- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஆன்மீகத்தின் கூற்றுப்படி உங்கள் அழகு குறைய நீங்கள் செய்யும் இந்த ஒரு தவறும் கூட காரணமாக...

ஆன்மீகத்தின் கூற்றுப்படி உங்கள் அழகு குறைய நீங்கள் செய்யும் இந்த ஒரு தவறும் கூட காரணமாக அமையலாம்

- Advertisement -

பெண்கள் இறைவனின் அம்சமாக பார்க்கப்படுகிறார்கள். உலகின் இயற்கையில் காணப்படும் அனைத்து விஷயங்களும் பெண்களின் பெயர்களை வைத்தே வர்ணிக்கப்படுகின்றன. ஒரு குடும்பத்தின் லட்சுமி கடாட்சமாக பெண் தான் இருக்கிறாள். ஒரு குடும்பத்திற்கு ஆணிவேராகவும், அடித்தளமாகவும் இருப்பவளும் பெண் தான். இவ்வாறான பெண்கள் செய்யும் ஒவ்வொரு தவறுகளும் அந்தக் குடும்பத்திற்கு தான் பாதிப்புகளை உண்டாக்குகின்றன. அவர்கள் செய்யும் ஒவ்வொரு தவறுகளின் பலன்களும் அந்த தலைமுறையையே பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. இப்படி பெண்கள் செய்யும் தவறுகள் மற்றும் அதன் பாதிப்புகளை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

mahalakshmi1

இறைவன் மனிதனைப் படைக்கும் போதே அவர்களின் ஆசைகளை எந்த அளவிற்கு கட்டுப்படுத்திக் கொள்கிறானோ அந்த அளவிற்கு அவனுக்கு நன்மைகள் கிடைக்கும் என்பதையும், ஆசைகளை கட்டுப்படுத்த முடியாமல் தவறுகள் செய்பவர்களின் வாழ்க்கை துன்பத்தில் மூழ்கும் என்பதை உணர்த்தும் வகையில் தான் இந்த மனித வாழ்க்கை படைக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

நமது தனிப்பட்ட ஆசைகளுக்காக பிறரைத் துன்பப்படுத்துவதும், பிற உயிர்களை காயப்படுத்துவதும் நமது வாழ்க்கைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. உடல்ரீதியாக காயப்படுத்துவது மட்டும் காயம் ஆகாது. மற்றவர்களின் மனதை பாதிக்கின்ற அளவிற்கு நாம் செய்யும் சிறு தவறுகளுக்கும் நமக்கு உண்டான பலன் கிடைத்து விடுகிறது. இவை நமக்கு நேரடியாகக் கிடைப்பதில்லை. நாம் செய்யும் தவறு காண பலன் நமது வாழ்க்கையை பாதிக்கிற வகையில் இறைவன் நமக்கான தண்டனையை கொடுக்கின்றார்.

enemy1

அதாவது நாம் செய்யும் பாவங்களுக்கு ஏற்ப தான் ஏழரை சனி, ஜென்ம சனி போன்ற நேரங்கள் நம்மை சூழ்ந்து கொண்டு, நம்மை துன்பத்தில் ஆழ்த்துகின்றன. எனவே பெண்கள் செய்யும் பாவத்தில் எல்லாம் பெரிய பாவம் என்னவென்றால் மற்றவர்களைப் பற்றி புறம் பேசுவது தான். இதனை செய்யும் ஒவ்வொரு பெண்களுக்கும் அவர்களின் குடும்பத்துக்கும் தீராத பாவம் மட்டுமே வந்து சேர்ந்துவிடுகிறது.

- Advertisement -

ஒருவரைப் பற்றி தவறுதலாக நாம் பேசும் வார்த்தை நமது குழந்தைகளின் நிலைமையை அந்த வார்த்தைக்கு ஏற்றவாறு மாற்றி விடுகிறது. மற்றவர்கள் நம் குழந்தையை பற்றி இவ்வாறு அவதூறு பேசுவதை நம் காதுகளால் கேட்கின்ற நிலைமை ஏற்படும். அதுமட்டுமல்லாமல் அடுத்த பிறவியில் நாம் எவருடைய நிலைமையைப் பற்றி தரக்குறைவாக பேசினோமோ அதே நிலைமை மறு பிறவியில் நமக்கு கிடைத்துவிடுகிறது.

speak

இவ்வாறு புறம் பேசுதல் என்பது அடுத்தடுத்த ஜென்மத்திற்கும் உங்களுக்கான தண்டனையை எடுத்து வருகிறது. எனவே பாவத்தில் எல்லாம் பெரும் பாவம் மற்றவர்களைப் பற்றி புறம் பேசுவதாகும். இதன் மூலம் மற்றவர்களின் மனதை காயப்படுத்துவது என்பது மற்ற பிறவியில் நீங்கள் பன்றியாக பிறக்கும் கரும பலனையும் கொடுத்து விடுகிறது.

crow-on-pig

எனவே பெண்களாகிய உங்கள் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் அனைத்தையும் மிகவும் கவனமுடன் பயன்படுத்த வேண்டும். மற்றவர்களைப் பற்றி புறம் பேசுபவர்களிடம் நீங்கள் தள்ளியே இருக்க வேண்டும். நீங்கள் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுதல் என்பது கூடாது. ஒருவரிடம் எதையாவது கூற வேண்டும் என்று நினைத்தால் அவர்களின் முகத்திற்கு நேராக பேசி உங்கள் மனதில் இருப்பதை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் நீங்கள் செய்யும் இந்த ஒரு தவறு உங்கள் தலைமுறையையும் பாதிக்கும்.

சற்று முன்