ஓம் நமசிவாய. நாளைய தினம் சனி மகா பிரதோஷம். ஒரு வருடம் முழுவதும் சிவபெருமானை வழிபாடு செய்த புண்ணியம் உங்களை வந்து சேர வேண்டும் என்றால், நாளைய தினம் வரவிருக்கும் சனி மகா பிரதோஷம் அன்று பிரதோஷ நேரத்தில் ஈசனை தவறாமல் வழிபாடு செய்து விடுங்கள்.
வளர்பிறையில் வந்திருக்கும் அதிசக்தி வாய்ந்த இந்த சனி மகா பிரதோஷத்தன்று அந்த அண்ணாமலையானை மனதார நினைத்தாலே முக்தி கிடைக்கும். “அண்ணாமலையானே போற்றி போற்றி, ஓம் அருணாசலேஸ்வராய நமஹ”, என்ற மந்திரத்தை உச்சரித்து இந்த பதிவுக்குள் பயணம் செய்வோம்.
சிவபெருமானுக்கும் நமக்கும் நெருக்கம் அதிகரிக்க, சிவபெருமானிடம் நாம் வேண்டிய வரங்களை எல்லாம் சுலபமாக பெற, அந்த ஈசனின் பாதத்தில் ஒரு இடம் கிடைக்க, நம்முடைய தீரா கஷ்டங்களுக்கெல்லாம் ஒரு தீர்வு கிடைக்க சிவபெருமானை நினைத்து இந்த ஒரு வரி மந்திரத்தை சொன்னாலே போதும். உங்கள் கஷ்டங்கள் எல்லாம் வேரோடு பிடுங்கி எறியப்படும். கஷ்டத்தை தீர்க்க வந்திருக்கும் அதிசக்தி அந்த ஒரு வரி மந்திரம் என்ன. அந்த மந்திரத்தை நாளை வரக்கூடிய சனி மஹா பிரதோஷத்தன்று எப்படி உச்சரிப்பது.
நாளை 4-10-2025 சனிக்கிழமை சூரிய உதயத்திற்கு முன்பாகவே எழுந்து குளிக்க வேண்டும். குளிக்க கூடிய தண்ணீரில் கொஞ்சம் கல் உப்பு, முடிந்தால் 2 வில்வ இலைகள் இரண்டு சிட்டிகை விபூதி போட்டு கலந்து அந்த தண்ணீரில் தலைக்கு குளிங்க. குளிக்கும் போது, சிவ சிவ நாமத்தை சொல்லிக் கொண்டே குளிக்க வேண்டும். குளித்து முடித்த பிறகு எதுவும் சாப்பிடக்கூடாது. வெறும் வயிற்றில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, சிவபெருமானின் மனதாக நினைத்து இந்த ஒரு வரி மந்திரத்தை சொல்ல வேண்டும்.
சக்தி வாய்ந்த சிவ மந்திரம்
ஓம் ஸ்ரீ வர்தனாய நமஹ !
Om shree vardhanaya namaha!
சனி மஹா பிரதோஷத்தன்று சொல்ல துவங்கிய இந்த மந்திரத்தை, அடுத்த 21 நாட்கள் இடைவிடாமல் சொல்லுங்க. தினம் தினம் 108 முறை சொல்லுங்க. நீங்க சிவபெருமானிடம் என்ன கேட்டீங்களோ, அதை சிவபெருமான் உங்கள் கையில் கொடுத்து விடுவார். இதோடு அந்த சிவபெருமானை ஏதாவது ரூபத்தில் தரிசனம் செய்யக்கூடிய பாக்கியமும் உங்களுக்கு கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே: நாளை 4-10-2025 சனி மகா பிரதோஷம் சிவ மந்திரம்
அந்த ஈசன் உங்கள் கனவில் வரலாம். மனித ரூபத்தில் வந்து உதவலாம். ஏதோ ஒரு ரூபத்தில் 21 நாட்களுக்குள் அந்த சிவனை உணரக்கூடிய பாக்கியம் உங்களுக்கு கிடைக்கும். நம்பிக்கை இருந்தால் மேல் சொன்ன ஆன்மீகம் விஷயங்களை பின்பற்றி பலன் பெறவும்.