நாம் எல்லோருக்கும் தெரியும். இன்று சனிக்கிழமையோடு சேர்த்து வளர்பிறை ஆவணி மாத ஏகாதசி திதியும் இருக்கிறது. திருவோணம் நட்சத்திரமும் இருக்கிறது. நம்முடைய பக்கத்து மாநிலமான கேரளத்தில் ஓணம் பண்டிகை நாளைய தினம் சிறப்பாக கொண்டாட பட இருக்கிறது. பெருமாள் வாமன அவதாரம் எடுத்து, மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்கிய நாளை தான் இந்த ஓணம் பண்டிகையாக கொண்டாடி வருகிறார்கள்.
மக்கள் சந்தோஷமாக வாழ்கின்றார்களா என்பதை பார்ப்பதற்கு மகாபலி சக்கரவர்த்தியானவர், இந்த ஓணம் பண்டிகை அன்று மக்களை காண்பதற்காக வருகிறார் என்பது அவர்களுடைய நம்பிக்கையாக இருக்கிறது. யாராவது ஒருவர் மகாபலி சக்கரவர்த்தி வேடம் அணிந்து வீட்டிற்கு வீடு வந்து ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து, இனிப்பு பொருட்களை பரிமாறி அவர்கள் இந்த பண்டிகையை கொண்டாடுவது இன்றும் வழக்கமாக இருக்கிறது. கேரளா பக்கத்தில் வசிப்பவர்களுக்கு இது நன்றாகவே தெரியும்.
இப்படிப்பட்ட வாமன அவதாரம், பெருமாளின் அவதாரம் தான். பெருமாளை வழிபாடு செய்வதற்கு உகந்த இந்த நாளான இன்று நாம் செய்த பாவங்கள் நீங்க, நம்முடைய தலைகனம் நீங்க, கர்வம் அகல செய்ய வேண்டிய பெருமாள் வழிபாட்டையும், சொல்ல வேண்டிய பெருமாள் மந்திரத்தை பற்றியும் தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
இன்று உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கக்கூடிய பெருமாள் கோவிலுக்கு சென்று இந்த மந்திரத்தை உச்சரித்தாலும் சிறப்பு. முடியாதவர்கள் வீட்டிலிருந்தபடியே பெருமாள் படத்தின் முன்பு ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு இந்த மந்திரத்தை உச்சரித்தாலும் கோடி புண்ணியம் உங்களை வந்து சேரும். இன்று நீங்கள் உச்சரிக்க வேண்டிய பெருமாள் மந்திரம் இதோ உங்களுக்காக.
பெருமாள் மந்திரம்
ஓம் நாராயணாய வித்மஹே
வாஸுதேவாய தீமஹி
தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்
விஷ்ணு பகவானின் காயத்ரி மந்திரம் தான் இது. இன்றைய நாளில் இந்த மந்திரத்தை உச்சரிக்க ஒரு முறையேனும் உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது நீங்கள் செய்த பாக்கியம். நீங்கள் செய்த புண்ணியம், இன்றைய தினம் பூஜை அறையில் பெருமாளின் திருவுருவப்படத்திற்கு முன்பு பஞ்ச பாத்திரத்தில் ஒரு துண்டு பச்சை கற்பூரத்தை நுணுக்கி போட்டு, பெருமாள் முன்பு இந்த மந்திரத்தை சொல்லி, நீங்கள் என்ன வேண்டினாலும் அது உடனே உங்களுக்கு கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே: ஆவணி கடைசி ஞாயிறு வழிபாடு
குறிப்பாக தொழிலில் முன்னேற்றம் அடைய, செய்யும் வேலையில் முன்னேற்றம் அடைய, வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வீட்டில் சுகாரிய தடை விலக, இன்றைய தினம் பெருமாளை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள், மந்திரத்தை சொல்லிவிட்டு பெருமாள் முன்பு நின்று செய்த பாவங்களுக்கும், அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளுக்கு மன்னிப்பும் கேட்டுக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.