பெண்கள் உடம்போடு ஒட்டி இருக்கும் தரித்திரம் துர்நாற்றம் விலக, தேகம் வாசமாக இருக்க, குளிக்கின்ற தண்ணீரில் இந்த 1 பொருளை சேர்த்தாலே போதும்.

women3
- Advertisement -

பெண்கள் மகாலட்சுமியின் அம்சம் கொண்டவர்கள். அவர்கள் பார்ப்பதற்கு எப்போதுமே முகப்பொலிவுடன் அழகாக வாசத்தோடு இருக்க வேண்டும். வாசம் என்றவுடன் நம்முடைய நினைவிற்கு வருவது, இந்த காலத்தில் செயற்கையான பெர்ஃபியூம்கள் தான். வாசமாக இருக்க வேண்டும் என்றால் குளித்துவிட்டு அந்த செயற்கையான நறுமணம் கொடுக்கக்கூடிய சென்ட் போட்டுக் கொள்வது கிடையாது. இயற்கையாகவே பெண்களுக்கு என்று ஒரு நல்ல வாசம் இருக்கின்றது. அந்த நல்ல வாசமுள்ள இடத்தில் துர்சக்திகள் வந்து குடி கொள்ளாது. தரித்திரம் அண்டாது.

இயற்கையாகவே பெரும்பாலான பெண்களுக்கு லட்சுமி கடாட்சம் இருக்கும். ஆனால் ஒரு சில பெண்களுக்கு தேகத்தில் தரித்திரம் பிடித்தது போல ஏதோ ஒரு கெட்ட வாடை வீசும். நம்மில் நிறைய பேர் இதை உணர்ந்து இருப்போம். அதாவது சில பெண்களுக்கு தெரியும். நம் உடம்பில் துர்நாற்றம் வீசுகிறது என்று. அல்லது நம்முடன் நெருக்கமாக பழகுபவர்கள், நம் வீட்டில் இருப்பவர்கள் சொல்வார்கள். உன்னுடைய உடம்பில் ஏதோ ஒரு துர்நாற்றம் வீசுகிறது என்று.

- Advertisement -

நம் சுத்தமாக தான் குளித்து இருப்போம். ஆனாலும் அந்த வாடை உடம்பை விட்டுப் போகாமல் இருக்கும். இது ஒரு சில தரித்திரத்தை உண்டாக்கக்கூடிய வாசமாக சொல்லப்பட்டுள்ளது. இப்படி பெண்கள் தேகத்தில் வீசக்கூடிய துர்நாற்றத்தை அகற்றி, பெண்களை லட்சுமி கடாட்சமாக மாற்றிக் கொள்வது எப்படி என்பதை பற்றிய ஒரு சிறு குறிப்பை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

உடலில் துர்நாற்றம் வீசக்கூடிய பெண்கள் தான் இந்த குறிப்பை பயன்படுத்த வேண்டும் என்பது அவசியம் கிடையாது. சாதாரணமாக இருக்கக்கூடிய பெண்கள் இந்த குறிப்பை பின்பற்றினாலும் அவர்களுடைய தேகம் இன்னும் மணக்க தொடங்கி விடும். இந்த குறிப்பை பின்பற்றினால் பெண்கள் அந்த மகாலட்சுமியின் அம்சமாகவே மாறிவிடுவார்கள். சரி குறிப்பை பார்த்து விடுவோம்.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு நமக்கு சிறிதளவு ஜாதிக்காய் பொடி மற்றும் ஜவ்வாது பொடி தேவை. ஒரு சிறிய டப்பாவில் ஜாதிக்காய் பொடியையும் ஜவ்வாதையும் போட்டு நன்றாக கலந்து தயார் செய்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். அது அப்படியே இருக்கட்டும். இப்போது நீங்கள் குளிக்கின்ற தண்ணீரில், 1 கைப்பிடி அளவு கல் உப்பு, 1 ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் போட்டு நன்றாக கலந்து விட வேண்டும். இந்த தண்ணீரில் குளிக்க வேண்டும்.

தலைக்கு குளித்தாலும் சரி உடம்புக்கு குடித்தாலும் சரி இந்த தண்ணீரைக் கொண்டு குளியுங்கள். குளித்து முடித்த பின்பு ஈர உடம்பைத் துவட்டி விட்டு ஆடை அணிவதற்கு முன்பாக, இதை செய்ய வேண்டும். நாம் ஜாதிக்காய் பொடியையும் ஜவ்வாதையும் சேர்த்து ஒன்றாக கலைந்து தயார் செய்து வைத்திருக்கின்றோம் அல்லவா. அந்த பொடியில் இருந்து சிறிதளவு எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு பன்னீர் ஊற்றி கலந்து அதை உங்களுடைய உடம்பின் மேல் பூசிக்கொள்ள வேண்டும்.

அவ்வளவு தான். அதன் பின்பு வழக்கம் போல நீங்கள் ஆடை அணிந்து கொள்ளலாம். தினமும் மேல் சொன்ன முறைப்படி குளித்து, இந்த பொடியை உடம்பில் பூசி வர, உங்கள் உடம்பில் இருக்கக்கூடிய வியர்வை நாற்றம் துர்நாற்றம் தரித்திரம் எதுவாக இருந்தாலும் உடம்பை விட்டு நீங்கி உங்களுடைய தேகம் புதுப்பொலிவுடன் வாசமாக லட்சுமி கடாட்சத்துடன் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -