- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகாரிய தடை விலக பிள்ளையார் சுழி பரிகாரம்

காரிய தடை விலக பிள்ளையார் சுழி பரிகாரம்

- Advertisement -

இன்றைய தினம் இந்த தமிழ் வருட பிறப்பிற்கு பிறகு, வந்திருக்கும் முதல் சங்கடஹர சதுர்த்தி. அதுவும் புதன்கிழமையோடு சேர்ந்து இந்த சிறப்பு வாய்ந்த சங்கடஹர சதுர்த்தி வந்திருப்பது இரட்டிப்பு சிறப்பு. இந்த நாளில் கட்டாயம் அனைவரும் விநாயகர் வழிபாட்டை செய்ய வேண்டும். புதன் பகவானின் அருள் கிடைத்தால் வாழ்வில் புத்திசாலித்தனமாக செயல்பட்டு வெற்றி காண முடியும்.

இன்று விநாயகரை வணங்குவதன் மூலம் புதன் பகவானின் அருள் கிடைக்கும். நம்முடைய சங்கடங்கள் எல்லாம் விரைவில் தீர வேண்டும் என்றால், இன்று செய்ய வேண்டிய ஒரு எளிமையான, பிள்ளையார் சுழி பரிகாரத்தை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இது கொஞ்சம் புதுமையான பரிகாரமாக தெரியலாம். இருந்தாலும் இந்த பரிகாரத்திற்கு பல மடங்கு சக்தி இருக்கிறது.

- Advertisement -

எந்த ஒரு சுபகாரியத்தை தொடங்க வேண்டும் என்றாலும், முதலில் பிள்ளையார் சூடி தான் போடுவார்கள். உங்களுடைய வாழ்க்கையில் சுபம் உண்டாக வேண்டுமா? இந்த பிள்ளையார் சுழியை இன்று, இப்படி போடுங்கள். இனி உங்கள் வாழ்க்கையில் நீங்கள் துவங்கும் அனைத்து காரியங்களும் சுகமாகத்தான் முடியும். வாங்க இந்த பரிகாரத்தை எப்படி செய்யலாம் என்று விரிவாக பார்த்து விடுவோம்.

பொதுவாகவே சங்கடஹர சதுர்த்தி வழிபாடு என்பது மாலை நேர வழிபாடு தான். ஆகவே, இன்று மாலை 6:30 மணிக்கு மேலாக பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, ஒரு வெள்ளை காகிதத்தை உங்கள் கையில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் மஞ்சளில் தண்ணீரோ, அல்லது பன்னீரோ ஊற்றி, கரைத்துக் கொள்ளுங்கள். இந்த மஞ்சளை வலது கை ஆள்காட்டி விரலால் தொட்டு, அந்த வெள்ளை பேப்பரில் பிள்ளையார் சுழி போடுங்கள். இந்த பிள்ளையார் சுழிக்கு கீழே உங்களுடைய வேண்டுதலை எழுத வேண்டும். இவ்வளவுதான் பரிகாரம்.

- Advertisement -

ஏதாவது ஒரு வேண்டுதலை பேனாவில் எழுதினாலேயே எழுதினால் போதும். பிள்ளையார் சுழி மட்டும் தான் மஞ்சளில் போட வேண்டும். இந்த பேப்பரை எடுத்து நான்காக மடித்து உங்கள் கைகளில் வைத்துக் கொண்டு, விநாயகரிடம் மனப்பூர்வமாக வேண்டுதல் நிறைவேற்ற வேண்டும் என்று, பிரார்த்தனை வைத்து கொள்ளுங்கள்.

பிறகு இந்த பேப்பரை உங்கள் வீட்டில் பிள்ளையாரது திருவுருவப்படத்திற்கு கீழே வைத்து விட வேண்டும். பிள்ளையாரின் சிலை இருந்தால், அந்த சிலை அடிப்படையில் இந்த பேப்பரை வைத்து விடுங்கள். நீங்கள் இந்த பேப்பரில் எழுதிய வேண்டுதலானது, அடுத்த சங்கடகர சதுர்த்திக்குள் நிறைவேற நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு, காரிய தடை விலகும்.

- Advertisement -

உங்கள் வாழ்வில் ஏதேனும் முயற்சிகளில் காரிய தடைகள் இருக்கிறது என்றால், அந்த முயற்சிகள் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காகவும் இந்த பரிகாரத்தை செய்யலாம். திருமண தடை விலக, குழந்தை பாக்கியம் கிடைக்க, பிள்ளைகளுக்கு ஆரோக்கியம் பெறுக, இப்படி என்ன வேண்டுதல் வைத்தாலும் நிறைவேறும். உங்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்தாலும் அந்த பிரச்சனைகள் தீருவதற்கு இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: செல்வ செழிப்புடன் வாழ சங்கடஹர சதுர்த்தி பரிகாரம்

மீண்டும் ஒருமுறை பதிவு செய்து கொள்கின்றோம். ஏதாவது ஒரு வேண்டுதலை வைத்து இந்த சங்கடஹர சதுர்த்திக்கு இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும். இன்று மஞ்சளில் பிள்ளையார் சுழி வரைபடவர்களுக்கு நிச்சயம் வாழ்வில் சுபம் காத்துக் கொண்டிருக்கிறது. வேண்டுதல் நிறைவேறிய பிறகு அந்த பேப்பரை எடுத்து கிழித்து கால் படாத இடத்தில் போட்டு விடவும். சக்தி வாய்ந்த இந்த பரிகாரத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் மட்டும் பின்பற்றி பலன் பெறுங்கள்.

சற்று முன்