- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநோய் நொடிகள் விலக திருப்புகழ்

நோய் நொடிகள் விலக திருப்புகழ்

- Advertisement -

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சொல்லுவார்கள். ஆனால் சில பேர் வீடுகளில் இன்று அரிசி பருப்பு, தானிய வகைகள் நிறைவாக இருக்கிறதோ இல்லையோ, மருந்து மாத்திரைகளுக்கு குறைவில்லாமல் இருக்கிறது. சிறு குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை ஆரோக்கியமற்ற சூழ்நிலையில் இருக்கின்றோம். இந்த நிலைமை மாற வேண்டும்.

எங்களுக்கு நோய் தீர வேண்டும் என்றால், இந்த கந்த சஷ்டி விரத நாட்களில் முருகப்பெருமானை எந்த திருப்புகழ் பாடி வழிபாடு செய்வது. அருணகிரிநாதர் நமக்காக அருளிய நோய் நொடி தீர்க்கும் அந்த திருப்புகழ் பாடல் வரிகளை இந்த பதிவின் மூலம் நாமம் தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

நோய் தீர்க்கும் திருப்புகழ்

இருமல் உரோகம் முயலகன் வாதம்
எரிகுண நாசி விடமே நீர்
இழிவு விடாத தலைவலி சோகை
எழுகள மாலை இவையோடே

பெருவயிறு ஈளை எரிகுலை சூலை
பெருவலி வேறும் உளநோய்கள்
பிறவிகள் தோறும் எனை நலியாத
படிஉன் தாள்கள் அருள்வாயே

- Advertisement -

வரும் ஒரு கோடி அசுரர் பதாதி
மடிய அநேக இசைபாடி
வரும் ஒரு கால வயிரவர் ஆட
வடிசுடர் வேலை விடுவோனே

தருநிழல் மீதில் உறைமுகில் ஊர்தி
தரு திரு மாதின் மணவாளா
ஜலமிடை பூவின் நடுவினில் வீறு
தணிமலை மேவு பெருமாளே!

- Advertisement -

இதுதான் நோய் தீர்க்கும் திருப்புகழ் பாடல். இதற்கு உண்டான பொருள் என்ன என்பதையும் தெரிந்து கொள்வோம். இருமல், ரோகம், முடக்கு வாதம், எரிவாயு, விஷநோய்கள், நீரிழிவு, தீராத தலைவலி, சோகை, எழுகள மாலை இப்படி எந்த நோயும் இப்பிறவியிலும், எப்பிறவியிலும் எனக்கு வரக்கூடாது. நோய் வராமல் பாதுகாக்க உன்னுடைய வேல் தான் என்னை காக்க வேண்டும்.

நோயிலிருந்து தப்பிக்க உன் திருவடியில் இடம் தந்து எனக்கு அருள் புரிய வேண்டும். கோடிக்கணக்கான அசுரர்களை அழித்த வேலாயுதனே, தேவேந்திரனின் மகளான தெய்வயானை மணாலனே, திருத்தணிகை மலையில் வாழும் பெருமானே என்னையும் கொஞ்சம் காத்தருள்வாயாக. இப்படியாக முருகனை வர்ணித்து, நோய்நொடி விலக அருணகிரிநாதர் இப்படி ஒரு அற்புதமான திருப்புகழை நமக்கு அளித்துள்ளார். இந்த பாடலை எப்படி முருகப் பெருமான் முன்பு உச்சரிப்பது.

ஏதாவது முருகன் கோவிலுக்கு சென்று அந்த கோவிலில் இரண்டு நெய் விளக்குகள் ஏற்றி வைத்து, முருகனை 6 முறை வலம் வந்து முருகப்பெருமான் முன்பு அமர்ந்து, முருகப்பெருமானின் வேல் முன்பு அமர்ந்து மயில் முன்பு அமர்ந்து, இந்த பாடலை படிக்கலாம். மொத்தம் 6 முறை மனம் உருகி இந்த பாடலை படிப்பவர்களுக்கு, தீராத நோய்நொடி பிரச்சனை தீரும்.

உங்கள் வாயில் மட்டும் இந்த பாடலின் மந்திர வார்த்தைகள் ஒளிக்கக்கூடாது. ஆழ்மனதிலிருந்து முருகா, என்னை காப்பாற்று, உன்னை நம்பி நீயே கதி என்று வந்துள்ளேன். இந்த நோய்நொடி பிரச்சனையிலிருந்து என்னை காப்பாற்று என்று சொல்லி, இந்த பாடலை 100% நம்பிக்கையோடு உச்சரிப்பவர்களுக்கு நிச்சயம் தீராத நோய் நொடி தீரும்.

இதையும் படிக்கலாமே: கெட்ட கர்மா கழிய சிவன் வழிபாடு

இந்த சஷ்டி விரத நாட்களில் மட்டும் இந்த பாடலை படிக்காமல், தினம்தோறும் காலையில் எழுந்து ஒரு முறை இந்த பாடலை படித்துவிட்டு முருகப்பெருமானை வணங்கி சென்றால், நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியத்தோடு வாழலாம் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்