தக்காளி இருந்தா இந்த பச்சடி செஞ்சு பாருங்க. அட !தக்காளியை வைத்து இப்படி ஒரு அருமையான சைடு டிஷ் செய்யலாமான்னு நீங்களே ஆச்சரியப்படுவீங்க. இட்லி, தோசை சாதம் என எல்லாத்துக்குமே அட்டகாசமான காம்பினேஷன்

Tomato Pachadi
- Advertisement -

பெரும்பாலும் பச்சடி என்றால் நமக்கு ஞாபகத்திற்கு வருவது வெங்காய பச்சடி, வெள்ளரிக்காய் பச்சடி, வெண்டைக்காய் பச்சடி இப்படியான சில வகை தான். ஆனால் தக்காளியை வைத்து அருமையான ஒரு பச்சடி ரெசிபி செய்ய முடியும் என்பது எத்தனை பேருக்கு தெரியும். இந்த பச்சடி கொஞ்சம் வித்தியாசமான சுவையில் அதே நேரத்தில் அட்டகாசமாக இருக்கும். இந்த பச்சடி இருந்தா போதும் சாதம் இட்லி, தோசை என எல்லாத்துக்குமே பொருத்தமா இருக்கும். வாங்க இந்த தக்காளி பச்சடி ரெசிபி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

செய்முறை 

இந்த பச்சடி செய்ய முதலில் கடாய் அடைப்பில் கடாய் வைத்து சூடானவுடன் கால் கப் வேர்க்கடலை சேர்த்து நன்றாக வாசம் வரும் வரை வறுத்தப் பிறகு தோல் நீக்கி தனியாக ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து மீண்டும் அதே கடாயை வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடான பிறகு ஐந்து பச்சை மிளகாய் ஒரு இன்ச் அளவுள்ள இஞ்சியை பொடியாக நறுக்கி சேர்த்து அதையும் நன்றாக நிறம் மாறும் வரை வதக்கி கொள்ளுங்கள்

- Advertisement -

பச்சை மிளகாய் நிறம் மாறி வதங்கிய வரும் நிலையில் அதை எண்ணெயிலிருந்து எடுத்து தனியாக ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்து விடுங்கள். இப்போது ஒரு மீடியம் சைஸ் தக்காளி நான்கு எடுத்து பொடியாக நறுக்கி அதே எண்ணெயில் சேர்த்துக் கொள்ளுங்கள். தக்காளி சேர்த்த பிறகு அரை ஸ்பூன் உப்பு சேர்த்து தக்காளி குழையும் வரை வதக்கிய பிறகு ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லியை சுத்தம் செய்து அதையும் சேர்த்து வதக்கிய பின் அடுப்பை அணைத்து விடுங்கள்.

இப்போது மிக்ஸி ஜாரில் முதலில் வறுத்து வைத்த வேர்க்கடலையை சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு வதக்கிய தக்காளி பச்சை மிளகாய் இஞ்சி அனைத்தையும் சேர்த்து மீண்டும் தண்ணீர் ஊற்றாமல் லேசான கொரகொரப்பு தன்மையுடன் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த சட்னி ஒரு பவுலுக்கு மாற்றிய பிறகு இதற்கு ஒரு சின்ன தாளிப்பை கொடுத்து விடுவோம். அதற்கு அடுப்பில் தாளிப்பு கரண்டி வைத்து எண்ணெய் ஊற்றி சூடான பிறகு ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்த்து பொரிந்த பிறகு ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்த பிறகு தாளிப்பை பச்சடியில் ஊற்றி கலந்து கலந்து விடுங்கள். சுவையான தக்காளி பச்சடி அருமையாக தயாராகி விட்டது.

இதையும் படிக்கலாமே: கடைகளில் விற்கும் மசால்வடையை மிஞ்சும் சுவையில் சூப்பரான பச்சை பட்டாணி பருப்பு வடை. இப்படி வடை சுட்டா, இதன் வாசத்துக்கு பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் கூட 2 வடை கொடுங்கன்னு கேட்பாங்க.

இந்த தக்காளி சட்னி இருந்தா போதும். இட்லி தோசை சாப்பாடு என எல்லாத்துக்குமே வைத்து சாப்பிட ரொம்பவே அருமையா இருக்கும். அது மட்டும் இல்லாம ரொம்ப வித்தியாசமான சுவையிலும் இருக்கும் இந்த ரெசிபி பிடிச்சிருந்தா கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க மறுபடியும் மறுபடியும் செய்வீங்க.

- Advertisement -