- Advertisement -

மழை நீர் பரிகாரம்

- Advertisement -

ஒரு வீட்டில் இருக்கும் சகல விதமான கண் திருஷ்டிகள் தோஷங்கள் விலக வேண்டும், வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் அனைத்தும் வெளியேற வேண்டும். வீட்டில் எப்போதும் நல்ல சக்திகள் நிலையாக குடி கொண்டு இருக்க வேண்டும், நவகிரகங்களின் ஆசி முழுமையாக நமக்கு கிடைக்க வேண்டும், தேவர்களின் ஆசியும் நம் வீட்டிற்கு கிடைக்க வேண்டும் என்றால் பூஜை அறையில் இந்த தீர்த்தத்தை கொண்டு வந்து வைத்தாலே போதும்.

கஷ்டங்கள் நம்முடைய வீட்டில் நிலையாக தாங்காது. பூஜை அறையில் கட்டாயம் வைக்க வேண்டிய அந்த தீர்த்தம், என்ன தீர்த்தம் தெரியுமா. ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

திருஷ்டி தோஷம் விலக மழை நீர் பரிகாரம்

இப்போது எல்லா இடங்களிலும் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. அந்த தண்ணீரை ஒரு சுத்தமான பாத்திரத்தில் பிடித்து, அதன் மேலே ஒரு மூடி போட்டு பூஜை அறையில் எப்போதும் வைத்திருந்தால், அந்த வீட்டில் திருஷ்டி தோஷங்கள் தங்கவே தங்காது. ஒரு செம்பு சோம்பிலோ அல்லது பித்தளை சோம்பிலோ இந்த தீர்த்தத்தை வைக்கலாம். சில்வர் சொம்பிலும் இந்த தீர்தத்தை வைக்கலாம். சுத்தமான மழை தண்ணீரை நேரடியாக பிடித்து வைக்கும் போது அந்த தண்ணீரில் எளிதாக பாசியும் பிடிக்காது. மூடி போட்டு அப்படியே வைத்துக் கொள்ளலாம்.

தினமும் உங்களுடைய வீட்டில் பூஜை செய்யும் போது மந்திரங்களை உச்சரிக்கும் போது, தெய்வத்தின் பாடல்களை பாடும் போது, சுவாமி பாடல்களை ஒலிக்க வைக்கும் போது அந்த சக்தி எல்லாம் அந்த தீர்த்தத்தில் தன்னகத்தே உள்வாங்கிக் கொள்ளும். பிறகு எப்போதும் உங்களுடைய வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜியை அந்த தண்ணீர் கொடுத்துக் கொண்டே இருக்கும்.

- Advertisement -

இந்த தண்ணீருக்கு மேல் பக்கத்தில் கொஞ்சம் பச்சை கற்பூரம், கொஞ்சம் சில்லறை காசுகளை போட்டு வையுங்கள். வீட்டில் பண கஷ்டம் வராது. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மேலே தட்டு போட்டு மூடி இருக்கிறீர்கள் அல்லவா. அந்த தட்டுக்கு மேலே கொஞ்சம் பச்சை கற்பூரம் கொஞ்சம் சில்லறை காசுகளை ஒரு கிண்ணத்தில் வைக்கலாம். அந்த தண்ணீர் சுத்தமாக இருக்கிறதா என்பதை வீட்டில் இருப்பவர்கள் திறந்து பார்க்கலாம் அதிலும் எந்த ஒரு தவறும் கிடையாது.

இப்போது மழை பெய்வதால் மழை தண்ணீர் உங்களுக்கு சுலபமாக கிடைக்கும். அதை பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து ஒரு சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் மழை பொழியும் அல்லவா. அப்போது பூஜை அறையில் இருக்கும் தண்ணீரை செடி கொடிகளுக்கு ஊற்றிவிட்டு மீண்டும் புதுசாக அந்த தண்ணீரை பிடித்து பூஜை அறையில் வைக்கும் போது நம்முடைய வீட்டில் நிரந்தரமாக கண் திருஷ்டி தங்காமல் இருக்கும். முயற்சி செய்து பாருங்கள். எளிமையான பரிகாரம் தான். ஒரு வீட்டில் மழை தண்ணீரில் இருந்தால் அந்த நீர் கங்கா தீர்த்தத்திற்கு சமமாக சொல்லப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: ஆரோக்கியம் தரும் முருகர் வழிபாடு

திடீரென்று வீட்டில் ஏதோ ஒரு பிரச்சனை தீட்டு வந்துவிட்டது என்றால், இந்த தண்ணீரை கொஞ்சம் எடுத்து சாதாரண தண்ணீரோடு கலந்து மஞ்சள் பொடி, கல்லுப்பு போட்டு வீடு முழுவதும் தெளித்து விட்டாலும் நன்மை தரும். எளிமையான இப்படிப்பட்ட பரிகாரங்கள் நம்முடைய வாழ்க்கையில் பெரிய அளவில் மாற்றத்தை கொண்டுவரும் என்ற இந்த தகவலுடன், இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்