தினம்தோறும் இந்த 3 பொருட்களை புதியதாக தான் பயன்படுத்த வேண்டும். இல்லை என்றால், எதிர்மறை ஆற்றல் உங்கள் வீட்டை சுற்றிக் கொண்டே இருக்கும்.

vilaku-lemon

நம்முடைய வீட்டில் சில பொருட்களை தினம்தோறும் கண்டிப்பாக, புதிதாக மாற்ற வேண்டியது நம்முடைய கடமை. ஏனென்றால் இந்த பொருட்களில் எல்லாம் கெட்ட ஆற்றல் நிறைந்திருக்கும். அதாவது கெட்ட ஆற்றலை ஈர்த்துக்கொள்ளும் தன்மையானது இந்த பொருட்களுக்கு உண்டு. இந்த வரிசையில் எந்தெந்த பொருட்களை நம்முடைய வீட்டில் தினம்தோறும் மாற்ற வேண்டும்! அந்த குறிப்பிட்ட பொருட்களில் முதல் மூன்று பொருட்களை இன்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

bindi

முதலில் பெண்கள் நெற்றியில் வைக்கும் ஸ்டிக்கர் பொட்டு. பொதுவாக ஸ்டிக்கர் பொட்டு வைத்தாலும், குங்குமப்பொட்டு வைத்துக்கொள்வது சுமங்கலிப் பெண்களுக்கு மிகவும் நல்லது. ஸ்டிக்கர் பொட்டு வைத்துக்கொள்ளும் பெண்களாக இருந்தாலும், நீங்கள் அந்தப் பொட்டை தினம்தோறும் புதியதாக மாற்ற வேண்டும். ஏனென்றால் பொதுவாகவே நம்முடைய நெற்றிப்பொட்டை தாக்கக்கூடிய கெட்ட சக்திகளை, நம் உடலுக்குள் செல்ல விடாமல் தடுப்பது, நம் நெற்றியில் இருக்கும் குங்குமப்பொட்டு.

நீங்கள் நெற்றியில் வைத்திருக்கும் ஸ்டிக்கர் பொட்டும், கெட்ட விஷயங்களை ஈர்த்து வைத்திருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில், தினம்தோறும் அந்த கெட்ட ஆற்றலை, எதிர்மறை ஆற்றலை உங்கள் நெற்றியிலேயே வைத்திருந்தாள்! அந்த எதிர்மறை சக்தியானது உங்களை சுற்றிக் கொண்டே தான் இருக்கும். இப்படி இருக்க, சில பேர் நெற்றியிலிருந்து குளிக்கும் போது கூட, அந்த ஸ்டிக்கர் பொட்டை எடுக்கமாட்டார்கள். குங்குமபொட்டு என்றால் குளிக்கும்போது தானாக போய்விடும். குளித்து முடித்து விட்டு பெண்கள் புதிதாக வைத்துக் கொள்வார்கள். ஸ்டிக்கர் பொட்டிற்க்கும் மட்டும் இது விதிவிலக்காக அமைந்திருக்கிறது. இதனால் தினந்தோறும் உங்கள் நெற்றியில் இருக்கும் ஸ்டிக்கர் பொட்டை மாற்றுவது உங்களுக்கு மிகவும் நல்லது. உங்கள் குடும்பத்திற்கும் நல்லது.

elumichai lemon

அடுத்ததாக வீட்டு வாசலில் வைக்கும் எலுமிச்சை பழம். இந்த எலுமிச்சை பழத்தை சில பேர் வெள்ளிக்கிழமை அன்று ஞாயிற்றுக்கிழமை அன்று அமாவாசை அன்று வைத்து விட்டு அப்படியே, அடுத்த வாரம் வரை கூட மாற்றாமல் பழைய எலுமிச்சை பழத்தை வைத்து வைப்பார்கள். இது மிகவும் தவறு. வெள்ளிக்கிழமை அன்று அந்த எலுமிச்சை பழத்தை காலை நேரத்தில், இரண்டாக அறுத்து ஒரு பக்கம் மஞ்சளும், ஒரு பக்கம் குங்குமமும் தடவி வைத்துவிட்டால், சனிக்கிழமை அன்று, மறுநாள் காலை குளிப்பதற்கு முன்பாகவே அந்த எலுமிச்சை பழங்களை நாம் தூக்கி தூரப் போட்டு இருக்க வேண்டும்.

- Advertisement -

ஏனென்றால் ஒரு நாள் முழுவதும் உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களை அது உறிஞ்சு வைத்திருக்கும். மறுநாள் காலை அந்த இடத்தில் பழைய எலுமிச்சை பழம் இருந்தால், அந்தக் கெட்ட ஆற்றலானது திரும்பவும் நம் வீடு முழுவதும் பரவ வாய்ப்பு இருக்கிறது. தினம்தோறும் எலுமிச்சை பழத்தை வைக்கிறீர்களோ இல்லையோ, முதல் நாள் வைத்த எலுமிச்சை பழத்தை அடுத்த நாள் குளிப்பதற்கு முன்பாகவே தூக்கி தூரம்வீசி விடுங்கள். குளித்து முடித்து விட்டு திரும்பவும் வந்து புதிதாக ஒரு எலுமிச்சை பழத்தை அறுத்து மஞ்சள் குங்குமம் தடவி வாசலின் இரண்டு பக்கத்திலும் வைப்பதுதான் சரியான முறை.

ainthu-muga-vilakku

மூன்றாவதாக ஒரு விஷயம் உள்ளது. தினம் தோறும் வீட்டில் தீபம் ஏற்றுபவர்கள், காலை தீபம் ஏற்றும்போது பழைய விளக்கு திரியை நீக்கி விட்டு புதிய திரியில்தான் தீபமேற்ற வேண்டும். இதே போல் உங்கள் வீட்டு பூஜை அறையில், பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் வைத்து இருந்தாலும், அல்லது பித்தளை சொம்பில் தண்ணீர் வைத்திருந்தாலும், அது இரண்டையும் தினம்தோறும் புதியதாக மாற்றும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள். பழைய தண்ணீரில் இருக்கும் கெட்ட ஆற்றலோடு தீபத்தை ஏற்றினால் அதன் மூலம் நமக்கு எந்த ஒரு நல்ல பலனும் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. முடிந்தவரை சுவாமி படங்களில் இருக்கும் பழைய பூக்களையும் எடுத்துவிட்டு தினம்தோறும் புதிய பூ போடுவது மிக மிக நல்லது.

இதையும் படிக்கலாமே
உங்கள் வீட்டில் பணம் காய்க்கின்ற மரம் வளர வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have How to remove negative energy. Negative energy in home. Negative energy in Tamil. Theeya sakthi vilaga Tamil.