பிள்ளையார் பட்டி விநாயகர் கோவில் பற்றிய முழு தகவல்

Pillayarpatti Vinayagar

“ஓம்” எனும் பிரணவ மந்திரத்தின் வடிவத்தை கொண்டவர் விநாயகப்பெருமான். நமது நாட்டில் மிக பழமையான காலம் தொட்டே விநாயகர் வழிபாடு முறை இருந்து வருகிறது. நமது வினைகள் அனைத்தையும் விலக்குபவர் விநாயகர். அப்படி வேண்டும் பக்தர்களின் அணைத்து வினைகளையும் தீர்க்கும் பிள்ளையார்பட்டி அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தின் சிறப்புகளை இங்கு காணலாம்.

Pillayarpatti temple

பிள்ளையார்பட்டி தல வரலாறு

சுமார் 1600 ஆண்டுகள் பழமையான இக்கோவில் ஒரு “குடைவரை” கோவிலாகும். இந்த வகை கோவில்களை கட்டுவதில் சிறந்தவர்களாக விளங்கியவர்கள் “பல்லவ” மன்னர்கள். அவர்கள் வழி வந்த மகேந்திர வர்ம பல்லவ மன்னனால் கட்டப்பதே இந்த கோவில் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இக்கோவிலின் மூலவரான விநாயகர் “கற்பக விநாயகர்” என அழைக்கப்படுகிறார். தென்னிந்தியாவில் “அர்ஜுன வன திருத்தலங்கள்” நான்கு இருக்கிறது. அதில் தமிழ் நாட்டில் மூன்றும், ஆந்திர மாநிலத்தில் ஒன்றும் இருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் மூன்றில் “பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலும்” ஒன்று.

தல சிறப்பு

முருகனுக்கு தான் ஆறு படை வீடுகள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். விநாயகருக்கும் ஆறு படைவீடுகள் இருக்கின்றன. அதில் இந்த பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம் விநாயகரின் “ஐந்தாம்” படை வீடாக கருதப்படுகிறது. விநாயகருக்கு தேர்த்திருவிழா நடக்கும் ஒரு சில கோவில்களில் இதுவும் ஒன்று. அப்பொழுது விநாயகருக்கும், சண்டிகேஸ்வரருக்கும் தேர்கள் இழுக்கப்படுகின்றன. பிள்ளையாருக்கான தேரை இழுக்கும் போது, தேரின் ஒரு வடத்தை ஆண்களும் மற்றொரு வடத்தை பெண்களும் பிடித்து தேரை இழுக்கின்றனர். சண்டிகேஸ்வரரின் தேரை பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே இழுக்கின்றனர். இக்காலத்தில் கோவிலில் 9 நாட்களுக்கு விழா நடத்தப்படுகிறது. ஒன்பது நாள் விழாவின் இறுதி நாளில் பிள்ளையாருக்கு “80 கிலோ சந்தனகாப்பு” சாற்றப்படுகிறது. ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே செய்யப்படும் இந்த அலங்கார காட்சியை காண்பதற்காகவே பக்தர்கள் பெருமளவில் இக்கோவிலுக்கு வருகை தருகின்றனர்.

vinayagar

- Advertisement -

பிள்ளையார்பட்டி கோவிலின் சிறப்பாக, விநாயகர் சதுர்த்தி தினத்தன்று முக்குறுணி அரிசியை கொண்டு தயாரிக்கப்படும் மிகப்பெரிய “கொழுக்கட்டை” விநாயகருக்கு படைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்ட பின்பு, அக்கொழுக்கட்டை ஊரார்களுக்கும், பக்தர்களுக்கும் அருட்பிரசாதமாக வழங்கப்படுகிறது. கல்விகளில் மேன்மை பெற, வறுமை நிலை மாற, குழந்தை பாக்கியம் பெறுவதற்காக பக்தர்கள் வேண்டிக்கொள்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் விநாயகருக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் வழிபடுகின்றனர்.

vinayagarகோவில் அமைவிடம்

ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம் சிவகங்கை மாவட்டத்திலுள்ள பிள்ளையார்பட்டி எனும் ஊரில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு செல்ல பேருந்து மற்றும் வாடகை வாகன வசதிகளும் உள்ளன.

கோவில் நடை திறந்திருக்கும் நேரம்

காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும். மாலை 4 மணிமுதல் இரவு 8 மணி வரையும் நடை திறந்திருக்கும்

கோவில் முகவரி

அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் கோவில்,
பிள்ளையார்பட்டி,
சிவகங்கை மாவட்டம் – 630207

தொலைபேசி எண்

4577 264260
4577 264240
4577 264241

இதையும் படிக்கலாமே:
வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் சிறப்புக்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Pillayarpatti temple details in Tamil. Pillayarpatti temple details history in Tamil, address, Pillayarpatti kovil contact number in Tamil. Pillayarpatti kovil timings in Tamil