பிரண்டை சாதப்பொடி செய்முறை

pirandai satha podi
- Advertisement -

ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமாக திகழ்கிறது. அப்படிப்பட்ட ஆரோக்கியத்தை பெறுவதற்கு நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஆரோக்கியமான சில பழக்கவழக்கங்களை நாம் கையாள வேண்டும். அதிலும் மிகவும் குறிப்பிடக்கூடிய ஒன்றாக திகழ்வதுதான் ஆரோக்கியமான பொருட்களை உண்பது என்பது. அந்த வகையில் வயதான பிறகு ஏற்படக்கூடிய மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் நீங்குவதற்கு உதவக்கூடிய பொருளாக விளங்குவது தான் பிரண்டை. இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பிரண்டையை வைத்து எப்படி பிரண்டை சாதப் பொடி செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம்.

பிரண்டையை நம்முடைய அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்த ஓட்டம் சீராகும். இதயமும் எலும்பும் பலப்படும். ஈறுகளில் ஏற்படக்கூடிய ரத்தக் கசிவு நீங்கும். வாயு பிடிப்பு அகலும். இரத்தமூலம், வயிற்று வலி, ஜீரண கோளாறுகள் போன்றவை நீங்கும். பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய் பிரச்சனைகள் சரியாகும். ஆஸ்துமா பாதிப்பு குறையும். மேலும் உடல் சுறுசுறுப்பாகவும், ஞாபக சக்தி அதிகரிக்கும். மூளை நரம்புகளும் பலப்படும்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • காய்ந்த பிரண்டை – 1 கப்
  • துவரம் பருப்பு – 1 கப்
  • பாசிப்பருப்பு – 1 கப்
  • உடைத்த கடலை – 1/2 கப்
  • வர மிளகாய் – 6
  • சீரகம் – 2 டீஸ்பூன்
  • பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்
  • எண்ணெய் – 1 டீஸ்பூன்
  • பூண்டு – 10 பல்
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் பிரண்டையை கையில் எண்ணையை தடவிக்கொண்டு அதன் நாறுகளை நீக்கி பொடியாக நறுக்கி வெயிலில் காய வைத்துக் கொள்ள வேண்டும். இலைகள் கிடைக்கும் பட்சத்தில் அந்த இலைகளையும் சேர்த்து வெயிலில் காயவைத்து கொள்ளலாம். இரண்டிலிருந்து மூன்று நாட்கள் நன்றாக காய வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பூண்டை சேர்த்து நன்றாக சிவக்க வறுத்துக்கொள்ள வேண்டும். நன்றாக சிவந்த பிறகு பூண்டு எடுத்து ஒரு தட்டில் மாற்றிவிட்டு காய வைத்திருக்கும் பிரண்டையை அதே கடாயில் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். இதுவும் லேசாக சிவந்த பிறகு எடுத்து தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக துவரம் பருப்பை போட்டு அதையும் சிவக்க வறுத்து தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக பாசிப்பருப்பையும் கடாயில் போட்டு நன்றாக சிவக்க வறுத்து அதையும் எடுத்து தட்டில் மாற்றிக் கொள்ள வேண்டும். வர மிளகாயை கடாயில் போட்டு சிவக்க வறுத்து அதையும் எடுத்து தட்டில் மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும். உடைத்த கடலையும் லேசாக வறுத்து அதையும் தட்டில் மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

சீரகத்தை கடாயில் போட்டு அது பொறிந்ததும் அதையும் எடுத்து தட்டில் மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும். உப்பை போட்டு உப்பு சூடானதும் அடுப்பை அணைத்துவிட்டு அதில் பெருங்காயத்தூளை சேர்த்து இரண்டு கிண்டு கிண்டி அதையும் தட்டில் மாற்றிக் கொள்ள வேண்டும். இவை அனைத்தும் நன்றாக ஆரிய பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிரண்டை சாதப்படி தயாராகி விட்டது.

- Advertisement -

சிறு குழந்தைகளுக்கும் சரி பெரியவர்களுக்கும் சரி மதிய நேரத்தில் சுடச்சுட சாதத்தை போட்டு அதில் இந்த பிரண்டை சாத பொடியையும் சேர்த்து நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி சூடாகப் பிணைந்து சாப்பிட சொல்ல வேண்டும். இப்படி செய்வதன் மூலம் அவர்களின் உடலுக்கு தேவையான அனைத்து விதமான நன்மைகளும் இந்த பிரண்டையின் மூலம் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: பஞ்சாபி ஸ்டைல் மூலி பூரி செய்முறை

மிகவும் எளிமையாக செய்யக்கூடிய இந்த பிரண்டை சாத பொடியை பயன்படுத்தினால் நம் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் பிரண்டையால் ஏற்படக்கூடிய அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.

- Advertisement -