ஆண்கள் வீட்டில் இருந்து வெளியில் கிளம்பும்போது, பெண்கள் இந்த தவறை மட்டும் செய்யவே கூடாது. இது குடும்பத்திற்கு மேலும் மேலும் கஷ்டத்தை தான் கொண்டு வந்து சேர்க்கும்.

women
- Advertisement -

ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, முதலில் ஒருவருடைய மனதை, மற்றொருவர் புண்படுத்தாமல் நடந்து கொள்ள வேண்டும். அடுத்தவர்களுடைய மனதை புண்படும்படி நாம் நடந்து கொண்டால், நாம் மனது புண்படும்படி அடுத்தவர்கள் நம்மிடம் நடந்து கொள்வார்கள். இது தான் இயல்பும் கூட. சரி, இப்போது வீட்டில் இருக்கும் பெண்கள் செய்யக்கூடிய சில தவறுகளை பற்றித்தான் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். குறிப்பாக ஆண்கள் வெளியே கிளம்பும்போது, சில வீடுகளில், சில பெண்கள், செய்யும் தவறு இது. உங்களுடைய வீட்டில் இந்த தவறு நடக்குமே ஆனால் இனிவரும் காலங்களில் அதை திருத்திக் கொள்ளுங்கள். நிச்சயமாக உங்களுடைய வாழ்க்கையில் சில மாற்றங்கள் வரலாம்.

sucess-man

முதலாவதாக பெண்கள் படித்து முடித்து என்னதான் உயர்ந்த நிலையில் இருந்தாலும் சரி, அந்த வீட்டில் இருக்கும் ஆண்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்து தான் நடக்க வேண்டும். இது, பெண்கள் எப்போதும் ஆண்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக சொல்லப்படும் விஷயம் அல்ல. நம்மை விட வயதில் பெரியவர்கள், நமக்கு பாதுகாப்பாக இருப்பவர்கள், நம்மைப் பாதுகாப்பதற்காக ஆண்டவன் படைத்த இவர்களை, பெண்கள் எப்போதுமே தரக்குறைவாக மரியாதை குறைவாக நடத்தவே கூடாது. இதேதான் ஆண்களுக்கும். பெண்கள்தானே, என்று அவர்களை அலட்சியமாக நடக்க கூடாது.

- Advertisement -

காலையில் ஆண்கள் தங்களுடைய அலுவலக பணிக்காக அல்லது தான் செய்யும் தொழிலுக்காக வீட்டை விட்டு வெளியே கிளம்புவதாக இருந்தால், அவர்கள் பசியுடன், வெறும் வயிற்றோடு வீட்டிலிருந்து வெளியே கிளம்ப கூடாது. என்னதான் வேலைக்குப் போகும் பெண்களாக இருந்தாலும், காலையில் வீட்டில் இருக்கும் ஆண்களுக்கும் மற்றவர்களுக்கும் சாப்பாடு சமைத்து வைப்பது என்பது ஒரு பெண்ணினுடைய முதன்மையான கடமையாக சொல்லப்பட்டுள்ளது.

fight

அடுத்தபடியாக சில வீடுகளில் இந்த தவறுகள் கட்டாயம் நடக்கும். வெளியே ஆண்கள் செல்லும்போது வீட்டு வேலைகளை அவர்களிடம் சொல்வது. வீட்டில் இருக்கும் கஷ்டங்களை அவர்களிடம் சொல்லி புலம்புவது. இப்படிப்பட்ட தவறை செய்யக்கூடாது. வீட்டிலிருந்து கிளம்பும்போது அவர்களை மன நிம்மதியோடு வழி அனுப்பி வைக்க வேண்டும். இதுவும் வீட்டில் இருக்கக்கூடிய பெண்ணின் கடமை தான்.

- Advertisement -

குறிப்பாக வீட்டில் இருக்கும் குப்பைகளை ஆண்கள் தங்களுடைய பணிகளுக்காக வெளியே செல்லும்போது, அவருடைய கையில் கொடுத்து அனுப்பக்கூடாது. கடைவீதிக்கு செல்லும்போது கொடுத்து குப்பைத்தொட்டியில் போட சொல்லலாம். குப்பை தொட்டியில் போடுவதற்காகவே அவர்களை அனுப்பி வைக்கலாமே தவிர, அவர்கள் அலுவலகம் செல்லும்போது, அல்லது வேறு ஏதாவது வேலைக்காக வெளியே செல்லும் போது, அவர் கைகளில் இந்த குப்பை கவரை கொடுக்காதீர்கள். இதுவும் தவறான ஒரு விஷயம்.

cover

மேல் சொன்ன விஷயங்களில் ஏதேனும் ஒரு தவறை நீங்கள் செய்தாலும் கூட, அது அந்த ஆண்களுடைய முன்னேற்றத்தை பாதிக்கும். ஆண்களின் முன்னேற்றம் பாதிக்கப் படும் பட்சத்தில் அந்தக் குடும்பத்தின் முன்னேற்றமும் பாதிக்கப்பட்ட தான் செய்யும். உங்களுக்கு சரி என்று படும் பட்சத்தில் இந்த தவறுகளை நீங்கள் திருத்திக் கொள்ளலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -