திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர். ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்த பெண்கள் ஒவ்வொருவரும் எதிர்பார்க்கக்கூடிய மிகவும் முக்கியமான ஒரு சுபகாரியம் என்றால் அது திருமணம் தான். இந்த திருமணம் என்பது நாம் நினைத்தவுடன் நடைபெறக்கூடியது அல்ல. ஒருவருக்கு திருமணம் நடைபெற வேண்டும் என்றால் முதலில் அவர்களுடைய ஜாதகத்தை நல்ல தசா புத்தி நடக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். குரு எந்த இடத்தில் இருக்கிறார்? யாரை பார்க்கிறார் என்று ஆராய்ந்த பிறகு தான் திருமணத்திற்கு வரன் பார்க்க ஆரம்பிப்பார்கள்.
அப்படி பார்க்க ஆரம்பித்த பிறகு அவர்களுக்கு பொருத்தமான ஜாதகம் கிடைக்க வேண்டும். அதன் பிறகு தான் திருமணம் நடைபெறுவதற்குரிய சூழ்நிலையை உண்டாகும். இதில் 1008 பிரச்சனைகள் வரும் தடைகள் வரும். இவை அனைத்தையும் நீக்கி திருமண பந்தத்தில் இணைவது என்பது மிகப்பெரிய விஷயமாகவே திகழ்கிறது. இந்த திருமண பந்தத்தில் இணைவதற்கு இறைவனின் அருளும் நவகிரகங்களின் அருளும் கண்டிப்பாக முறையில் தேவைப்படும். ஒரு வேளை திருமணம் நடைபெறுவதில் தடைகள் உண்டாகிறது, திருமணத்திற்கு பொருத்தமான வரன் கிடைக்கவில்லை என்று நினைக்கக்கூடிய பெண்கள் எந்த முறையில் வழிபாடு செய்தால் விரைவிலேயே அவர்களுக்கு திருமணம் நடைபெறும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
திருமண தடை விலக
பொதுவாகவே ஒரு வீட்டில் சுப நிகழ்ச்சி நடைபெறப்போகிறது அல்லது நடைபெற்றுவிட்டது என்பதை பார்த்தவுடன் நாம் தெரிந்து கொள்வதற்காக தான் அந்த சுப நிகழ்ச்சி நடைபெறக்கூடிய வீட்டின் இரண்டு புறங்களிலும் வாழை மரத்தை கட்டி வைப்பார்கள். வாழைமரம் என்பது குருபகவானுக்குரிய மரமாக கருதப்படுகிறது. குருபகவானின் அருள் இருந்தால் தான் ஒருவருடைய வாழ்க்கையில் சுப நிகழ்ச்சிகள் என்பது நடைபெறும். அதனால்தான் திருமணம் என்ற பேச்சை தொடங்கும் பொழுது ஜாதகத்தில் குரு எப்படி இருக்கிறார் என்பதை பார்ப்பார்கள். இப்படி குருவிற்கும் திருமண யோகத்திற்கும் பலவிதமான நெருக்கமான தொடர்புகள் இருக்கின்றன. குருவின் அருளை பெறுவதற்கும் குருவால் ஏற்பட்ட தோஷத்தை நீக்குவதற்கும் நாம் காளியம்மனை வழிபாடு செய்ய வேண்டும்.
ஒவ்வொரு வாரத்திலும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமையில் இந்த வழிபாட்டை நாம் செய்ய வேண்டும். அதுவும் ராகு காலத்தில் செய்ய வேண்டும். இதற்கு நமக்கு வாழைப்பூ வேண்டும். வாழைப்பூவை வாங்கி வந்து அதை மாலையாக கட்டி அருகில் இருக்கக்கூடிய காளியம்மன் ஆலயத்திற்கு எடுத்துச் சென்று காளியம்மனுக்கு சாற்ற வேண்டும், பிறகு காளியம்மனின் பாதத்தில் ஒரு வெற்றிலையில் குங்குமத்தை கொட்டி வைக்க வேண்டும்.
பிறகு காளியம்மனை 11 முறை வலம் வரவேண்டும். இவ்வாறு வளம் வந்து காளியம்மனை முழுமனதோடு வழிபாடு செய்துவிட்டு காளியம்மனின் பாதத்தில் இருக்கக்கூடிய குங்குமத்தை வீட்டிற்கு வாங்கி வந்து தினமும் நெற்றியில் காளியம்மனை நினைத்து வைக்க வேண்டும். இப்படி நாம் தொடர்ச்சியாக முழுமனதோடு பதினோரு வாரங்கள் செய்தோம் என்றால் கண்டிப்பான முறையில் திருமணத்தில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் விலகும் குரு பகவானின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே:பங்குனி கிருத்திகை முருகன் வழிபாடு
காளியம்மனை முழு மனதோடு வழிபாடு செய்பவர்களுக்கு எதிரிகளால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் மட்டுமல்ல பெண்களுக்கு இருக்கக்கூடிய திருமண தடைகளும் விலகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.