நம் வீட்டு பூஜை அறையில் இருக்கும் பித்தளை பாத்திரங்களாக இருந்தாலும் சரி, நம் சமையலறையில் பயன்படுத்தும் பித்தளை பாத்திரங்களாக இருந்தாலும் சரி, அவைகளை தேய்த்து சுத்தப்படுத்துவதில் நமக்கு கொஞ்சம் சிரமம் இருக்கும். என்னதான் அழுத்தி தேய்த்து கழுவினாலும், அந்த பித்தளை பாத்திரங்கள் கருப்பு நிறத்திலேயே இருக்கும்.
உங்க வீட்டில் நீண்ட நாட்களாக வருட கணக்கில் பயன்படுத்தாத பித்தளை பாத்திரங்களாக இருந்தால் கூட சரி, அவைகளையெல்லாம் நிமிடத்தில் பளிச்சென மாற்ற இதோ ஒரு சூப்பர் ஐடியா. இந்த லிக்விடை தயார் செய்து வைத்துக்கொண்டு, அந்த பித்தளை பாத்திரங்களின் மேலே ஊற்றி வெறும் கைகளால் தேய்த்தாலே போதும். பித்தளை பாத்திரம் புதுசு போல ஜொலி ஜொலிக்கும். அந்த லிக்விடை எப்படி தயார் செய்வது பயனுள்ள வீட்டுக்குறிப்பு பதிவில் தெரிந்து கொள்வோமா.
பித்தளை பாத்திரங்களை சுத்தம் செய்ய டிப்ஸ்
இந்த லிக்விட் தயார் செய்ய மூன்று பொருட்கள் தேவை. லெமன் சால்ட், பாத்திரம் தேய்க்கும் லிக்விட் அல்லது துணி துவைக்கும் லிக்விட், எலுமிச்சை பழ சாறு இந்த 3 பொருட்கள் போதும். இந்த மூன்று பொருட்களை ஒன்றாக சேர்த்து இதை கலப்பதற்கு தேவையான அளவு குடிக்கின்ற நல்ல தண்ணீர். ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் லெமன் சால்ட், பாத்திரம் தேய்க்கும் லிக்விட் 3 ஸ்பூன், 2 பழத்தின் எலுமிச்சை பழச்சாறை எடுத்து ஊற்றி நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு ஒரு பெரிய சொம்பு அளவு தண்ணீரை ஊற்றி கலந்தால் ஒரு லிக்விட் தயாராகிவிடும். இதை ஒரு வாட்டர் கேனில் ஊற்றி வைத்துக் கொள்ளவும். லெமன் சால்ட் (எலுமிச்சை உப்பு) எல்லாம் மல்லிகை கடைகளிலும், சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வெறும் 10 ரூபாய்க்கு இந்த பொருள் உங்களுக்கு கிடைக்கும். இந்த லிக்விட் ஒரு மாதம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.
தயார் செய்த இந்த லிக்விடை பித்தளை பாத்திரங்களின் மேல் ஊற்றி லேசாக உங்கள் கையைக் கொண்டு தேய்த்தாலே போதும். பித்தளை பாத்திரங்களில் இருக்கும் கருப்பு நிறம் முழுமையாக நீங்கும். இதில் வாஷிங் லிக்விட் சேர்த்திருப்பதால் பூஜை பாத்திரங்களில் இருக்கும் எண்ணெய் பிசுக்கும் சுலபமாக நீங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பூஜை பாத்திரங்களை இந்த லிக்விட் கொண்டு தேய்த்து நல்ல தண்ணீரில் கழுவி விட்டு உடனடியாக ஒரு காட்டன் துணியை வைத்து சுத்தமாக துடைத்து விடுங்கள். தேய்த்த பாத்திரம் பளபளப்பாக மாறும். பாத்திரம் நீண்ட நாட்களுக்கு கருக்காமலும் இருக்கும்.
பல வருடங்களாக கழுவாமல் வைத்திருந்த பித்தளை பாத்திரங்களாக இருந்தால், அதன் மேலே இந்த லிக்விடை ஊற்றி, ஒரு பத்து நிமிடம் ஊற வைத்து லேசாக ஸ்பாஞ்சனார் போட்டு தேய்த்து கழுவினாலே போதும். பித்தளை பாத்திரத்தில் இருக்கும் கருமை நிறம் முழுமையாக நீங்கிவிடும். இந்த லிக்விடை ஊற்றி கையைக் கொண்டுதான் தேய்க்க வேண்டுமா? கட்டாயம் கிடையாது.
நீங்கள் நார் வைத்தும் தேய்க்கலாம். எளிமையாக சுத்தம் செய்யக்கூடிய முறை இது என்பதற்காக, கையால் தேய்த்தாலே போதும் என்ற வார்த்தை சொல்லப்பட்டுள்ளது. உங்களுக்கு கைகொண்டு தேய்க்க இஷ்டம் இல்லை என்றால், நார் கொண்டு லேசாக தேய்த்து சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே: 20-02-2025 தேய்பிறை அஷ்டமி வழிபாடு
நிறைய பேர் வீட்டில் செம்பு பாத்திரங்களும் தற்போது பயன்படுத்தி வருகிறார்கள். செம்பு பாத்திரம் சுத்தம் செய்யவும் இந்த லிக்விடை பயன்படுத்தலாம். செம்பு டம்பளர் பித்தளை டபராசெட்டில் நிறைய பேர் இப்போது காபி குடிக்கிறார்கள். அதையெல்லாம் சுத்தம் செய்வதற்கு இந்த லிக்விட் நிச்சயம் உங்களுக்கு, அன்றாடம் பயனுள்ளபடி இருக்கும். இந்த வீட்டு குறிப்பு பிடித்தவர்கள் ட்ரை பண்ணி பாருங்க.