உங்கள் வீட்டில் இந்த திசையில் மட்டும் இந்த புகைப்படங்களை மாட்டி வைக்காதீர்கள். புகைப்படங்களும் அதன் திசைகளும்!!

photos-and-directions

எல்லோரது வீட்டிலும் கட்டாயம் இடம்பெறும் ஒரு முக்கிய பொருளாக இருப்பது புகைப்படம். புகைப்படம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் நல்ல நினைவுகளை நினைவூட்டக்கூடிய அரும்பெரும் பொக்கிஷங்கள் ஆகும். இவற்றை முறையாக பராமரிப்பதில் சிலர் அதிக ஆர்வம் கொள்கின்றனர். நாம் எவ்வளவுதான் மன இறுக்கத்தில் இருந்தாலும் பழைய புகைப்படம் ஒன்றை பார்க்கும் போது மனம் அப்படியே முற்றிலுமாக மாறி விடுவதை நம்மில் பலரும் உணர்ந்திருப்போம். ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி நம்மை ஆட்கொண்டு விடும் சக்தியை இப்புகைப்படங்கள் பெற்றுள்ளது. அத்தகைய புகைப்படங்களை எந்த திசையில் மாட்ட வேண்டும்? எந்தத் திசையில் மாட்ட கூடாது? ஏன் அந்த திசையில் மாட்டி வைக்கக் கூடாது? என்பதைப் பற்றி இப்பதிவில் இனி காணலாம்.

marraige-picture

வீட்டில் மாட்டி வைத்திருக்கும் புகைப்படங்களில் முக்கியமாக இருப்பது திருமண புகைப்படம். திருமண புகைப்படங்கள் நல்ல அனுபவங்களையும், நம்மை சார்ந்த உறவுகளை அடிக்கடி நினைவூட்ட கூடிய ஒன்றாக இருக்கிறது. திருமண புகைப்படங்கள் வீட்டில் கட்டாயம் இடம்பெற வேண்டிய புகைப்படங்களில் ஒன்றாக இருக்க வேண்டும். அனைவரது கண்களிலும் தினமும் பார்க்கும் வண்ணம் இப்புகைப்படம் மாட்டி வைப்பது நல்லது.

முந்தைய காலங்களில் எல்லாம் வம்சா வழியாக வரும் அனைவரது புகைப்படங்களும் வரிசையாக, அழகாக மாட்டி வைக்கப்பட்டிருக்கும். எந்த வீட்டிற்கு சென்றாலும் இக்காட்சியை நம்மால் காண முடிந்தது. இதன் உளவியல் காரணம் மிகவும் விசித்திரமானவை. இதுபோன்று வரிசையாக மாற்றி வைக்கும் புகைப்படங்களை தினமும் காணும் பொழுது, நம் உடலில் நேர்மறை சக்திகள் ஊடுருவும் வாய்ப்புகள் உருவாகும் என்கிறது ஆய்வுகள். இச்செயல் நம்முடைய சந்ததிகளை நாம் தெரிந்து கொள்ளவும் உதவிகரமாக இருக்கும். நம் முன்னோர்களின் ஆசியும் இதன் மூலம் நமக்கு பரிபூரணமாக கிட்டும்.

old-photos-on-wall

இதேபோல் குடும்பத்தில் இருக்கும் அனைவரது புகைப்படங்களையும், உங்களது மகிழ்ச்சியான தருணங்களையும் நினைவூட்டும் வகையில் புகைப்படங்களை அனைவரும் காணும் வண்ணம் எந்த திசையில் வேண்டுமானாலும் நீங்கள் மாட்டி வைக்கலாம். ஆனால் இதில் புகைப்படங்கள் மாட்ட கூடாத திசை என்பது தெற்கு திசையாக இருக்கிறது. தெற்கு திசையை நோக்கியபடி உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்களை கட்டாயம் மாட்டி வைக்கக் கூடாது என்கிறது சாஸ்திரம். உயிருடன் இருக்கும் நபரின் புகைப்படத்தை தெற்கு நோக்கியபடி மாட்டி வைப்பதால் வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் அமையும்.

- Advertisement -

இறந்தவர்களின் புகைப்படங்களை தான் தெற்கு திசையில் மாட்டி வைக்க வேண்டும் என்பது சாஸ்திரம் கூறும் முறையாக இருக்கிறது. இந்த காரணத்தினால் தான் அத்திசையில் உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்களை மாட்டி வைக்கக்கூடாது என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக திருமண புகைப்படங்களை எந்த காரணம் கொண்டும் தெற்கு திசையை நோக்கி மாட்டி வைக்காதீர்கள்.

thisaigal

தெற்கு திசையில் மாட்டக்கூடாது என்பது சரியா? அல்லது தெற்கு திசையை நோக்கியபடி மாட்டக்கூடாது என்பது சரியா? என்ற கேள்விகள் எழும். தெற்குத் திசையை நோக்கியபடி மாட்டக்கூடாது என்பதே சரியான பதில். முற்றிலுமாக தெற்கு திசையை தவிர்ப்பது உத்தமம். இருப்பினும் வேறு வழி இல்லாத பட்சத்தில் தெற்கு திசையை நோக்கியபடி மாட்டாமல் இருப்பது நல்லது. தெற்கு திசையை நோக்கியபடி தான் எங்களால் மாட்டி வைக்க முடியும் எனும் பட்சத்தில், நீங்கள் அந்தப் புகைப்படங்களை வேறு ஏதேனும் ஸ்டாண்டில் அல்லது செல்ஃப்களில் வைப்பதே நல்லது.

இதையும் படிக்கலாமே
தினம்தோறும் இந்த 3 பொருட்களை புதியதாக தான் பயன்படுத்த வேண்டும். இல்லை என்றால், எதிர்மறை ஆற்றல் உங்கள் வீட்டை சுற்றிக் கொண்டே இருக்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Where to put family photos in home. Which direction to hang family photos. Ancestors photo direction vastu. Photo vastu in Tamil. Vastu tips for photos.