- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபிரச்சினைகளை தீர்க்கும் தேய்பிறை அஷ்டமி

பிரச்சினைகளை தீர்க்கும் தேய்பிறை அஷ்டமி

- Advertisement -

காலங்களுக்கு அதிபதியாக திகழக்கூடியவர் காலபைரவர். நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பலவிதமான பிரச்சனைகளை தீர்த்து சுகபோகமான வாழ்க்கை வாழ்வதற்கு உதவக் கூடிய தெய்வமாக தான் காலபைரவர் திகழ்கிறார். இவர் நம்முடைய பிரச்சனைகளை தீர்ப்பதோடு மட்டுமல்லாமல் மீண்டும் எந்தவித பிரச்சினையும் வராமல் நம்மை பாதுகாக்கும் ஒரு பாதுகாவலராகவும் திகழ்கிறார். அப்படிப்பட்ட காலபைரவரை வழிபாடு செய்வதற்கு உகந்த திதியாக அஷ்டமி திதி திகழ்கிறது. அதிலும் இந்த முறை கோகுலாஷ்டமியுடன் சேர்ந்து வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி நாளன்று கால பைரவரை வீட்டில் எந்த முறையில் வழிபாடு செய்ய நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் தீரும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

கர்ம வினைகளின் அடிப்படையில் பலன்களை தரக்கூடிய சனிஸ்வர பகவானின் குருவாக திகழக்கூடியவர்தான் காலபைரவர். சிவபெருமானின் அவதாரங்களில் மிகவும் முக்கியமான ஒரு அவதாரமாக இவர் திகழ்கிறார். அப்படிப்பட்ட காலபைரவர் தான் அனைத்து சிவாலயங்களிலும் பாதுகாவல் தெய்வமாக வீற்றிருக்கிறார். இந்த காலபைரவரை நாம் நம்முடைய வீட்டில் எளிமையான முறையில் வழிபாடு செய்வதன் மூலம் நமக்கும் காவல் தெய்வமாக நின்று எதிரிகள் மற்றும் பிரச்சனைகளில் இருந்து காப்பாற்றுவார்.

- Advertisement -

ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி தேய்பிறை அஷ்டமி சனிக்கிழமையோடு சேர்ந்து வருகிறது. சனீஸ்வர பகவானின் குருவாக திகழக்கூடிய கால பைரவருக்குரிய திதி சனிக்கிழமை வருவது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அன்றைய நாளில் நாம் காலபைரவரை வழிபாடு செய்வது நம்முடைய வாழ்க்கைக்கு மிகவும் ஒரு அற்புதமான பலனை தரும். அதனால் ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் ஒரு தட்டு அல்லது இலையை வைத்து 8 அகல் விளக்கில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு வடக்கு திசை பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும். இந்த எட்டு தீபங்களும் அஷ்டபைரவர்களை குறிக்கக் கூடியதாக திகழ்கிறது. 8 தீபங்களையும் ஏற்றி வைத்துவிட்டு காலபைரவரின் பின்வரும் இந்த மந்திரத்தை எட்டு முறை உச்சரித்து வழிபாடு செய்ய வேண்டும். இயன்றவர்கள் அன்றைய தினம் முழுவதும் காலபைரவரை நினைத்து விரதம் இருக்கலாம்.

சனிக்கிழமை அன்று ராகு காலமான காலை 9 மணியிலிருந்து 10:30 மணிக்குள் அருகில் பைரவரின் சன்னதி எந்த ஆலயத்தில் இருக்கிறதோ அங்கு சென்று பைரவருக்கு நடக்கக்கூடிய அபிஷேகங்களில் கலந்து கொள்ள வேண்டும். இயன்றவர்கள் அன்றைய தினம் கால பைரவருக்கு எலுமிச்சை தீபம், தேங்காய் தீபம், பூசணி தீபம் என்று தங்களால் எந்த தீபத்தை ஏற்ற முடியுமோ அந்த தீபத்தை ஏற்றி கால பைரவரை வழிபாடு செய்யலாம். அதேபோல் தங்களால் இயன்ற ஏதாவது ஒரு பொருளை நெய்வேதியமாக வைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக தர வேண்டும். இப்படி செய்வதன் மூலம் தங்கள் வாழ்க்கையில் எப்பேர்பட்ட பிரச்சினைகள் வந்து கொண்டிருந்தாலும் தடைகள் வந்து கொண்டிருந்தாலும் அவை அனைத்தும் நீங்கி சிறப்பான வாழ்க்கையை வாழ முடியும்.

- Advertisement -

மந்திரம்

” ஓம் கால காலாய வித்மஹே காலபைரவாய தீமஹி தன்னோ கால பைரவ பிரசோதயாத் “

இதையும் படிக்கலாமே: துன்பங்களை தீர்க்கும் ஆடி கிருத்திகை வழிபாடு

கிருஷ்ணர் அவதரித்த திதியாக அஷ்டமி திதி திகழ்கிறது. அப்படிப்பட்ட அஷ்டமி திதி அன்று நாம் காலபைரவரை மறவாமல் இப்படி வழிபாடு செய்யும்பொழுது காலபைரவரின் அருளால் அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்