வாழ்க்கையில் எனக்கு எந்த ஒரு சந்தோஷமும் இல்லை. சிரிப்பை மறந்து விட்டோம். வீட்டில் அடுத்தடுத்து கஷ்டங்கள். அடுத்தடுத்து கெட்ட விஷயங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. ஒரு நல்ல காரியத்தை கூட செய்ய முடியவில்லை. வீட்டில் இருப்பவர்களுக்கு கெடுதலுக்கு மேல் கெடுதல் நடந்து கொண்டே இருக்கிறது. இந்த கொடுமையான வாழ்க்கையில் இருந்து தப்பித்து சந்தோஷமான வாழ்க்கையைப் பெற என்ன வழிபாடு செய்வது.
கண்ணை மூடிக்கொண்டு செல்லலாம். இப்படிப்பட்ட கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் பிள்ளையாரை தான் வழிபாடு செய்ய வேண்டும். உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் வெள்ளருக்கனால் செய்யப்பட்ட பிள்ளையாரை வாங்கி வீட்டில் வைத்து தினமும் அவரை கும்பிடுங்கள். அவருக்கு ஒரு அருகம்புல் வைத்து ஏதாவது ஒரு பிரசாதம் வைத்து 2 சாக்லேட் ஆவது வாங்கி வைத்து பிள்ளையாரப்பா என்னை காப்பாற்று என்று கும்பிட்டாலே போதும்.
உங்களுடைய பிரச்சனைகளில் பாதி முடிந்துவிடும். ஒரு நாள் இந்த வழிபாட்டை செய்துவிட்டு பலனை எதிர்பார்க்கக் கூடாது. தினம் தினம் அந்த பிள்ளையார் பாதங்களை பணிய வேண்டும். தினமும் இந்த நான்கு வரி பாடலை மனம் உருகி பாடுங்கள் போதும்.
பிள்ளையாருக்கு உகந்த பாடல் வரிகள்
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறைபோலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
உங்களுக்கு கெட்டது செய்யும் அத்தனை கிரகங்களும் உங்களுக்கு நல்லது செய்ய தொடங்கிவிடும். உங்களுக்கு நேரம் காலமே சரியில்லை. வாழ்க்கையில் எதுவுமே உங்களுக்கு இப்போது தொட்டால் விளங்காது என்ற சூழ்நிலை இருந்தாலும், அந்த சூழ்நிலையை மாற்றக்கூடிய சக்தி இந்த பிள்ளையார் வழிபாட்டிற்கு உண்டு. இதை போன போக்கில் செய்யக்கூடாது.
இதையும் படிக்கலாமே: அதி சக்தி வாய்ந்த துர்க்கை அம்மன் வழிபாடு
நம்பிக்கையோடு ஒரு தவம் போல் செய்ய வேண்டும். மொத்தமாக இப்படி பிள்ளையாரை கும்பிட உங்களுக்கு ஐந்து நிமிடம் தான் ஆகும். வாழ்க்கையில் ஆயுள் முழுவதும் சூப்பரா வாழ வேண்டும் என்றால் இந்த ஐந்து நிமிடத்தை பிள்ளையாருக்காக ஒதுக்குவதில் ஒன்றும் தவறில்லை. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த ஆன்மீகம் வழிபாட்டை பின்பற்றி பலன் பெறுங்கள்.