யாராவது பிச்சை கேட்டு வந்தால் என்ன செய்வீர்கள்? தெரியாமல் கூட இந்த தவறை அவர்களிடத்தில் செய்து விடாதீர்கள்!

pichai-begging
- Advertisement -

ஒரு மனிதன் உண்ண உணவில்லாமல் அடுத்தவர்களிடம் பிச்சை எடுப்பது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயமல்ல. சுயமரியாதையை விடுத்து ஒரு மனிதன் சக மனிதனிடம் பிச்சை எடுத்து தன் வயிற்றைக் கழுவும் நிலை அவர்களுக்கு உண்டு என்றால் அவர்கள் தன் பாவத்தை கழித்து கொண்டிருக்கின்றனர் என்று அர்த்தமாகும். இதுவே அவர்கள் சன்னியாசியாக இருக்கும் பொழுது பிச்சை எடுத்தால், அதன் தத்துவம் வேறு! யாராவது உங்கள் வீட்டுக்கு பிச்சை கேட்டு வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? என்ன செய்யக் கூடாது? என்பதைத்தான் இந்த ஆன்மீக பதிவின் மூலம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

சன்யாசிகள் மானம், அவமானம் இல்லாமல் விருப்பு, வெறுப்புகளை கடந்து பிச்சை எடுத்துத் தான் உண்ண வேண்டும் என்பது அவர்களுடைய நியதி! அவர்கள் பிச்சை கேட்பது அவர்களுக்கு இருக்கும் மனித குணத்தை கடந்து, தெய்வீக குணத்தை பெறுவதற்கு வைக்கப்படும் பரிட்சையாக இருக்கிறது. பிச்சை போடாதவர்களை அவர்கள் வெறுக்கக் கூடாது. பிச்சை போட்டாலும், போடாவிட்டாலும் சமமாக பாவிக்க வேண்டும்.

- Advertisement -

பிச்சை கேட்டு சாப்பிடும் உணவு ருசி தரும் என்று சொல்ல முடியாது. ருசியை கடந்து அன்னத்தை தெய்வீகமாக மதித்து அவர்கள் சாப்பிடுவார்கள். மான, அவமானத்தை கடந்து ஒருவரிடம் பிச்சை கேட்டு கடவுளுக்கு வழிபாடு செய்வது ஒரு பரிகாரமாக இருந்து வருகிறது. இந்த பரிகாரத்தை இன்றும் பல இடங்களில் பெண்கள், ஆண்கள் என்று வித்தியாசம் இன்றி செய்து வருவதை பார்த்திருப்பீர்கள்.

கடவுள் என்கிற பெயரில் ஏமாற்றுகிறார்கள் என்றாலும், எல்லோரையும் அப்படி கூறி விட முடியாது. உண்மையிலேயே தெய்வீக பக்தியுடன் கோவிலுக்கு செல்ல வேண்டும், வழிபாடு செய்ய வேண்டும், பரிகாரம் செய்ய வேண்டும் இப்படி ஏதோ ஒரு விஷயத்திற்காக தன்னுடைய சுயமரியாதையை விடுத்து மான, அவமானத்தை துறந்து உங்களிடம் வந்து அவர்கள் பிச்சை கேட்கிறார்கள் என்றால், இத்தகையவர்களை அவமதிப்பது பாவச்செயலாகும். கோயில் கட்ட பணம் கேட்டால் அது எங்கு கட்டப்படுகிறது? உண்மையிலேயே கோவில் கட்டுகிறார்கள், அதற்காகத் தான் பணம் கேட்கிறார்களா? என்பதை அறிந்து கொள்ளாமலேயே அவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்று நீங்களாகவே நினைத்து விரட்டி அடிக்க கூடாது.

- Advertisement -

உங்கள் ஊரில் உள்ள கோவிலுக்கு யார் பணம் வசூலிக்க வருவார்கள்? என்பதை அறிந்து வைத்திருந்து நீங்கள் அவர்களுக்கு கோவில் கைங்கரியங்களில் உதவி செய்வது மிகவும் புண்ணியத்தை சேர்க்கும், எனவே அத்தகையவர்களை அவமதிப்பு செய்வது பாவத்தை சேர்க்கும். உண்மையான பக்தியுடன் உங்களிடம் வந்து பிச்சை கேட்பவர்களுக்கு நீங்கள் பிச்சை போட்டால் அது உங்களுக்கு புண்ணியம் சேரும். அவர்கள் உங்கள் பாவத்தை எடுத்துக் கொள்வார்கள். இது மிக உயர்ந்த தத்துவம் என்று ஆன்மீகம் குறிப்பிடுகிறது. எனவே இனியும் உங்களிடம் யாராவது பேச்சை கேட்டு வந்தால் அவர்களை என்ன? ஏது? என்று கேட்காமலேயே விரட்டி அடிக்க வேண்டாம்.

உங்களால் முடிந்ததை அல்லது இயன்றதை கொடுத்து அனுப்புங்கள். இளம் வயது சிறுவர்கள், சிறுமிகள் கூட ஒருவேளை சாப்பாட்டுக்கு பிச்சை கேட்டு வருவதை பார்த்திருப்போம். அவர்களுக்கு என்ன பிரச்சனை? என்று கேட்கும் அளவிற்கு உங்களிடம் மனம் இல்லாவிட்டாலும், வார்த்தைகளால் நோகடித்து விரட்டி அடிக்காமல் உங்களிடம் இருப்பதை கொடுத்து அனுப்புவது நல்லது. பல புராணங்களில் இறைவன் பிச்சைக்கார வேடம் இட்டு நம்மை சோதிப்பதை பார்த்திருப்போம். ஆதிசங்கரர் பிச்சை கேட்ட பொழுது எதுவுமே இல்லாமல் தன்னிடம் இருக்கும் நெல்லிக்கனியை கொடுத்தத்தால், அவருடைய வீட்டில் பொற்காசு மழை பொழிந்து மகாலட்சுமி அருள் புரிந்தாள்.

- Advertisement -