பிலவ வருடத்தில் வரவிருக்கும் பேராபத்து! அதிரவைக்கும் ஆற்காடு பஞ்சாங்கத்தின் தகவல்கள்! மீண்டும் இந்த உலகம் பேரழிவை சந்திக்குமா?

- Advertisement -

ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி புதன்கிழமை அன்று, பரணி நட்சத்திரத்தில் துவிதியை திதியில் தமிழ் புத்தாண்டு பிறந்தது. கடந்த வருடம் நாம் சந்தித்து வந்த கஷ்டங்களுக்கு இந்த பிலவ வருடம் நல்ல மாற்றங்களை கொண்டு வருமா? இல்லை, இந்த உலகம் மீண்டும் பேராபத்தை சந்திக்குமா?  குறிப்பாக கடந்த வருடம் நாம் சந்தித்த கொரானா வைரஸ் தொற்று பாதிப்பானது, இந்த புதுவருடத்தில் புது அவதாரம் எடுத்து நம்மை அச்சுறுத்தி வருகின்றது. இந்தப் புது வருடத்திலாவது மக்களுக்கு நல்ல காலம் பிறக்குமா? ஆற்காடு பஞ்சாங்கம் நமக்கு என்னதான் சொல்கிறது. தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.

panjangam1

புதிய நோய் தொற்றுகள்:
கடந்த வருடம் மனிதர்களுக்கு மட்டும் ஏற்பட்ட நோய்த் தொற்றானது இந்த வருடம் மிருகங்களையும் பாதிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. கால்நடைகள் அதிக அளவில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு, துயரத்தை அனுபவிக்கும். கால்நடைகள் அதிக அளவில் உயிரிழக்க நேரிடும். குறிப்பாக இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் இருக்கும் தென் கொரியா, ஜப்பான், சீனா, பர்மா போன்ற நாடுகளில் இருந்து நோய் தொற்று, வைரஸ் காய்ச்சல் பரவுவதற்கு அதிகமாக வாய்ப்பு உள்ளது என்று சொல்லப்பட்டுள்ளது. புதிய நோய் தொடரின் மூலம் பல இழப்புகளை சந்திக்க நேரிடும்.

- Advertisement -

பேரழிவு:
பருவநிலை மாறி பெய்யக் கூடிய மழையினால் இந்த வருடம் சில அழிவுகள் ஏற்படும். குறிப்பாக சென்னையில் அதிக அளவு மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாகச் ஆற்காடு பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டுள்ளது‌. சென்னை முழுவதும் 2 நாட்களுக்கு ஸ்தப்பித்து போய் விடும். மின் வசதி இல்லாமல், வாகன வசதி இல்லாமல் மக்கள் அவதிக்கு உள்ளாவார்கள். சீனா, அமெரிக்கா, ரஷ்யா, ஈரான் ஈராக், போன்ற பகுதிகளில் இயற்கை சீற்றங்களின் மூலம் பேரழிவு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக சூறைக் காற்றின் மூலமாக பல அழிவுகளைச் சந்திக்க நேரிடும். குறிப்பாக தமிழ்நாட்டில் பெரும்பாலான அணைகள் நீர்நிலைகள் தண்ணீரில் நிரம்பி வழியும்.

panjangam2

விலைவாசி உயர்வு:
விலைவாசி உயர்வைப் பற்றி சொல்லவே வேண்டாம். நாட்டில் இப்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில் மக்கள் கையில் பணப்புழக்கமும் என்பதே இல்லை. இந்த வருடம் மேலும் பண கஷ்டம் அதிகரிக்கத்தான் செய்யும். ஒரு பக்கம் விலைவாசி உயர்வு. மறுபக்கம் இயற்கை சீற்றத்தின் மூலம் அழிவு. ஒரு பக்கம் நோய்த்தொற்று, மக்கள் வாழ்வாதாரங்களை இழக்க கூடிய சூழ்நிலை என்று பலவகை கஷ்டங்கள் சூழ்ந்து பணப்பற்றாக்குறை உண்டாகும். நம் நாடே நிதிப் பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கும் என்பதும் பஞ்சாங்கத்தின் கணிப்பு தான்.

- Advertisement -

விபத்துகளும் இழப்புகளும்:
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாட்டில் அதிகரிக்க தொடங்கும். குற்றவாளிகளுக்கான தண்டனைகளும் அதிகரிக்கப்படும். அதிகப்படியான சாலை விபத்துகள் உண்டாக வாய்ப்பு உள்ளது. அதில் நிறைய உயிர் இழப்புகளும் ஏற்படும். உலக அளவில் பல நாடுகளுக்கு இடையே போர் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளதாகச் சொல்லப்பட்டுள்ளது.

panjangam3

வேலைவாய்ப்புகள்:
இந்த வருடம் அந்நிய நாடுகளுடன் கைகோர்த்து புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். நம் நாட்டில் புதிய தொழில்கள் தொடங்கப்பட்டு, நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. இருப்பினும் தொழிலாளர்கள் கைகளுக்கு வரும் வருமானம் என்பது குறைவாகத்தான் இருக்கும். மக்களுக்கு பணப்பிரச்சனை பல வகைகளில் வந்து கொண்டே இருக்கும்.

புதையல்:
இந்த வருடம் அரசாங்கத்திற்கு புதையல் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் இருக்கும் கனிம வளங்களை அரசாங்கம் கைப்பற்றிக் கொள்ளும்.

panjangam4

ஆக மொத்தத்தில் கடந்த வருடம் நாம் கடந்துவந்த கசப்பான பாதை, இந்த வருடத்திலும் தொடரும் என்று தான் சொல்லப்பட்டுள்ளது. இருப்பினும் விதியை மாற்ற கூடிய வலிமை அந்த ஆண்டவன் கையில் உள்ளது. மக்களுக்கு வரக்கூடிய துயரத்தை குறைக்க அந்த ஆண்டவனை மனதார பிரார்த்தனை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியே கிடையாது. நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -