தலையெழுத்தை மாற்றும் பிராமி தேவி வழிபாடு

brami devi vazhipadu
- Advertisement -

எந்த நேரத்தில் பிறந்தேனோ தெரியவில்லை என் தலையெழுத்து சரியே இல்லை. பிறந்ததிலிருந்து இந்த நொடி வரை கஷ்டப்பட்டு கொண்டே தான் இருக்கிறேன். எந்தவித சந்தோஷத்தையும் அனுபவிக்கவில்லை. எதற்காக நான் பிறந்தேன்? என் தலையெழுத்து மாறாதா? என்று புலம்புபவர்கள் தங்களுடைய தலையெழுத்தை மாற்றி நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கு வழிப்பட வேண்டிய அம்மனாக திகழ்ந்தவள் தான் பிராமி அம்மன். இந்த அம்மனை நம்முடைய வீட்டில் எந்த முறையில் நாம் வழிபட்டால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய துன்பங்கள் அனைத்தும் இன்பங்களாக மாறும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பிராமி தேவி வழிபாடு

சப்த கன்னிகளில் முதன்மையாக திகழக்கூடியவர் பிராமிதேவி. இவருக்கு மொத்தம் நான்கு தலைகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. சண்டிமுண்டி அசுரர்களை வதம் செய்வதற்காக பிரம்மா, விஷ்ணு, சிவன் மற்றும் முருகப்பெருமாள் போன்ற பல தெய்வங்களின் அம்சங்களை பெற்ற தேவியாக அவதரித்தவள் தான் பிராமி தேவி. பிரம்மனின் மறு அவதாரம் என்று கூட நாம் இவரை கூறலாம். அப்படிப்பட்ட பிராமி தேவியை நாம் வழிபடும் பொழுது நம்முடைய வாழ்க்கையில் இருக்கக் கூடிய பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த அம்மன் மேற்கு பார்த்த திசைக்கு அதிபதியாக திகழ்கிறாள். பிரம்மனின் மறு அவதாரம் என்பதால் பிரம்ம முகூர்த்த வேளையில் இந்த அம்மனை நாம் வழிபடும் பொழுது நமக்கு பல அளப்பரியாத நன்மைகள் ஏற்படும். அதேபோல் மேற்கு திசை பார்த்தவாறு வாசல் அமைந்த வீட்டில் குடியிருப்பவர்கள் அந்த வீட்டில் எந்தவித நன்மைகளும் நடைபெறவில்லை என்று வருத்தப்படும் பட்சத்தில் பிராமி தேவியை வழிபட்டால் அந்த வீட்டில் அனைத்து விதமான நன்மைகளும் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

இப்படி மேற்கு பார்த்த வாசல் இருக்கும் வீட்டுக்காரர்கள் தங்களுடைய நிலை வாசலில் தீபம் ஏற்றும் பொழுது “ஓம் பிராமி தேவியே நமஹ” என்று கூறியவாறு தீபம் ஏற்ற வேண்டும். அப்படி தீபம் ஏற்றும் பட்சத்தில் அவர்களுடைய வீட்டில் பிராமி தேவியின் அருள் என்பது பரிபூரணமாக கிடைக்கும். தலையெழுத்தை மாற்றுவதற்கு பிராமி தேவியை பிரம்ம முகூர்த்த வேளையில் நாம் வழிபட வேண்டும்.

- Advertisement -

பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்து விட்டு வீட்டு பூஜை அறையில் இரண்டு தீபங்களை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு சிறிய தாம்பாள தட்டை எடுத்து அதில் சுத்தமான தண்ணீரை ஊற்றி அதில் மஞ்சள் தூளை நன்றாக கலந்து அந்த தீபத்துக்கு முன்பாக வைத்து விட்டு “ஓம் பிராமி தேவியே நமஹ” என்னும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். இப்படி தினமும் 108 முறை பிராமி தேவியை 48 நாட்கள் வழிபடுபவர்களுக்கு அவர்களுடைய தலை எழுத்து நல்ல விதமாக மாறுவதற்குரிய வழிகள் கிடைக்கும்.

இந்த அம்மனை வழிபடும் பொழுது நெய்வேத்தியமாக கற்கண்டை வைத்து வழிபட வேண்டும். இயன்றவர்கள் சப்த கன்னிகள் இருக்கும் ஆலயத்திற்கு சென்று அங்கு இருக்கக்கூடிய பிராமி தேவிக்கு மஞ்சளால் அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கற்கண்டை பிரசாதமாக தரலாம்.

இதையும் படிக்கலாமே: நினைத்த காரியம் பிரம்மாண்டமாக நடக்க முருகன் வழிபாடு

மிகவும் எளிமையான இந்த பிராமி தேவி வழிபாட்டில் நம்பிக்கை இருப்பவர்கள் முழு மனதுடன் இந்த அம்மனை வழிபட்டு தங்கள் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கி நலமுடன் வாழலாம்.

- Advertisement -