பெண்களிடம் இந்த ஒரு குணம் மட்டும் இருக்கவே கூடாது, அது அவர்களை தீராத துன்பத்தில் தள்ளுவதோடு, குடும்பத்திலும் பிரச்சினைகளை உண்டாக்கும்.

- Advertisement -

இந்த காலத்தில் நாம் என்ன தான் ஆண்களும், பெண்களும் சமம் என்று பேசிக் கொண்டாலும், வீட்டை பொருத்தவரையில் பெண்கள் எப்படி இருக்கிறார்களோ அதை பொறுத்து தான் அந்த குடும்பமும் இருக்கும். பெண்கள் எப்போதும் நல்ல திடமான முடிவை, தீர்க்கமாக சிந்தித்து எடுத்து குடும்பத்தை நல்ல முறையில் வழி நடத்தி சென்றால் எந்த பிரச்சனையையும் சுலபமாக சமாளித்து வாழ்க்கையில் வெற்றி பெற்று விடலாம். அதற்கு அவர்களின் மனநிலையும் உடல் நிலையும் எப்போதும் தெளிவாக இருக்க வேண்டும். ஆனாலும் இது அனைத்து சமயத்திலும் கடைப்பிடிக்க முடியாமல் பெண்கள் திணறி போய் விடுவார்கள். இது போன்று விஷயத்தை சரி செய்ய கூட ஆன்மீகத்தில் சில வழிமுறைகள் உண்டு. அது என்னவென்று தான் இப்போது இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

ஒரு நல்ல குடும்பமானது கணவன், மனைவி, குழந்தைகள் என அனைவரும் ஒற்றுமையாக இருந்து மகிழ்ச்சியாக வாழ்வது தான். அப்படி இல்லாமல் வீட்டில் எப்போதுது பார்த்தாலும் சிடுசிடுவென்று பேசிக் கொண்டு சண்டை, சச்சரவுடன்   இருந்தால் அது குடும்பத்தை பாதிப்பதுடன் குழந்தையும் பாதிக்கும். இதனால் உடல்நிலை, மனநிலை என்று அனைத்தையுமே பாதிக்கும். இந்த சண்டை சச்சரவு குழப்பத்திற்கெல்லாம் பெண்கள் மட்டும் தான் காரணமா என்றால் அப்படி அல்ல. ஆண்களுக்கும் இது போன்று குணங்கள் உண்டு. ஆனால் பெண்களின் குணங்கள் பெரிதாக குடும்பத்தை பாதிக்கும் என்பதை தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆண்களுக்கு ஏற்படும் இது போன்ற மனநிலை சிறிது நேரத்தில் சரியாகி விடும். அல்லது அவர்கள் அந்த இடத்தில் இருந்து சென்று அதை மாற்றிக் கொள்வார்கள். பெரும்பாலும் பெண்களுக்கு அத்தகைய சூழ்நிலைகள் எல்லாம் வாய்ப்பதில்லை.

- Advertisement -

அதற்கு பெண்கள்  ஒரு சில விஷயங்களை கடைப்பிடித்தால், அவர்களுக்கு ஏற்படும் எரிச்சல், கோபம், விரத்தி இது போன்ற குணங்கள் மாறி நல்ல அமைதியான சூழ்நிலைக்கு மாறி விடுவார்கள். இப்படியான குணங்களை எந்த பெண்ணும் தானாக உருவாக்கிக் கொள்வதில்லை சந்தர்ப்பங்கள் அப்படி உருவாக்கி விடுகின்றன. எந்த விஷயத்தையும் முதலில் பொறுமையாக கையாள வேண்டும். இது போன்ற சமயங்களில் அமைதியாக இருப்பது மிகவும் நல்லது. இதையெல்லாம் செய்வதுடன் இந்த ஒரு விஷயத்தையும் சேர்த்து செய்து விடுங்கள்.

பெண்களிடம் இருக்க வேண்டிய குணம்:
இப்படி எரிச்சல், கோபங்கள் வரும் போது வீட்டில் விளக்கு ஏற்றி விளக்கின் முன் அமர்ந்து சிறிது நேரம் கண்ணை மூடி தியானம் செய்தால் சரியாகும் என்று சொல்லலாம். ஆனால் அதை செய்யும் அளவிற்கு அந்த நேரத்தில் மன நிலை இருக்காது. இப்படியான மனநிலை உங்களுக்கு தோன்றும் போது, ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்து அதில் கொஞ்சம் வெல்லம் கலந்து முடிந்தால் சாமி படத்திற்கு முன் வைத்து இரண்டு நிமிடம் கண்ணை மூடி கடவுளை கும்பிட்டு குடித்து விடலாம். இது நிச்சயமாக அந்த மனநிலையை மாற்றி விடும்.

- Advertisement -

இந்த குணங்கள் எல்லாம் வந்த பிறகு சரி செய்வதை விட இந்த சூழ்நிலைக்கு செல்வதற்கு முன்னே சரி செய்து கொள்ளலாமா? என்றால் அதற்கும் ஆன்மீகம் நமக்கு வழி காட்டுகிறது. அதற்கான எளிய பரிகாரத்தை பார்த்து விடலாம்.

புதன்கிழமை காலையில் குளித்து முடித்து நீங்கள் பூஜை செய்யும் போது இரண்டு ஏலக்காவை வைத்து வணங்கி விடுங்கள். அதன் பிறகு அந்த ஏலக்காவை பொடி செய்து தண்ணீரில் கலந்து குடித்து விடுங்கள். இப்படி 21 வாரங்கள் செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாம்: செவ்வாய்க்கிழமையில் இந்த பொருளை ஒரு கைப்பிடி மட்டும் எடுத்து வைத்தால் போதும், உங்களை பிடித்திருக்கும் பிணி, பீடை, தரித்திரம் எல்லாம் நீங்கி வீட்டில் செல்வம் பெருகும் அதிசயம் நடக்கும்.

இந்த ஒரு சின்ன பரிகாரத்தை செய்து இதனால் நம் குடும்பத்தில் பிரச்சனை தீர்ந்து சுமுகமாக வாழ முடியும் என்றால் பெண்கள் இதை செய்வதில் ஒன்றும் தவறில்லை தானே. எல்லாவற்றுக்கும் ஆதாரமே குடும்பம் தான், அந்த குடும்பத்தை சரியான முறையில் வழி நடத்த இந்த சிறிய பரிகாரம் நிச்சயம் கை கொடுக்கும். நம்பிக்கையுடன் செய்து பாருங்கள்.

- Advertisement -