- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபெருமாள் மாவிளக்கு வழிபாடு

பெருமாள் மாவிளக்கு வழிபாடு

- Advertisement -

நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள், துன்பங்கள் போன்ற எதிர்மறையான இருள் யாவும் நீங்கி, ஒளிமயமான எதிர்காலம் உண்டாவதற்கு புரட்டாசி பௌர்ணமியில் பெருமாளுக்கு இந்த விளக்கு ஏற்றி வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது வரக்கூடிய திங்கட்கிழமை அன்று பௌர்ணமி தினத்தில் பெருமாளை எப்படி வழிபட்டு துன்பம் நீங்கி இன்பம் பெருக செய்வது? என்பதைத்தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

வாழ்க்கையில் இருக்கும் இருள் நீங்கி, ஒளிமயமான எதிர்காலம் உருவாவதற்கு புரட்டாசி பௌர்ணமி தினத்தில் விரதம் இருந்து பெருமாளை வழிபடுவது சிறப்பான பலன்களை கொடுக்கும். பொதுவாகவே புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதால், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வரும். வீட்டில் புரட்டாசி சனிக்கிழமை மற்றும் ஏகாதசி விரதங்கள் கடைப்பிடிப்பார்கள். அது போல பௌர்ணமி அன்றும் புரட்டாசி மாதத்தில் இந்த விளக்கு ஏற்றி வைத்து பெருமானை வழிபட, இருள் நீங்கி ஒளி பெருகும் என்பது ஐதீகம்.

- Advertisement -

அதிகாலையிலேயே நீராடி விரதம் துவங்க வேண்டும். அன்ன ஆகாரம் இல்லாமல் முழு விரதம் மேற்கொள்ள முடிந்தவர்கள் மேற்கொள்ளலாம். இல்லையேல் எளிய பால், பழம் போன்ற உணவுகளை எடுத்துக் கொண்டு விரதம் மேற்கொண்டாலும் பரவாயில்லை. விரதம் மேற்கொள்ளும் பொழுது யாருடனும் சண்டையிடக்கூடாது. கெட்ட வார்த்தைகளை, அமங்கலமான சொற்களை பயன்படுத்தக் கூடாது. அமைதியான முறையில் விரதத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இரவு பௌர்ணமி அன்று சந்திரன் உதயமான பிறகு விரதத்தை முடித்துக் கொள்ளுங்கள். புரட்டாசியில் இந்த பௌர்ணமி விரதம் மேற்கொள்ளும் பொழுது, பெருமாளை பச்சரிசி மாவினால் உருவம் தயார் செய்து வைத்து வழிபடுவது முறையானது. பச்சரிசி மாவு கொண்டு தயாரிக்கப்படும் பெருமாளின் திருவுருவம் முன்பு, உங்களால் முடிந்த அன்னத்தை படையல் போடலாம். புளி சாதம், தயிர் சாதம், தேங்காய் சாதம், லெமன் சாதம், மெதுவடை, சுண்டல் போன்றவற்றை தயார் செய்து படைக்கலாம். அதுபோல மாவிளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.

- Advertisement -

பச்சரிசி மாவும், நெய்யும், வெல்லமும் கலந்து தயார் செய்யப்படும் இந்த மாவை விளக்கு போல செய்து, திரி போட்டு நெய் ஊற்றி, தீபம் ஏற்றுவதால் பஞ்சபூத சக்தியை பெறுகிறது. மண்ணில் இருந்து விளையும் நெல்லை கொண்டு உருவாக்கப்படும் அரிசியும், மகிழ்ச்சியின் சின்னமாக இருக்கக்கூடிய வெல்லமும், நீரின் ஆதாரமாக இருக்கக்கூடிய நெய்யும், அக்னிக்கு சாட்சியாக திரியில் எரியும் தீபமும், அதை எரிய வைக்கும் வாயுவும் சேர்ந்து இருப்பதால் பஞ்சபூத சக்தியை பெற்ற இந்த மாவிளக்கை கண்டிப்பாக பெருமாளுக்கு ஏற்றி வைத்து வழிபடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
நாளை 4-10-2025 சனி மகா பிரதோஷம்

புரட்டாசி பௌர்ணமியில் மாவிளக்கு ஏற்றி, எளிய பிரசாதங்கள் தயார் செய்து, மனதார இறைவனின் நாமங்களை ஜெபித்து, அன்றைய நாள் முழுவதும் உணவேதும் உண்ணாமல் விரதம் இருந்து, முழுமூச்சாக இறைவனை நினைத்து வழிபாடு முறைகளை முறையாக செய்து வழிபட வேண்டும். நாலாயிர திவ்ய பிரபந்தம், விஷ்ணு சஹஸ்ரநாமம், “ஓம் நமச்சிவாய” என்னும் எட்டெழுத்து சக்தி வாய்ந்த மந்திரத்தை உச்சரித்து, மாலையில் சந்திரன் உதயமான பிறகு விரதத்தை முடித்து, சந்திர தரிசனம் செய்து அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று, பெருமாளை வழிபட்டு பயனடையலாம்.

சற்று முன்