பஞ்சாபி ஸ்டைல் மூலி பூரி செய்முறை

radish poori
- Advertisement -

டிபன் வகையில் எப்பொழுதுமே பூரி கொஞ்சம் ஸ்பெஷலான உணவு தான். ஏனென்றால் பெரும்பாலும் இட்லி, தோசை தான் அடிக்கடி செய்வோம். சப்பாத்தியும் இன்று அதிக அளவு செய்யக் கூடிய ஒரு உணவாக மாறி விட்டது. ஆனால் பூரி, பரோட்டா போன்ற உணவுகள் எப்போதாவது தான் செய்வோம். அதிலும் இது போல ஸ்பெஷலாக செய்தால் அது இன்னும் ஸ்பெஷல் தான் இருக்கும்.

அப்படி என்ன இந்த பூரியில் ஸ்பெஷல் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. இந்த பூரியில் சேர்க்கக் கூடிய காய் தான் இதோட ஸ்பெஷல். வாங்க இந்த பஞ்சாபி ஸ்டைல் மூலி பூரியை எந்த காய் வச்சு எப்படி செய்யறதுன்னு இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிஞ்சுக்கலாம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

முள்ளங்கி – 2
கோதுமை மாவு – 1 கப்,
ரவை – 1 டேபிள் ஸ்பூன்,
ஓமம் – 1/4 டீஸ்பூன்,
கஸ்தூரி மேத்தி – 1/2 ஸ்பூன்,
உப்பு – 1/4 ஸ்பூன்,
எண்ணெய் – பூரி பொறித்தெடுக்க தேவையான அளவு

செய்முறை

முள்ளங்கியை முதலில் தோள் சீவி விட்டு காய் சீவும் சீவலில் துருவி கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த முள்ளங்கியை பிழிந்தால் அதிலிருந்து நிறைய சாறு கிடைக்கும். அதை தனியாக ஒரு பவுலில் எடுத்து வைத்து விடுங்கள். இப்பொழுது பிழிந்த முள்ளங்கியை ஒரு பௌலில் போட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

முள்ளங்கி போட்ட அதே பவுலில் கோதுமை மாவு, ரவை, உப்பு, ஓமம், கஸ்தூரி மேத்தி, ஒரு ஸ்பூன் எண்ணெய் அனைத்தையும் சேர்த்து மாவை நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். தண்ணீர் தேவைப்பட்டால் நாம் முள்ளங்கி பிடுங்க தண்ணீரை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதுவே சரியான அளவாக இருக்கும்.

மாவை நன்றாக பிசைந்த பிறகு மேலே இன்னும் கொஞ்சம் எண்ணெய் தேய்த்து பத்து நிமிடம் வரை மாவில் நன்றாக மூடி வைத்து விடுங்கள் இப்பொழுது மாவு மிருவாக பூரி செய்ய தேவையான பதத்திற்கு கிடைத்து விடும். அதன் பிறகு மாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டிக் பூரிகளாக திரட்டி கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் உருட்டி வைத்திருக்க உருண்டைகளை எடுத்து பூரிகளை ஒவ்வொன்றாக தட்டி பொரித்து எடுங்கள். சுவையான பஞ்சாபி ஸ்டைல் மூலி பூரி தயார். இதற்கு சைட் டிஷ் கூட எதுவும் தேவையில்லை அப்படியே சாப்பிடலாம்.

இதையும் படிக்கலாமே: சென்னை ரத்னா கஃபே இட்லி சாம்பார்

பூரி எல்லாம் அதிக எண்ணெய் சேர்த்த பொருள் சாப்பிட முடியாது என்பவர்கள் இதே மாவை பரோட்டா போல செய்து சாப்பிடலாம். இதுவுமே நன்றாக தான் இருக்கும். நீங்களும் ஒருமுறை இது போல செய்து சாப்பிட்டு பாருங்க அடிக்கடி செய்வீங்க.

- Advertisement -