செய்த பாவங்கள் தீர, பலகோடி புண்ணியங்களை சேர்க்க, உங்கள் ஜென்ம நட்சத்திரத்தன்று இதை மட்டும் செய்யுங்கள் போதும்.

astro

வருடத்திற்கு ஒருநாள் நாம் பிறந்த ஜென்ம நட்சத்திரம் என்பது வரும். நாம் அனைவருமே நாம் பிறந்த நாளை, அந்த மாதத்தில் வரும் தேதியை வைத்து தான் கொண்டாடுகின்றோம். ஆனால், அது தவறு. நாம் எந்த ஜென்ம நட்சத்திரத்தில், இந்த பூமியில் பிறந்தோமோ அந்த தினத்தில் தான் பிறந்த நாளை கொண்டாட வேண்டும். அதுதான் சரியான முறை. சரி, இந்த ஜென்ம நட்சத்திரம் என்பது ஒரு வருடத்திற்கு ஒருமுறை வரும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். இதேபோல் மாதம் ஒருமுறை நான் பிறந்த நட்சத்திரமும் கட்டாயம் வரும்.

27-natchathram

நாம் பிறந்த அந்த நட்சத்திர தினத்தில் நம்முடைய வாழ்க்கையில் எதையெல்லாம் தொடங்கினால் அது நமக்கு பல மடங்கு வெற்றிகளை தேடித் தரும் என்பதை பற்றியும், அந்த ஜென்ம நட்சத்திர தினத்தில் நாம் எதை செய்தால் அது நமக்கு பல கோடி புண்ணியத்தை தேடித்தரும் என்பதைப் பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பொதுவாகவே உங்களுடைய வாழ்க்கையில் படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் எதுவாக இருந்தாலும் அதை ஜென்ம நட்சத்திரத்தன்று தொடங்கலாம். அந்த படிப்பு உங்களுக்கு மேலும் மேலும் வெற்றியைத் தேடித் தரும். அடுத்தபடியாக சொத்து சம்பந்தப்பட்ட விவகாரங்கள் ஏதேனும் வில்லங்கமாக இருந்தால் அதை இந்த ஜென்ம நட்சத்திரத்தன்று சரி செய்ய முயற்சிக்கலாம்.

book

நம்மிடம் இருக்கும் சொத்துக்களை விற்பது சொத்துக்களை வாங்குவது போன்ற விஷயங்களை ஜென்ம நட்சத்திரத்தன்று செய்வது மிகவும் நல்லது. அடுத்தபடியாக உங்களுடைய ஜென்ம நட்சத்திரத்தன்று, குறிப்பாக நீங்கள் பிறந்த மாதத்தில் வரக்கூடிய ஜென்ம நட்சத்திரத்தன்று அன்னதானம் செய்வது உங்களுக்கு பல கோடி புண்ணியத்தை தேடித்தரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

ஒருவர் வாழ்க்கையில் தீராத கஷ்டத்தை அனுபவித்து கொண்டிருக்கும் சமயத்தில் அவர் ஆன்மீக ரீதியான செயல்பாட்டினை, ஆன்மீக ரீதியான காரியங்களை இந்த ஜென்ம நட்சத்திரத்தன்று செய்யலாம். கோவிலில் இறைவனுக்கு அபிஷேகம் செய்வது, கோவிலுக்கு சென்று அன்னதானம் செய்வது, வீட்டில் ஹோமம் வளர்த்திக் கொள்வது, போன்ற சுப காரியங்களை இந்த ஜென்ம நட்சத்திரத்தன்று செய்தால் அவருக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் சீக்கிரமே படிப்படியாக குறையத் தொடங்கிவிடும்.

annathanam

சாஸ்திர சம்பிரதாயங்களில் சொல்லப்பட்டுள்ள குறிப்புகள் என்றுமே பொய்யானது கிடையாது. உங்களுக்கு மாதந்தோறும் வரக்கூடிய ஜென்ம நட்சத்திரமாக இருந்தாலும் சரி, அல்லது வருடத்தில் ஒருநாள் வரக்கூடிய ஜென்ம நட்சத்திரத்தன்றும் சரி, உங்களால் இயன்ற உதவியை அடுத்தவர்களுக்கு செய்து பாருங்கள். உங்களுடைய வாழ்க்கையில் நிச்சயம் நல்ல முன்னேற்றங்கள் தெரியும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.