண்களுக்கு அப்போது இந்த பூமியில் எவ்வளவு பொறுப்பு இருக்க வேண்டும். பூமாதேவியை விட பெண்களுக்குத்தான் பொறுமை அதிகம் இருக்க வேண்டும்.

தர்மம் தலைகாக்கும் என்று சொல்லுவார்கள். அதே போல தான் ஒரு வீட்டில் இருக்கும் பெண் செய்யக்கூடிய நல்ல காரியம் அந்த குடும்பத்தின் பரம்பரையை காக்கும். வீட்டில் இருக்கும் ஆண்கள் எப்படியாவது இருக்கட்டும். அதை பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். ஆனால் பெண்ணாக பிறவி எடுத்த நீங்கள் எப்போதுமே பொறுப்போடு தான் நடந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

பொதுவாகவே பெண்களுக்கு திருமணம் நடந்த பிறகு பொறுப்புகள் அதிகரிக்கும். புகுந்த வீட்டிற்கு பெண்கள் சென்ற பிறகு அவர்களுக்கு பெரிய பெரிய கடமைகள் அங்கே காத்துக் கொண்டிருக்கும். புகுந்த வீட்டில் நடக்கக்கூடிய நல்ல காரியங்களை இந்த பெண்ணின் கையால் தான் செய்ய வேண்டும். நீங்கள் விளக்கேற்றி வைக்க சென்ற வீடு என்றைக்குமே கஷ்டப்படக் கூடாது. புகுந்த வீட்டில் நீங்கள் காலடி எடுத்து வைத்து, உங்களுடைய கணவரின் தாய் தந்தைக்கு உங்களுடைய மனதளவில் கூட ஒரு சிறு துளி அளவும் கெடுதல் நினைக்கக் கூடாது.

எக்காரணத்தைக் கொண்டும் புகுந்த வீட்டில் இருக்கக்கூடிய கஷ்டத்தை காரணம் காட்டி புகுந்த வீட்டில் இருப்பவர்களை நிற்கதியாக நிற்க வைத்து, உங்கள் கணவரை மட்டும் பிரித்துக் கொண்டு நீங்கள் தனியே செல்வது பெரிய பாவச் செயல். வயதில் மூத்தவர்கள் வயதானவர்கள் நிறைய விஷயங்களை எதிர்மறையாக கூட செய்யலாம். நாலு வார்த்தை திட்டக் கூட செய்யலாம். ஆனால் எல்லாவற்றையும் அந்த வீட்டிற்கு வந்த மருமகள் சற்று அனுசரித்து செல்ல வேண்டும்.

- Advertisement -

அதேபோல புகுந்த வீட்டு சாத்திர சம்பிரதாயமுறைகளை முறைப்படி அந்த வீட்டிற்கு வந்த மருமகள் தெரிந்துகொண்டு, அதை பின்பற்றி வர வேண்டும். (பாரம்பரிய பாரம்பரியமாக கடைபிடித்து வரும் சில சாஸ்திர சம்பிரதாய முறைகள் இன்று காணாமலையே போய்விட்டது. காரணம் பெரியவர்களுடன் யாரும் கூட்டு குடும்பம் நடத்துவதே கிடையாதே. தனி குடித்தனம். பழக்க வழக்கங்கள் தெரிவதில்லை. எல்லாம் மண்ணோடு மண்ணாக போய்க் கொண்டிருக்கிறது.)

எதற்காக இவ்வளவு விஷயங்களும் பெண்களுக்கு வலியுறுத்தி சொல்லப்படுகிறது. இன்று நீங்கள் மேல் சொன்ன விஷயங்களை சரியாக பின்பற்றினால் மட்டும்தான், நாளைக்கு உங்களுக்கு பிறக்க போகும் குழந்தை நீங்கள் சொல்வதைக் கேட்டு நடக்கும். அப்போதுதான் உங்களுடைய குடும்பம் சீரும் சிறப்புமாக நடக்கும். உன்னுடைய குடும்ப பழக்க வழக்கம் அடுத்த சந்ததியினரை போய் சேரும். இன்றைக்கு நீங்கள் எல்லா விஷயத்திலும் எதிர்மறையாக நடந்து கொண்டால், நாளை உங்களுடைய சந்ததியினரும் அப்படித்தான் நடந்து கொள்வார்கள்.

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்று சொல்லி விடுவார்கள் அல்லவா. அப்படித்தான் இதுவும். அதற்காக புகுந்த வீட்டிற்கு வரக்கூடிய மருமகளை அடிமையாக நடத்த வேண்டும் என்றும் யாரும் நினைக்கக் கூடாது. உங்களுடைய வீட்டில் இருக்கும் பெண் அடுத்த வீட்டிற்கு மருமகளாக செல்கின்றாள். அவள் நன்றாக வாழ வேண்டும் என்றால், உங்கள் வீட்டிற்கு வந்த மருமகளை நீங்கள் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வளவுதாங்க இந்த நல்லதை செய்தாலே போதும் நம்முடைய குடும்பம் நமக்கு அடுத்து வரும் வாரிசு என்று நம்முடைய சந்ததியினரே சந்தோஷமாக வாழ்வார்கள்.

இப்படி எவ்வளவு விஷயங்களை சொன்னாலும் இன்றளவும் சண்டை சச்சரவுகளும் தவறுகளும் வாக்குவாதங்களும் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கு ஒரு முடிவு கிடையாது. இருப்பினும் அனுசரித்து சென்றால் நம்முடைய தலைமுறை சிறப்பாக இருக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -