இனி டீ போடும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து டீ போட்டீங்கன்னா, பர்ஃபெக்ட்டான டீன்னா அது நீங்க போடுற டீதான்னு உங்க டீக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கும்.

tea
- Advertisement -

இந்த சமையல் குறிப்பு பதிவில் ஒரு பர்பெக்ட்டான டீ எப்படி போடுவது என்று தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். இந்த பதிவை பார்த்தவுடன் டீ போடுவது எல்லாம் ஒரு வேலையா என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால் ஒரு பர்பெக்ட்டான டீயை குடிக்க வேண்டும் என்றால் அதில் சேர்க்கும் பொருள்களின் அளவு சரியாக இருக்க வேண்டும். அதுவும் அதில் சேர்க்கும் பொருள்களின் தரமும் சரியாக இருக்க வேண்டும். அதைப்பற்றிய ஒரு தகவலை தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

செய்முறை 

இரண்டு பேர் குடிப்பதற்கான ஒரு டீ செய்ய என்னென்ன பொருள்கள் எந்த அளவில் சேர்க்க வேண்டும் என்பதை பார்க்கலாம். இந்த டீ போட முதலில் இரண்டு இன்ச் அளவு இஞ்சி தோல் சீவி சுத்தமாக அலசி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் இரண்டு ஏலக்காயையும் எடுத்துக் கொள்ளுங்கள். இவை இரண்டையும் இடி உரலில் சேர்த்து நன்றாக மைய நசுக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து பன்னீர் ரோஜா இதழ்களை அலசி காய வைத்து அதை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதை நீங்கள் வீட்டில் வாங்கி காய வைத்துக் கொண்டாலும் சரி அல்லது கடைகளில் காய்ந்த பன்னீர் ரோஜா இதழ்களை கிடைக்கும் அதை வாங்கிக் கொண்டாலும் சரி. இந்த பொருளை சேர்த்து டீ போடும் போது இதன் சுவை பல மடங்கு அதிகரிக்கும். ஆகையால் கட்டாயமாக இதை சேர்த்துக் கொள்ளுங்கள். இது ஒரு ஸ்பூன் அளவு இருந்தால் போதும்.

இப்போது அடுப்பில் டீ பாத்திரம் வைத்து அதில் ஒன்றரை டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் நாம் முதலில் நசுக்கி வைத்த இஞ்சி, ஏலக்காயை சேர்த்த பிறகு பன்னீர் ரோஜா இதழ்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒன்றரை டேபிள் ஸ்பூன் டீ தூள் சேர்த்துக் இரண்டு டீஸ்பூன் சர்க்கரையும் சேர்த்துக் கொள்ளுங்கள்

- Advertisement -

இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கொதித்த பிறகு இதில் ஒரு டம்ளர் அளவு நன்றாக காய்ச்சி ஆரம்பித்த பாலை ஊற்ற வேண்டும். நாம் டிகாஷன் தயாரிக்க ஏற்கனவே போதுமான அளவு தண்ணீர் வைத்து விட்டதால் இந்த பாலில் தண்ணீர் ஊற்றாமல் திக்கான பாலாக இருப்பது அவசியம். பாலை ஊற்றியவுடன் ஒரு முறை நன்றாக பொங்கி வரும் அந்த நேரத்தில் அடுப்பை சிம்மில் வைத்து மேலும் 2 நிமிடம் நன்றாக கலந்து கொதிக்க விட்டால் போதும். பர்ஃபெக்ட்டான டீ தயார்.

இதையும் படிக்காலமே: தக்காளி இருந்தா இந்த பச்சடி செஞ்சு பாருங்க. அட !தக்காளியை வைத்து இப்படி ஒரு அருமையான சைடு டிஷ் செய்யலாமான்னு நீங்களே ஆச்சரியப்படுவீங்க. இட்லி, தோசை சாதம் என எல்லாத்துக்குமே அட்டகாசமான காம்பினேஷன்

ஒரு வேளை நீங்கள் காய்ச்சாத பாலை ஊற்றுவதாக இருந்தால் மேலும் ஒரு நிமிடம் வரை நன்றாக கொதிக்க விட்டால் போதும். இந்த முறையில் ஒரு முறை டீ போட்டு கொடுத்து பாருங்கள். இது வரை நீங்கள் குடித்த டீயிலே இது தான் பெஸ்ட் டீயாக இருக்கும். அந்த அளவிற்கு டீயின் சுவை அட்டகாசமாக இருக்கும்.

- Advertisement -