- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபிரச்சினைகள் தீர வழிகாட்டும் விநாயகர் வழிபாடு

பிரச்சினைகள் தீர வழிகாட்டும் விநாயகர் வழிபாடு

- Advertisement -

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு பிரச்சனை என்பது இருந்து கொண்டு தான் இருக்கும். ஒரு பிரச்சனை முடிந்த பிறகு மற்றொரு பிரச்சினை புதிதாக பூகம்பம் போல் வரும். பூகம்பம் போல் வந்த பிரச்சினையும் புஸ்வானமாக மாறுவதற்கு நமக்கு தெய்வ வழிபாடு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. எப்பேர்ப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் அந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக முயற்சிகளை மேற்கொள்ளும் பொழுது தெய்வத்தின் அருள் இருந்தால் தான் அந்த பிரச்சனைக்கு ஒரு முடிவே கிடைக்கும் என்று கூட கூறலாம். அப்படிப்பட்ட ஒரு தெய்வ வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

விநாயகர் வழிபாடு

நம்முடைய வாழ்க்கையில் நமக்கு ஏற்படக்கூடிய ஒவ்வொரு விதமான பிரச்சினைக்கும் ஒவ்வொரு விதமான கடவுளை ஒவ்வொரு விதமான வழிப்பாட்டு முறையை பயன்படுத்தி வழிபாடு செய்திருப்போம். ஏன் பரிகாரங்கள் கூட செய்திருப்போம். இப்படி எவ்வளவோ வழிபாடுகளும் பரிகாரங்களும் இருந்தாலும் நம்முடைய வாழ்க்கையில் பிரச்சினைக்கு எந்தவித குறையும் இல்லாமல் புதிது புதிதாக வந்து கொண்டே தான் இருக்கிறது.

- Advertisement -

எப்பேர்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் அந்தப் பிரச்சினைகள் தீர்ந்து நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கு உதவக்கூடிய தெய்வமாக திகழக் கூடியவர் தான் விநாயகப் பெருமான். விநாயகப் பெருமானிடம் எந்த பிரச்சினையை வேண்டுமானாலும் முன்வைத்து வழிபாடு செய்யலாம். அப்படி முழுமனதோடு விநாயகப் பெருமானை வழிபாடு செய்தோம் என்றால் அவரின் அருளால் எந்த பிரச்சினையாக இருந்தாலும் அவை தீர்வதற்குரிய நல்ல வழியை விநாயகப் பெருமாள் அருள்வார்.

இந்த வழிபாட்டை சதுர்த்தி தினத்தில் செய்வது என்பது மிகவும் சிறப்பு. டிசம்பர் மாதம் நான்காம் தேதி மதியம் 1:08 மணி அளவில் சதுர்த்தி திதி என்பது ஆரம்பம் ஆகிறது. அன்று மாலை அதாவது டிசம்பர் மாதம் நான்காம் தேதி புதன்கிழமை மாலை அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது விநாயகப் பெருமானுக்கு உகந்த அருகம்புல்லை வாங்கிக் கொள்ளுங்கள், ஒரு தேங்காயையும் வாங்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

விநாயகர் ஆலயத்திற்கு சென்று அருகம்புல்லை விநாயகருக்கு சமர்ப்பணம் செய்துவிட்டு தேங்காயை உடைக்க சொல்லி விநாயகரின் பாதத்தில் வைக்கச் சொல்லுங்கள். அப்படி வைத்த பிறகு உங்களுடைய பிரச்சினைகள் என்னென்ன இருக்கிறதோ அந்த பிரச்சனைகள் அனைத்தும் தீர வேண்டும். வந்த பிரச்சினையும் இனிமேல் வரப்போகும் பிரச்சினையும் தீர வேண்டும். அதுக்கு விநாயகப் பெருமானின் அருள் கண்டிப்பாக வேண்டும் என்று முழுமனதோடு விநாயகப் பெருமானை வழிபாடு செய்து கொள்ளுங்கள்.

வழிபாடு அனைத்தும் செய்து முடித்த பிறகு விநாயகப் பெருமானின் பாதத்தில் இருக்கக்கூடிய தேங்காயிலிருந்து ஒரே ஒரு மூடியை மட்டும் கேட்டு வாங்கி வீட்டிற்கு கொண்டு வர வேண்டும். வீட்டிற்கு கொண்டு வந்த அந்த தேங்காயை வீட்டில் இருக்கக்கூடிய அனைவரும் உண்ண வேண்டும்.

இதையும் படிக்கலாமே:மழை நீர் பரிகாரம்

இப்படி ஒவ்வொரு சதுர்த்தி தினத்திலும் நாம் விநாயகர் பெருமானை வழிபாடு செய்தோம் என்றால் நமக்கு இதுவரை இருந்து வந்த பிரச்சினைகளும் சரி, இனிமேல் வரப்போற பிரச்சினைகளும் சரி விநாயகப் பெருமானின் அருளால் சூரியனைக் கண்ட பனி போல மறைந்து போகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்